இலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே, இந்து ஆலயமொன்றின் திரைச்சீலை சேதமாக்கப்பட்டு சிவலிங்கமும் தூக்கி வீசப்பட்டுள்ளது.

வாகனேரி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
படக்குறிப்பு, வாகனேரி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை போலிஸ் பிரிவில் உள்ள வாகனேரி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஆலயத்தின் அர்ச்சகர் வழக்கம் போல் இன்று காலை பூசைக்காக ஆலயம் சென்றிருந்த வேளை அதனை கண்டு போலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.

ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

சம்பவத்தின் பின்னணியோ அதில் தொடர்புடையவர்களோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட போலிஸ் விசாரனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் இது தொடர்பான தகவல் அறிந்து அங்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.