இலங்கையில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகிறது: சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

இலங்கையில் அமைந்துள்ள காடுகளில் ஆண்டொன்றுக்கு 8000 ஹெக்டேர் வரை அழிக்கப்பட்டு வருவதாக சூழல் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

பட மூலாதாரம், ROEL BRIENEN

படக்குறிப்பு, கோப்புப் படம்

இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் புதிய நீர்பாசன திட்டங்களின் நிர்மாண பணிகள் காரணமாக பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதேபோன்று மீள் குடியேற்ற நடவடிக்கை காரணமாகவும் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை ,புத்தளம், அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள காடுகள் கூடுதலான அழிவுகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்

இலங்கையில் மொத்த பூமி பிரதேசத்தில் தற்போது, 29.7 % காடுகள் மாத்திரம் காணப்படுகின்றது.

இலங்கையில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகிறது: சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம், Thinkstock

அதனை 2022 -ஆம் ஆண்டு 32 % வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறிய ஹேமந்த விதானகே, அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் 150650 ஹெக்டேர் பூமியில் புதிதாக காடுகளை உருவாக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

தற்போது கைவிடப்பட்டுள்ள அரசு காணிகளை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்