மிஸ் இந்தியா நந்தினி: சிறிய நகரத்தில் விவசாயி மகளாக பிறந்து சாதித்தது எப்படி?

- எழுதியவர், மோஹர் சிங் மீனா
- பதவி, பிபிசி இந்திக்காக
”நந்தினி பத்தாம் வகுப்பில் இருந்தபோது, ’அம்மா, ஒருமுறையாவது மிஸ் இந்தியா மேடைக்குப் போக விரும்புகிறேன்’ என்று சொன்னார்.”
"அவர் படிப்பிலும் தன்னை நிரூபித்தார். அம்மா, நான் படிப்பிலும் நன்றாகவே இருக்கிறேன். நான் அங்கும் (மிஸ் இந்தியா மேடை) செல்ல விரும்புகிறேன் என்று கூறினார்."
ஃபெமினா மிஸ் இந்தியா-2023 பட்டத்தை வென்ற நந்தினி குப்தாவின் தாயார் ரேகா குப்தா, தனது மகளின் கனவை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். மகளின் அந்தக்கனவு இப்போது நனவாகியுள்ளது என்று அவர் பெருமிதப்படுகிறார்.
ரேகா குப்தா தற்போது நந்தினியுடன் மும்பையில் இருக்கிறார்.
"நந்தினியின் பெயர் மிஸ் இந்தியா ஆக அறிவிக்கப்பட்டபோது, என்னால் அதை நம்ப முடியவில்லை. நான் வாயடைத்துப் போய்விட்டேன்," என்று தொலைபேசி உரையாடலில் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கோட்டாவிலிருந்து மிஸ் இந்தியா வரை

பட மூலாதாரம், Nandiniii Instagram
நந்தினி முதன்முறையிலேயே மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். 59வது மிஸ் இந்தியாவாக நந்தினி தேர்வாகியுள்ளார்.
நந்தினியின் குடும்பம் கோட்டாவின் சப்ஜி மண்டி பகுதியில் வசித்து வருகிறது. கோட்டாவில் உள்ள தனியார் பள்ளியில் தமது பள்ளிப்படிப்பை நந்தினி முடித்தார்.
அதன் பிறகு, மும்பை லாலா லஜ்பத் ராய் கல்லூரியில் மேலாண்மைப் படிப்பில் சேர்ந்தார்.
கடந்த ஒரு வருடமாக மும்பையில் படிப்புடன் கூடவே நந்தினி, மிஸ் இந்தியா மேடையை எட்டும் கனவு பற்றியும் சிந்தித்து வந்தார்.
நந்தினியின் தந்தை சுமித் குப்தா பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "நந்தினியின் பெயர் அறிவிக்கப்பட்டதும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். பின்னர் நாங்கள் மேடையை பார்க்கவே இல்லை" என்றார்.
"நந்தினிக்கு சிறுவயதில் இருந்தே 'கேட் வாக்' செய்யும் பழக்கம் உண்டு. புது டிரஸ் வாங்கும்போது அதை அணிந்து கொண்டு கேட் வாக் செய்து எங்களிடம் எப்படி இருக்கிறது என்று கேட்பார்" என்று அவர் தெரிவித்தார்.
"சிறுவயதில் நந்தினி ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பார். வளர்ந்தவுடன் சர்வதேச மாடல்களால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்பற்றி வந்தார்," என்று நந்தினியின் தாயார் ரேகா குப்தா குறிப்பிட்டார்.
"பத்தாம் வகுப்பு படிக்கும் போது, நந்தினி என்னிடம் மிஸ் இந்தியா மேடைக்கு நான் போக வேண்டும் என்று சொன்னார். உனக்கு அதற்கு வயதாக வில்லை என்று நான் சொன்னேன். ஆனால், நந்தினி படிப்பில் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவருக்கு 18 வயதாகும் போது, "உன் ஆசைப்படி நீ 'மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொள்," என்று நாங்கள் சொன்னோம்,” என்கிறார் அவர்.
”பிப்ரவரி 11 ஆம் தேதி 'மிஸ் ராஜஸ்தான்' ஆக நந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். ஒரு சிறிய நகர பெண் இவ்வளவு பெரிய சாதனை படைத்திருப்பதை எங்களால் நம்ப முடியவில்லை. 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு ஃபெமினா அவரை தயார்படுத்தும். சில நாட்களுக்குப் பிறகு, அவர் உலக அழகி போட்டியில் இணைவார்,” என்று சுமித் குப்தா மேலும் கூறினார்.
படிப்பில் முதலிடம்
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 1
பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பிலும் நந்தினி குடும்பத்தை ஏமாற்றியதில்லை.
"கோட்டா ஸ்டேஷன் அருகே உள்ள செயின்ட் பால் பள்ளியில் நந்தினி படித்தார். 10வது வகுப்பில் 90 சதவிகிதமும், 12 ஆம் வகுப்பில் வணிகவியலில் 92 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றார்,” என்று சுமித் குப்தா கூறினார்.
"நந்தினி உயர்கல்விக்காக மும்பை ஹாஜி அலி பகுதியில் உள்ள லாலா லஜ்பத் ராய் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். அவர் இங்கு மேலாண்மைப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். முதல் ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் எடுத்துள்ளார்," என்று அவர் குறிப்பிட்டார்.
" ஃபெமினா மிஸ் இந்தியாவுக்காக இரண்டாம் ஆண்டு தேர்வை அவர் இந்த முறை கொடுக்கவில்லை. மார்ச் மாதத்திலேயே 45 நாட்கள் மணிப்பூர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இந்தப்போட்டிக்குப்பிறகு இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத நந்தினியை கல்லூரி அனுமதி அளித்துள்ளது."
"நந்தினியின் படிப்பு தொடரும்" என்று நந்தினியின் தாய் ரேகா குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
”படிப்புதான் முதலில். அதன்பிறகு மேலாண்மையில் அவர் முதுகலைப் பட்டம் பெற வேண்டும்’’ என்கிறார் சுமித் குப்தா.
நந்தினி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 2
நந்தினி 2003 ஆம் ஆண்டு பிறந்தார். நந்தினியின் தங்கை அனன்யா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். தாய் ரேகா குப்தா ஒரு இல்லத்தரசி மற்றும் 56 வயதான தந்தை சுமித் குப்தா விவசாயம் செய்கிறார்.
"எங்களிடம் 175 பிகா நிலம் உள்ளது. என் தந்தை 2000வது ஆண்டு இறந்துவிட்டார். அதனால் நான் தான் விவசாயத்தை கவனித்து வருகிறேன்,” என்று சுமித் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நானும் என் தம்பியும் விவசாயம் செய்கிறோம். அண்ணன் டாக்டராக இருந்து ஓய்வு பெற்றவர்."
"விவசாயத்துடன் சேர்த்து நான் முன்பு மாசு ஆலோசகராக வேலை செய்தேன். தண்ணீர் பரிசோதனை, சுற்றுச்சூழல் தணிக்கை உட்பட பல பணிகளை செய்தேன்,” என்று அவர் கூறினார்.
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகு முழு நேர விவசாயத்தில் இறங்கி விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நந்தினியின் இயல்பு எப்படி?
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 3
"நந்தினி எல்லோருடனும் மிகவும் நட்பாக பழகுவார். வயல்களுக்குச் செல்லும்போது அறுவடை செய்பவர்களுடன் மிகவும் சகஜமாக பேசிப்பழகுவார். அடிக்கடி வயல்களுக்குச் செல்வார்," என்று சுமித் குப்தா விவரிக்கிறார்.
"நந்தினிக்கு புகைப்படம் எடுப்பதில் விருப்பம் அதிகம். மக்களுக்கு உதவ வேண்டும், ஏழைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைப்பார்,” என்று ரேகா குப்தா கூறினார்.
"நந்தினி எப்போதும் சாக்லேட் மற்றும் பிஸ்கட்களை தன் கைப்பையில் வைத்திருப்பார். யாராவது பிச்சை கேட்க வந்தால் சாக்லேட் அல்லது பிஸ்கெட்டை கொடுப்பார். ஒரு நாள் நாங்கள் கோட்டாவில் பயணம் செய்தபோது ஒரு பிச்சைக்காரர் வந்தார். அன்று நந்தினியின் கைப்பையில் சாக்லேட்டும் பிஸ்கட்டும் இருக்கவில்லை. "பணம் கொடு” என்று நான் சொன்னேன். நந்தினி பணம் தர மறுத்து விட்டார். ‘‘அம்மா, பணம் கொடுத்து நாம்தான் அவர்களை கெடுக்கிறோம்” என்று சொல்லிவிட்டார்.”
ஃபெமினா மிஸ் இந்தியா 2023 பட்டத்தை வென்றதிலிருந்து, அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன.
ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேலாட் உட்பட நாடு முழுவதும் இருந்து நந்தினிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 4
நந்தினியின் தந்தை சுமித் குப்தாவும் அவரது தங்கை அனன்யாவும் தற்போது மும்பை மலாடில் உள்ளனர். அதேசமயம் அவரது தாயார் ரேகா, நந்தினியுடன் பாந்த்ராவில் இருக்கிறார்.
"நான் நந்தினியுடன் இருக்கிறேன். என்றாலும்கூட, நந்தினியின் எல்லா நிகழ்ச்சிகளையும் ஃபெமினா ஏற்பாட்டுக்குழுதான் கவனித்து வருகிறது" என்று கூறினார்.
நந்தினி கோட்டாவுக்கு வருவதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவரது தந்தை சுமித் குப்தா, "ஃபெமினா மிஸ் இந்தியா ஹோம் சிட்டி (கோட்டா) வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவோம். இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் இருக்கும். அடுத்த சில நாட்களில் கோட்டாவுக்கு அவர் வரும் தேதி முடிவு செய்யப்படும்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












