BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பொது சிவில் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.

நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இந்த வாரம், பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் என்ன நடந்தது? ஏன் இந்த சர்ச்சை? - கள நிலவரம், இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னை தொடங்கியது எப்படி? அறிமுகமானதுமே 6 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?, சுனில் சேத்ரி: மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு நிகரான இந்திய கால்பந்து அணியின் 'மந்திர ஆட்டக்காரர்' ஆகிய 5 கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்தோம்

பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின், பிரதமர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து மீண்டும் நாடு முழுவதும் இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் என்ன நடந்தது? ஏன் இந்த சர்ச்சை? - கள நிலவரம்

சிதம்பரம் நடராஜர் கோவில்
படக்குறிப்பு, சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் மேடையின் மீது ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கடவுளை தரிசிக்கக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட பதாகை, அந்தக் கோவில் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சையில் அடிபடுவது ஏன்?

முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னை தொடங்கியது எப்படி?

பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதல்களால் இருதரப்பிலும் உயிர் பலிகள் நிகழ்வதும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.

இதற்கு ஒரு முடிவே கிடையாதா என்று கேட்கும் அளவுக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொடரும் இந்த பிரச்னை எப்படி ஆரம்பித்தது, மேற்குக் கரை மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் என்ன? ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம்? இருதரப்பு பிரச்னைகள் எதிர்காலத்தில் ஆவது தீர்க்கப்படுமா? என்பன உள்ளிட்டவை குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

அறிமுகமானதுமே 6 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?

ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 6 கோடி பயனர்கள் த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் இணைந்துவிட்டனர். இது ட்விட்டருக்கு பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

சுனில் சேத்ரி: மெஸ்ஸி, ரொனால்டோ வரிசயில் இந்திய கால்பந்து அணியின் 'மந்திர ஆட்டக்காரர்'

Indian Team

பட மூலாதாரம், Getty Images

கடந்த செவ்வாய்க்கிழமை குவைத் அணியை வீழ்த்தி தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றியின் மையமாக இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இருந்தார். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: