ரோஹித்தை விட சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது என பாண்டிங் ஏன் நம்புகிறார்?

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்துடனான காலிறுதிக்கு முன்பு, பாண்டிங் தனது பேட்டியில் ரோஹித்துக்கு ஒரு சதம் மட்டுமல்ல, அதற்கும் மேல் அவர் ரன்கள் எடுப்பார் எனக் கணித்திருந்தார்.
    • எழுதியவர், விமல் குமார்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தக் கட்டுரையில் அதற்கு மேல் குறிப்பிட விரும்பவில்லை.

ஆனால், வாசகர்களை 2015 உலகக் கோப்பை போட்டியைப் பற்றி நினைவு கூற விரும்புகிறோம். அந்த உலகக் கோப்பையின்போது, நான் பாண்டிங்கை மெல்பர்னில் சந்தித்தேன்.

உண்மையில், பாண்டிங் அந்த உலகக் கோப்பையின் போது பல சந்தர்ப்பங்களில் நேர்காணல் செய்யும் வாய்ப்பை பெற்றேன்.

ஏனெனில் அவர் அந்த நேரத்தில் நான் பணியாற்றிய நிறுவனத்தின் தொடர்புடைய ஒரு தனியார் சேனலுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

வங்கதேசத்துடனான காலிறுதிக்கு சற்று முன்பு, பாண்டிங் தனது பேட்டியில் ரோஹித்துக்கு ஒரு சதம் மட்டுமல்ல, அதற்கும் மேல் அவர் ரன்கள் எடுப்பார் எனக் கணித்திருந்தார்.

அவர் தனது கணிப்பில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், அவர் என்னுடன் பந்தயம் கட்டவும் தயாராக இருந்தார்!

புத்திசாலித்தனமாக நான் பாண்டிங்குடன் பந்தயம் கட்டவில்லை, ஆனால் 2013 இல், பாண்டிங் மிகவும் சாதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு வெளியேறி ரோஹித் சர்மாவை வருங்காலத் தலைவராகத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிக்கி பாண்டிங்குடன் ரோஹித் சர்மா

'ரோஹித்தை விட சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது'

பாண்டிங் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் மதிக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புல் ஷாட்டின் மிகப்பெரிய ரசிகர்கள்.

சமீபத்தில், இந்திய கேப்டனை நேர்காணல் செய்தபோது, ​​​​அவர் இதை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதை பாண்டிங் 2015ல் என்னிடம் கூறியிருந்தார்.

இன்று நாம் பேசுவது 2015 இல் ரோஹித் சர்மாவைப் பற்றி அல்ல, 2023 கேப்டன்-பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவைப் பற்றி.

அவர் தனது ஆக்ரோஷமான பாணி மற்றும் சிறந்த கேப்டன்ஷிப்பால் 2023 உலகக் கோப்பையின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஐசிசி உடனான உரையாடலில், பாண்டிங், இந்த உலகக் கோப்பையின் போது இந்தியா மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றும், இந்த அழுத்தத்தைத் தாங்குவதற்கு ரோஹித்தை விட வேறு எந்தத் தலைவரும் இருந்திருக்க முடியாது என்றும், ஏனெனில் அவர் மிகவும் நிதானமாகவும் எளிதாகவும் வாழ்கிறார், எனக் கூறியிருந்தார்.

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2023 இல் அவர் 116.51 ஸ்ட்ரைக் ரேட்டிலிருந்து அவர் பேட்டிங் செய்யும் ஆபத்தான விதம் தெளிவாகிறது.

ரோஹித்தின் பேட்டிங் முன்பை விட ஆக்ரோஷமாக உள்ளது

ரோஹித்தின் பேட்டிங் ஸ்டைல் ​​மிகவும் மென்மையானது மற்றும் இயற்கையானது. ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தால், அவரது பேட்டிங்கில் ஆக்ரோஷம் தெரியும்.

இதுவரை, உலகக் கோப்பையின் மூன்று போட்டிகளில், ரோஹித் 72 க்கும் அதிகமான சராசரியுடன் 217 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 142 ஆக உள்ளது. ஆனால், உலகக் கோப்பையில் இதெல்லாம் திடீரென நடந்ததில்லை.

2023 இல் அவர் 116.51 ஸ்ட்ரைக் ரேட்டிலிருந்து அவர் பேட்டிங் செய்யும் ஆபத்தான விதம் தெளிவாகிறது.

ரோஹித் 2019 முதல் 2021 வரை 95 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார், ஆனால் 2022 இல் அது 115 ஆக உயர்ந்தது.

ரோஹித் இந்த பாய்ச்சலால், அவரால், தனிப்பட்ட முறையில் அதிக ரன் எடுக்க முடியவில்லை, ஆனால், கேப்டன் என்ற பொறுப்பில் அணியை வேகமாக விளையாட ஊக்கப்படுத்தியதற்காக பாராட்டப்பட வேண்டும்.

ரோஹித்தின் இந்த ஸ்டைல் ​​ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல டி20யிலும் அப்படியே இருந்தது.

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது, ​​அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. ஆனால் அந்த போட்டியிலும், ரோஹித் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆக்ரோஷமான அணுகுமுறையைத் வெளிப்படுத்தியிருந்தார்.

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைலும் கடந்த சில வருடங்களில் முற்றிலும் மாறிவிட்டது.

தற்போதைய காலகட்டத்தின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் டாப் ஆர்டர் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில், ரோஹித், விராட் மற்றும் ஷிகர் தவான் அல்லது கே.எல் ராகுல் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைல் ​​அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. ஆரம்பத்தில் எச்சரிக்கையுடன் விளையாடி பின்னர் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடி ஸ்ட்ரைக் அதிகரித்தது.

ஆம், இந்த மூவரில் இருந்து இரண்டு பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாத போதெல்லாம், இந்திய அணி மெதுவான தொடக்கத்தை இழந்து தவித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரோஹித் கேப்டன் பொறுப்பைப் பெற்றபோது, ​​​​இந்த சிக்கலைப் புறக்கணிக்காமல், தனது முறைகளை மாற்றி அணிக்கு வேறு புதிய திசையைக் கொடுக்க முயன்றார்.

ஆனால், இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.

கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் அரிதாகவே ஒரு கேப்டன் அணியை ஆக்ரோஷமாக வழிநடத்துவதைக் காணலாம். பிரண்டன் மெக்கல்லம் 2015 இல் நியூசிலாந்துக்கு விதிவிலக்காக இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைலும் கடந்த சில வருடங்களில் முற்றிலும் மாறிவிட்டது.

இப்போது அவர் மிகவும் நுட்பமாக கவனித்து பந்துகளை மிகவும் துல்லியமாக விளையாடுகிறார், அவர் தற்போது சிறந்த தொடக்க வீரராகக் கருதப்படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளில் தொடக்க ஆட்டக்காரராக அவரது டெஸ்ட் புள்ளிவிவரங்களும் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அணியின் பேட்டிங்கின் அடிப்படையில் உலகக் கோப்பையில் வெற்றிப் பாதைக்கு செல்வதில் வித்தியாசம் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் ரோகித் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித்தின் திறமையை யாரும் சந்தேகிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தாலும், மற்ற வீரர்களை விட அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்ததற்கு காரணம், இத்தகைய திறமையான வீரர், நிச்சயம் சிறப்பான ஒரு அணியை இப்போதில்லை என்றாலும், ஒரு நாள் கட்டமைப்பார் என அனைவரும் நம்பினர்.

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு தொடரிலும் அவருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உன்னிப்பாகக் கவனித்தேன்.

குறிப்பாக, ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது, ​​உலகக் கோப்பைக்கான வியூகங்களை, கேப்டனும், பயிற்சியாளரும் வகுத்த விதம், அதை அப்போது விளையாடிய போட்டியில் செயல்படுத்த முயன்றது வியக்கத்தக்கது. அவர்கள் இருவரும், இந்தியாவில் விமர்சிக்கப்படுவதை பொருட்படுத்தவில்லை.

தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அணியின் பேட்டிங்கின் அடிப்படையில் உலகக் கோப்பையில் வெற்றிப் பாதைக்கு செல்வதில் வித்தியாசம் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் ரோகித் கூறியிருக்கிறார்.

கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதனால், நவம்பர் 19 ஆம் தேதி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவும் சிறப்பாக இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)