ராஜபக்ச ஆட்சிக்கால ஊழல் வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSHA
இந்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசு கூறியுள்ளது.
அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்
- சிவப்பு நிறத்தில் மாறிவரும் நிலா- நாசாவின் நேரலை காட்சிகள்
- கிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்
- பட்ஜெட் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 5 விடயங்கள்
- இன்று தோன்றும் சந்திர கிரகணத்தில் என்ன சிறப்பு? - 5 தகவல்கள்
- `ஒரே நாடு ஒரே தேர்தல்’ - ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் வெளிப்பாடா?
- சிவப்பு நிலா - ஊதா நிலா என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








