காமனெயி கொல்லப்பட்ட பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட செய்தியை சில இரானியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று இரவு பல நகரங்களில் மக்கள் கொண்டாடியதாக வெளியான வீடியோக்களை பிபிசி பெர்சியன் சரிபார்த்தது.

இன்று காலை, தெருக்களில் நடக்கும் பெரும்பாலானவை உச்ச தலைவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அரசாங்க சார்பு நிகழ்வுகளாகத் தெரிகிறது என்று பிபிசி பெர்சியன் தெரிவித்துள்ளது. இரானில் இன்னும் அதிகாலை நேரம் தான், அது பிற்பகலில் மாறக்கூடும்.

மத்திய இரானில் உள்ள இஸ்ஃபஹானின் தெருக்களில் உள்ள காட்சி மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் ஹாரன்களை அடித்து ஆரவாரம் செய்வதை காட்டுகின்றன.

இரவு வானத்தில் பட்டாசுகள் வெடிக்கும்போது, ​​நெருப்பைச் சுற்றி மக்கள் கூடிவருவதை மற்றொரு வீடியோ காட்டுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பல குடும்பங்களும் தெருக்களிலும் வீடுகளிலும் கொண்டாடினர்.

டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜிலும் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

டெஹ்ரான் தெருக்களில் மக்கள் துக்கத்தில் இருப்பதையும், சிலர் காமனெயி புகைப்படங்களை வைத்திருப்பதையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள படங்கள் காட்டுகின்றன.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், IRINN

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பல ஈரானிய அரசு ஊடக தொலைக்காட்சி சேனல்கள் காமனெயி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தின.
காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Mamlekate/X

படக்குறிப்பு, இரானின் மத்திய நகரமான கஜாரில் எடுக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளதைப் போல, சனிக்கிழமை பிற்பகுதியில், சில இடங்களில் இரானிய உச்ச தலைவர் காமனெயி மரணத்தை சிலர் கூடி கொண்டாடியதைக் காண முடிந்தது.

டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன.

சனிக்கிழமை இரானிய தலைநகரம் டஜன்கணக்கான கொடிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொண்டது. இரான் அதிஉயர் தலைவர் அலி காமனெயி மரணத்திற்குப் பிறகும் தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் பல இலக்குகளைத் தாக்கத் தொடங்கி 24 மணிநேரம் நெருங்கி வரும் நிலையில், இரானில் என்ன நடக்கிறது என்பதை காட்டும் புகைப்படங்களின் தொகுப்பைப் பார்க்கலாம்.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், SUPPLIED

படக்குறிப்பு, டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன.
காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் தலைநகர் டெஹ்ரானில் புகை மூட்டம் எழுவதைக் காணலாம்.
காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடும் காட்சி.
காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல இரானியர்கள் தலைநகரிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர், தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுவதைக் காண முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு