பொன்னியின் செல்வன், ஆதித்த கரிகாலன், வந்திய தேவன் - மூவரில் நடிகை திரிஷாவுக்கு யாரைப் பிடிக்கும்?

பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி

பொன்னியின் செல்வன்-2 படத்தில் எனக்கு பிடித்த இரண்டு வசனங்கள் இல்லை என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். ஆதித்ய கரிகாலன், பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன் ஆகிய மூவரில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு நடிகை திரிஷா ருசிகரமான பதிலை அளித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் விளம்பர நிகழ்வு நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்திக், அவரது முதல் படமான பருத்திவீரன் படத்தில் வரும் என்ன மாமா சவுக்கியமா என்ற வசனத்தைப் பேசி கோவை மக்களிடம் நலம் விசாரித்தார்.

"ஆதித்த கரிகாலன் என்கிற எரிமலை வெடிப்பதை பார்க்கப் போகிறோம்"

"நம்ம ஊருக்கு வந்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும். பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் பொழுது சவால் ஒன்று இருந்தது" என தெரிவித்த அவர், "பொன்னியின் செல்வன் படத்தைப் பொருத்தவரை, அந்த நாவலை படித்தவர்களுக்கும் பிடிக்க வேண்டும் படிக்காதவர்களுக்கும் புரிய வேண்டும் இவை இரண்டுமே பெரிய சவால்களாக இருந்தன. நாவலைப் படித்தவர்களுக்கு பிடித்து வைப்பது மிகவும் சிரமம். அவர்கள் புத்தகம் எடுத்துக்கொண்டு வருவார்கள், படிக்காதவர்கள் கதையை புரியவில்லை என கூறுவார்கள். எனவே இரண்டு பேருக்கும் பிடிப்பது போல் படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம் இதனை இயக்குனர் மணிரத்தினம் மற்றும் அவரது குழுவினர் மிகவும் சிறப்பாக செய்துள்ளனர்" என்றார்.

"பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருந்த முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கின்ற விஷயங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் உள்ளது. இதில் அன்பான காதலும் உள்ளது ஆக்ரோஷமான காதலும் உள்ளது. ஆதித்த கரிகாலன் என்கின்ற எரிமலை வெடிப்பதை பார்க்கப் போகிறோம், தான் நினைத்ததை எல்லாம் சாதிக்க வேண்டும் என நினைக்கின்ற நந்தினி இனி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என பார்க்க போகிறோம்" என்றார் அவர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

வந்திய தேவன் அமைச்சரவையில் யார்யாருக்கு இடம்?

ட்விட்டரில் வந்தியதேவன் - குந்தவை தான் பேசினார்கள் என்றும் இதனை பிரச்சினையாக இழுத்து விடாதீர்கள் என்றும் கார்த்தி நகைச்சுவையாக கூறினார்.

அவரிடம் உங்களுக்கு (வந்தியதேவனுக்கு) ஒரு ராஜ்ஜியம் வழங்கப்பட்டால், யார் யாருக்கு எந்தெந்த துறைகளை அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், காதல்துறை அமைச்சர்- பூங்குழலி, பேரழகுத்துறை அமைச்சர்- நந்தினி, பெண்கள் நலத்துறை அமைச்சர்- குந்தவை ஆண் அமைச்சர் என்றால் பொன்னியின் செல்வன், சிங்கிள்ஸ் நலத்துறை அமைச்சர்- வந்தியதேவன், உருட்டு அமைச்சர்- ஆழ்வார்கடியான் நம்பி என்று சுவைபட பதில் கூறினார்.

"எனக்குப் பிடித்த 2 வசனங்கள் படத்தில் இல்லை" - நடிகர் கார்த்தி

நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து பேசிய நடிகர் கார்த்திக், "நான் பேசி நடித்திருந்த 2 வசனங்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளான. அவற்றில் ஒரு காட்சியில் வந்தியத்தேவன் சென்று கொண்டிருக்கும்போது பெரியவர் ஒருவர் வந்து தேவனை பார்த்து எங்கு சென்று கொண்டிருக்கிறாய் என கேட்பார். அதற்கு "ஒரு சொத்து பிரச்சினை அதற்கு தீர்வு கூற வேண்டும் அதற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். சொத்து அண்ணன் மகனுக்கா? அல்லது தம்பி பேரனுக்கா? என்பதுதான் பிரச்சனை இதற்கு நான் தான் தீர்வு கூற வேண்டும்" என்று வந்தியதேவன் பதிலளிப்பார். இதுதான் பொன்னியின் செல்வனின் கதை எனவும் இதனை மிகவும் எளிமையாக ஜெயமோகன் எழுதியிருப்பார்" என தெரிவித்தார்.

இது உங்களுக்கு புரிந்ததா என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய கார்த்தி, மதுராந்தகன் குறித்தும் ஆதித்த கரிகாலன் குறுத்தும் எடுத்து கூறி அப்புறமும் புரியவில்லை என கூறினால் பிச்சுப்புடுவேன் என நகைத்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

"இரண்டாவது வசனம், வந்தியத்தேவன் குந்தவை பார்த்துவிட்டு வரும்போது "நம் இளவரசி இருக்கிறாரே மிகவும் திறமைசாலி நரகத்திற்கு செல்பவர்களை கூட தடுத்து நிறுத்தி சொர்க்கத்திற்கு அனுப்பி விடுவார்கள், ஆனால் நந்தினி அதைவிட திறமைசாலி நரகத்தையே இதுதான் சொர்க்கம் என நம்ப வைத்து சந்தோசமாக அனுப்பியும் விடுவார்கள்" என்றார் அவர்.

உயிர் உங்களுடையது தேவி என்ற வசனத்திற்கு உங்கள் மனைவி என்ன கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, "ரொமான்ஸ் இல்லாமல் நீங்கள் கதையே நடிக்க மாட்டீர்களா என்று கேட்கும் என் மனைவி, வீட்டில் மட்டும் தான் ரொமான்ஸ் வருவதில்லை என்று குறைபட்டுக் கொள்வார். வந்தியத்தேவன் அனைவரையும் பார்த்தும் ஜொள் விடுகிறார், ஆனால் கண்ணியமாக இருக்கிறார் என்று இந்த படத்தை பார்த்து அவர் கூறினார். இந்த படத்தை பார்த்துவிட்டு முதல் தடவையாக எனது அம்மா படம் சூப்பராக இருப்பதாக பாராட்டினார்" என்று நடிகர் கார்த்தி குறிப்பிட்டார்.

'லியோ' பட அப்டேட் கேட்டு நடிகை திரிஷாவை நச்சரித்த ரசிகர்கள்

பொன்னியின் செல்வன்-2 பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்டு ரசிகர்கள் நச்சரித்தனர்.

அதற்குப் பதிலளித்த நடிகை திரிஷா, "நான் தற்போது லியோ பட சூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்லா இருக்காங்க. மற்றவற்றை லியோ நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம்" என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

சுயம்வரம் எப்போது? - நடிகை திரிஷா சுவாரஸ்ய பதில்

ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில அவரிடம் கேட்கப்பட்டது. அதன்படி திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார்.

பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதை போல் வரிசைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டதற்கு, PS-2 பட புரோமோசன் என்பதால், என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்) தான் என பதிலளித்தார். "கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ், இரண்டாவது உங்களுடைய சாப்பாடு, மூன்றாவது கோவையில் எப்போதுமே அமைதி உள்ளது" என்றார் நடிகை திரிஷா.

நாயகன் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி ஆசை

மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "எப்போது கோயம்புத்தூர் வந்தாலும் அன்பும் பாசமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடைசியாக மிருதன் பட சூட்டிங்கிற்காக கோவை வந்தபோது சூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததால் திகைத்து போனேன்.தனக்கு கோவை இரண்டாவது வீடு என மனதார சொல்கிறேன். மக்கள், ரசிகர்கள், எப்போது அன்பாக நடந்து கொள்கின்றனர்.

PS2 ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது பிஎஸ்-1 திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எங்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்து இருக்கின்றது. இதே மாதிரி PS2 க்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நிறைய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றுபோது PS1 எந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் என கேட்பார்கள், தான் PS 2 உடன் ஒப்பிட்டு பாருங்கள் என தெரிவிப்பேன்" என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

சினிமா குரு யார்? நடிகர் ஜெயம் ரவி பதில்

"இது மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த படம்,தேவையான படம் என்பது உங்களுக்கு தெரியும். என்னை இங்கே இருக்கும் ஒவ்வொரு பெண்மணியும் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். மனைவி கிட்ட மாட்டிகிட்டால் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும், மாட்டிக்கொள்ளாமல் என்ன வழியோ அதை பார்க்க வேண்டும். இயக்குனர் மணி எடுத்த படத்தில் நாயகன் பார்ட் - 2 படத்தில் நடிக்க எனக்கு ஆசை, பொன்னியன் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி, பூ எனும் நிஜமான நடிகையாகவே மாறிவிட்டார்.

நடிகர் கார்த்தி கான்பிடன்சுடன் இருப்பார், திரிஷா அசால்டாக இருப்பதோடு எல்லாரையும் மயக்கி விட்டு போய்க் கொண்டே இருப்பார். எனக்கு சினிமா குருஅப்பாதான்" எனறு ஜெயம் ரவி மேலும் தெரிவித்தார்.

காதல் அனுபவம் - நடிகர் விக்ரம் சுவாரஸ்யம்

அடுத்ததாக மேடையேறிய நடிகர் விக்ரம், தான் நடித்த அருள் படத்தின் பாடலை ரசிகர் மத்தியில் பாடியவாறு பேச்சை துவங்கினார். தான் பேச நினைத்ததை எல்லாம் திரிஷா பேசிவிட்டதாக அவர் கூறினார்.

"பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இது எங்க படம் என்றதை தாண்டி இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பி எஸ்2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடியது போல் வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும்" என்று ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

விக்ரம்

பட மூலாதாரம், TWITTER/Vikram

"படப்பிடிப்பின் போது சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டோம். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக செலவழித்த நேரம் அதிகம். இத்தனை நடிகர்கள் கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அனைத்து நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று நடிகர் விக்ரம் தெரிவித்தார்.

"ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான். நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது" என்று நடிகர் விக்ரம் நகைச்சுவையாக கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: