மண்ணில் புதைந்த வீடுகள், தோண்டத்தோண்ட உடல்கள் - வயநாடு நிலச்சரிவின் கோரக் காட்சிகள்

நிலச்சரிவால் நிலைகுலைந்து போன சூரல்மலை

பட மூலாதாரம், AFP PHOTO/India's National Disaster Response Force

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வயநாடு நிலச்சரிவின் கோரத்தை விவரிக்கும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், DEFENCE PRO

படக்குறிப்பு, நிலச்சரிவால் நிலைகுலைந்து போன சூரல்மலை
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், DEFENCE PRO

படக்குறிப்பு, சூரல்மலையில் பள்ளி அருகே நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்தும் படம்.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, சூரல்மலை கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி சிதைந்து போன ஜீப்.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, சூரல்மலையில் நிலச்சரிவால் சேதமடைந்த வீடு
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், DEFENCE PRO

படக்குறிப்பு, சூரல்மலை கிராமத்தில் மண்ணில் புதைந்து போன வீடுகளுக்கு நடுவே மனித உயிர்களைத் தேடும் மீட்புக் குழுவினர்
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், DEFENCE PRO

படக்குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மீட்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் வயநாடு புறப்பட்ட காட்சி.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, சூரல்மலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்ட காட்சி.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, சூரல்மலையில் மீட்கப்பட்ட ஒருவரை ராணுவ வீரர் ஒருவர் முதுகில் சுமந்து வருகிறார்.
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம், DEFENCE PRO

படக்குறிப்பு, சூரல்மலை அருகே கரைபுரண்டோடும் ஆற்றுவெள்ளத்தில் கயிறு மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, சூரல்மலை அருகே ஆற்று வெள்ள கரைபுரண்டு ஓடும் இடத்தில் மீட்புப் பணியில் ஈடபட்டுள்ள வீரர்
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் (28)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)