பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ் - இந்தி ரசிகர்கள் தந்த வரவேற்பில் என்ன வித்தியாசம்?

பொன்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சி

பட மூலாதாரம், RAJWANSH

    • எழுதியவர், கவியரசு வி
    • பதவி, பிபிசி தமிழ்

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க, தன் தந்தையும் நடிகருமான சிவகுமார் அறிவுரையோ பயிற்சியோ வழங்கவில்லை என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். தென்னிந்திய ரசிகர்களும் ஹிந்தி ரசிகர்களும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றிற்கு தந்த வரவேற்பில் வித்தியாசம் இருப்பதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

லைக்கா - மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.

இதற்காக, நாடு முழுவதும் படக்குழுவினர் நடத்தும் புரோமொஷன் நிகழ்ச்சிகளில் அதில் நடித்துள்ள நடிகர், நடிகையர் கலந்து கொண்டு வருகின்றனர். டெல்லியில் அவ்வாறான நிகழ்ச்சி ஒன்றில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

"மூன்று தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு" - நடிகர் விக்ரம்

மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர், நடிகையர் பதிலளித்தனர்.

பாகம் ஒன்றிற்கு ஹிந்தி ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து பேசிய நடிகர் விக்ரம், “ பொன்னியின் செல்வம் என்ற காவியத்தை நாங்கள் உருவாக்க தயாராகும்போதே எங்களுக்கு தெரியும் இதை தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று. பாகம் ஒன்று வெளியானபோது, நடக்க கூட முடியாத எத்தனையோ முதியோர்கள் தங்கள் குடும்பத்தார் உதவியுடன் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வந்தனர். காரணம் இது தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால கனவு; மூன்று தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு” என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஹிந்தி ரசிகர்கள் அளித்த வரவேற்பு

தொடர்ந்து பேசிய விக்ரம், “ஹிந்தி ரசிகர்களுக்கு இந்த படத்தை புரிந்து கொள்வது அத்தனை எளிதாக இருந்திருக்காது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட உங்களுக்கு உச்சரிக்க சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் கடந்து பாகம் ஒன்றிற்கு நீங்கள் தந்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் போடப்பட்ட முடிச்சுகளுக்கு விடை காண நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. பாகம் ஒன்று ஒரு அறிமுகம் மட்டுமே. அத்தனை முக்கிய திருப்பங்களும் பாகம் இரண்டில் உங்களுக்காக காத்திருக்கின்றன” என்று கூறினார்.

“ இயக்குனர் மணிரத்னம் ஒருவரே படத்தில் எங்களுக்கு இருந்த இணைப்புப்புள்ளி” என்று பேசிய நடிகை திரிஷா, “ நாவல்களை படித்தவர்களையும் படிக்காதவர்களையும் இப்படம் முழுமையாக சென்றடைய அவர் எடுத்த முயற்சி அளப்பரியது” என்று கூறினார்.

“பொன்னியின் செல்வன் தூண்களே பெண்கள்தான்”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அத்தனை பெரிய ஆண் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை ஐஷ்வர்யா லட்சுமி, “பொன்னியின் செல்வம் கதையின் தூண்களே பெண்கள் தான்” என்று கூறினார்.

“கட்டளை இடுபவர்களாக, முடிவெடுப்பவர்களாக, வழித்துணைகளாக கதை முழுக்க பெண் கதாபாத்திரங்களின் ஆளுமை தான் ஓங்கியிருக்கும். ஆண் கதாபாத்திரங்களுமே அதை ஒப்புக்கொள்வார்கள்” என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விளக்கியதை நடிகர்களும் கலகலப்பாக ஆமோதித்தார்கள்.

பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி

பட மூலாதாரம், RAJWANSH

தந்தை சிவகுமார் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி ருசிகர பதில்

கடந்த முறை டெல்லி வந்திருந்த போது புதிதாக தோன்றிய இடங்களும் மனிதர்களும் இப்போது மிகவும் பழக்கமானதாக தோன்றுவதாக கூறி பேச தொடங்கினார் நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தன் தந்தை சிவகுமாரிடம் பயிற்சி எதாவது எடுத்து கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, “நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்தபோது, வந்தியதேவன் கதாபாத்திரத்தில் என் தந்தை நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் எனக்கு எந்த பயிற்சியோ அறிவுரையோ வழங்கவில்லை. மாறாக கை நிறைய வரலாற்றுப் புத்தகங்களை அளித்தார். கதாபாத்திரங்களைப் படித்து உள்வாங்கிக்கொள்ள சொன்னார். மற்றதெல்லாம் தானாக நடந்தது” என்றார்.

“ஹிந்தி கற்றுக்கொள்கிறேன்” - நடிகர் ஜெயம் ரவி

பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு ஹிந்தியிலே பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, “எனக்கு ஹிந்தி சரளமாக தெரியாது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச கற்றுக்கொள்கிறேன். தவறு எதுவும் செய்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு பதிலளிக்க தொடங்கினார்.

படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதைத் தடுக்க ஹிந்தி சினிமா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பேசிய ஜெயம் ரவி, ”தயாரிப்பு நிறுவனங்கள் படம் வெளியாகி சில வாரங்களில் தொலைக்காட்சிகள் மற்றும் OTT-களில் படத்தை வெளியிட ஒப்புக்கொள்வதால் ரசிகர்கள் திருட்டுதனாமாக வெளியாகும் பிரதிகளை பார்ப்பது கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஹிந்தி சினிமா எடுத்து வரும் இது போன்ற முயற்சிகள் சினிமா வணிகத்துக்கு ஆரோக்கியமானது” என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஜெயம் ரவி, திரிஷா இருவரும் ட்விட்டரில் ப்ளூ டிக்கை இழந்தது ஏன்?

பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ஜெயம் ரவியும் நடிகை திரிஷாவும் தங்கள் டிவிட்டர் கணக்கின் பெயர்களை தாங்கள் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களாக மாற்றியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களுடைய கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, “ டிவிட்டர் விதிமுறைகளின்படி உறுதி படுத்தப்பட்ட பெயரல்லாத காரணத்தால் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கணக்கில் இருந்த அருள்மொழி வர்மனின் படம் என் முக சாயலில் இல்லை என்று நினைத்து நீக்கியிருப்பார்கள்” என்று நகைச்சுவையாக கூறினார்.

தொடர்ந்து அது குறித்து பேசிய நடிகை திரிஷா நீக்கப்பட்ட ப்ளூ டிக்கை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

“பொன்னியின் செல்வன் எனக்கு ஒரு நல்வரவு”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சோபிதா துலிபாலா பேசியபோது, “ ஹிந்தி நடிகையான எனக்கு தமிழ் திரையுலகில் நுழைய பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்வரவு அளித்தது. தமிழ் ரசிகர்கள் அன்பை வாரி வழங்குபவர்கள். வானதி கதாபாத்திரத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கும், எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஹிந்தி உட்பட அனைத்து மொழி ரசிகர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக பாகம் ஒன்றின் கதைசுருக்கம் பாகம் இரண்டின் முதல் ஐந்து நிமிடங்களில் விளக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: