இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது

பட மூலாதாரம், SRILANKA NAVY

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் நேற்றிரவு வருகை தந்த 14 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் வருகை தந்த படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 7 ஆண்களும், 3 பெண்களும், 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டடுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது

பட மூலாதாரம், SRILANKA NAVY

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு முதலுதவிகளை கடற்படையினர் வழங்கியதுடன், பின், இன்று அதிகாலை காங்கேசன்துறை போலீஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது

பட மூலாதாரம், SRILANKA NAVY

இவர்களில் சிலர் போர் காலப் பகுதியில் அகதி அந்தஸ்து கோரி இந்தியாவிற்கு சென்றது விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது

பட மூலாதாரம், SRILANKA NAVY

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: