பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பதவியிலிருந்து விலகுகிறார் இந்திரா நூயி

பட மூலாதாரம், Getty Images
பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வரும் இந்திரா நூயி அப்பதவியிலிருந்து விலகவுள்ளார்.
தொழில்துறையில் உலகின் முக்கிய பெண் தலைவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ள இந்திரா நூயி, போர்ப்ஸ் நாளிதழின் உலகின் சக்திமிக்க 100 பெண்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை (2011இல் 11வது இடம்) வகித்து வருகிறார்.
பெப்சிகோ தலைவராக கடந்த 2006ஆம் ஆண்டு இந்திரா நூயி பதவியேற்றதிலிருந்து அந்நிறுவன பங்குகளின் மதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது.
62 வயதாகும் இந்திரா நூயி பெப்சிகோ நிறுவனத்தில் 24 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உள்ள ரமோன் லகர்ட்டா அடுத்த தலைமை செயலதிகாரியாக பதவியேற்பார் என்று தெரிகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இந்தியாவில் வளர்ந்த நான், பெப்சிகோ போன்ற மிகப் பெரிய நிறுவனத்தை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பை பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்ட தொடர் பதிவுகளில் இந்தியா நூயி தெரிவித்துள்ளார்.
பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேறுவது குறித்து கலந்த மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பெப்சிகோவில் இந்திரா நூயின் பயணம்
2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பதவியேற்பதற்கு முன்னர், இந்திரா நூயி அந்நிறுவனத்தில் தலைமை நிதியதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

"குறுகியகால நோக்கத்தில் மட்டுமல்லாமல், நீண்டகால நோக்கத்தில் அவர் வலுவான மற்றும் நிலையான நிதி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு தலைமை செயலதிகாரியாக, ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தின் வருமானத்தை பில்லியன் டாலர்கள் அதிகரித்து, மொத்தத்தில் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை 80 சதவீதம் அதிகரித்து காட்டினார்" என்று பெப்சிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பெப்சிகோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், அந்நிறுவனத்தின் அடுத்த தலைமை செயலதிகாரியாக 54 வயதாகும் ரமோன் லகர்ட்டா ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வரும் அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்பார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 வருடங்களாக பெப்சிகோ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் லகர்ட்டா, அந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகள், திட்டமிடல், கொள்கை உருவாக்கம் மற்றும் அரசாங்க விவகாரங்கள் போன்றவற்றை நிர்வகித்துள்ளார்.
ஆனால், பெப்சிகோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் தலைவராக 2019ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்திரா நூயி பதவி வகிப்பார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்