2 மாதத்தில் இரண்டாவது முறையாக சீன அதிபரை சந்தித்த கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், JUNG YEON-JE/AFP/Getty Images
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக சீனா பயணம் மேற்கொண்டுள்ளார் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன். முதல் சந்தர்ப்பத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த கிம், தமது இரண்டாவது பயணத்திலும் ஷி ஜின்பிங்கை சந்தித்து உரையாடியுள்ளார்.
சீனாவின் வடக்கு நகரான டேலியனில் இரண்டு நாட்கள் ஒன்றாக இருந்த இரு தலைவர்களும் கடலையொட்டிய பகுதிகளில் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"படிப்படியாக மற்றும் ஒத்திசைந்த" நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அணு ஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பம் என்ற இலக்கை அடைய முடியும் என்று நம்புவதாக கிம் கூறியதாக, சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தென்கொரிய தலைவருடன் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பிற்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங்-உன் இடையேயான சந்திப்பு திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








