இலங்கை காட்டு யானைகள் குப்பைகளை உண்பதை தடுக்க சிறப்பு திட்டம்
காட்டு யானைகள் குப்பைகளை உண்ணுவதை தடுப்பதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனை நடைமுறை படுத்துவதற்கான வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யானைகள் பெரும் எண்ணிக்கையாக வசிக்கும் காட்டு பிரதேசங்களுக்கு அருகில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப்படும் 54 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பெரேரா 300 மேற்பட்ட யானைகள் இந்த குப்பைகளை உணவாக எடுத்துகொள்வதாக தெரிவித்தார்.
குப்பைகளை உண்ணுவதன் காரணமாக யானைகளின் சுகாதாரத்திற்கு மட்டும்மல்ல அதன் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குப்பைகள் கொட்டப்படும் பிரதேசங்களுக்கு யானைகளுக்கு செல்ல முடியாத வகையில் மின்சார வேலிகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறை படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மின்சார வேலிகளை அமைக்கும் பணிகளுக்காக விரைவில் ஆரம்பிப்பது குறித்து அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












