இலங்கை யானை மரணத்தில் சந்தேகம்: உடற்கூறு சோதனை நடத்த திட்டம்
அண்மையில் ஹபறன பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்த யானையின் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஹபறன-திருகோணமலை பிரதான வீதியில் மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் நடமாடிய இந்த யானையை விரட்டி அடிப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
அதன் போது சம்பந்தப்பட்ட யானை கொல்லப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் துப்பாக்கி பிரயோகம் காரணமாக சம்பந்தப்பட்ட யானை கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதன் உடலில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்த மரணத்திற்கான உண்மையான காரணங்களை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட யானையின் உடலை தோண்டியெடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












