`வீட்டு வாடகையாக அது மட்டும் போதும்' - இளைஞர்களின் சவால்கள் பற்றிய பிபிசி புலனாய்வு

பெண்

பட மூலாதாரம், Getty Images

இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான்.

ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வாடகைக்குப் பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.

''அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று அறையை காட்டினார்," என்றார் அந்தப் பெண்.

தொடர்ந்து பேசியவர், ''தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப்படுத்திச் செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டுவிட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல்ரீதியாக சுகவீனம் அடைந்துவிட்டேன்.''

பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சியூட்டும் காணொளி

காணொளிக் குறிப்பு, பெங்களூருவில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

'குறும்புக்கார பெண் தேவை'

மெயிட்ஸ்டோனிலிருந்து நபர் ஒருவர் தனது பெண் தோழியைப் போல நடித்து தன்னுடம் தங்கிக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும், மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களைக் குறிவைத்து ''சேவைகள்'' பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங்களை பிபிசியால் பார்க்க முடிந்தது.

தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான விளம்பரங்களைப் பதிந்துள்ள உரிமையாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

''வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம்தான்'' என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.

வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" என்பதால் இருதரப்பினருக்கு நன்மையே என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images/Manuel-F-O

படக்குறிப்பு, வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்" என்பதால் இருதரப்பினருக்கு நன்மையே என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்

`நட்புடன் பலன்'

தன்னுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கையுடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இதுபோன்ற விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பினருக்கும் நன்மையே என்றார்.

''காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்துக்கூட சாதகமாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயமில்லை. இதிலுள்ள உண்மை நிலையை அறிந்தேதான் எல்லோரும் இதில் செல்கிறார்கள்.

''நான் அதில் கடைசி வகையான நபர், சூழலைச் சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். வாடகையாக செக்ஸ் மட்டும் போதும்! இரு தரப்புக்கும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பது தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.''

பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்திலிருந்து பெண் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளார்.

மேலும், இவ்வகையான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.

இரண்டு கைகள்

'வாய்ப்புகள் மறைகின்றன'

அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், ''இதுபோன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கிச் செல்கின்றன.

''இதைத் தன்னார்வமாகத் தேர்ந்தேடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாதிடுவார்கள்.

''சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போதுதான் பிரச்னை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்துவிடுகிறது.''

வீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயின்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமையாளர்கள் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாடகைக்கு பதிலாக பாலுறவு' முறைக்கு எதிராக சட்டம் இயற்றும் பரிசீலனை

பிரிட்டனில் வீட்டு வாடகையாக பாலியல் உறவு வைத்துக்கொள்வது குறித்த விஷயத்தில் பாதிக்கப்படுவோரை பாதுகாப்பதற்காக புதிய சட்டம் இயற்றுவதை உள்துறை செயலர் பரிசீலிப்பதாக இந்த ஆண்டு ஏப்ரலில் செய்திகள் வெளியாகின.

வீட்டு வாடகைக்கு ஈடாக பாலியல்ரீதியாகச் சுரண்டும் நில உரிமையாளர்களை ஒடுக்க புதிய சட்டம் பரிசீலிக்கப்படுகிறது என்று உள்துறை செயலர் சுவெல்லா பிரேவர்மேன் கடந்த ஏப்ரலில் அறிவித்தார்.

பிரிட்டனில் வெறுக்கத்தக்க 'வாடகைக்கு பதிலாக பாலுறவு' பரிமாற்றத்தின் அளவு மற்றும் தன்மையைப் புரிந்துகொள்வதற்காக ஏப்ரல் 21 அன்று ஆதாரங்களுக்கான பொது அழைப்பு தொடங்கப்பட்டதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களின் கருத்துகளை அரசாங்கம் கோரியது.

உரிமையாளர்கள் தங்களுடைய கட்டடத்தில் குடியிருப்போருக்கு பாலியல் உறவுக்கு ஈடாக தங்குமிடத்தை இலவசமாகவோ அல்லது தள்ளுபடியிலோ கொடுப்பது ஒருவித ஏற்பாடு. பாலியல் குற்றச் சட்டத்தின்கீழ் இது ஏற்கெனவே சட்டவிரோதமானது. மேலும் வாடகைக்கு பதிலாக பாலுறவில் ஈடுபட முயலும் நில உரிமையாளர்கள்மீது இப்போதே கூட வழக்கு தொடரலாம்.

ஆதாரங்களுக்கான அழைப்பு, இப்போது நிலவும் சட்டங்களே போதுமானதா அல்லது சிக்கலைச் சமாளிக்க, பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதிப்பிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்க புதிய சட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றனவா என்பதைப் பரிசீலிக்கும் என்றும் அறிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்