ஆப்கான் தீவிரவாதத் தாக்குதல்களில் 2 போலீசார் பலி

ஆப்கன் படை

பட மூலாதாரம், SHAH MARAI/AFP/Getty Images

ஆஃப்கன் தலைநகர் காபூலின் வட பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் உள்துறை அமைச்சர் அகமத் பார்மாக் உறுதி செய்துள்ளார்.

காவல்துறையினர் வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலோடு இது தொடங்கியது. இந்த வளாகத்தில் நுழைத்த இரண்டு துப்பாக்கிதாரிகள், தாங்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு படையினரோடு சண்டையிட்டனர்.

முதல் தாக்குதலோடு தொடர்புடையத் தாக்குதலாக தோன்றுகின்ற இரண்டாவது தாக்குதல், கடுமையாக பாதுகாக்கப்பட்டுள்ள வணிக மாவட்டத்திலுள்ள வேறொரு காவல்துறையினரின் வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.

வரைபடம்

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னால், தற்கொலை தாக்குதல்தாரிகள் தாங்கள் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.

தாக்குதல்தாரிகளில் 2 அல்லது 3 பேர் இன்னும் உயிரோடு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தாலிபன்கள் நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துப்பாக்கிதாரிகள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகள் இணைந்து இன்றைய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபார்யாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு படைத் தளத்தில், திங்களன்று, தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 25 காவல் படையினர் உயிரிழந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

அங்கிருந்து 31 பேரை தாலிபன்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: