CSK vs SRH தோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி: ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?

Dhoni, Mahendra Singh Dhoni, MSD, महेंद्र सिंह धोनी, धोनी, CSK, CSKvsSRH, Captain Cool

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பேற்று முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன.

CSK vs SRH மேட்சுக்குப் பிறகு ஜடேஜாவுடன் தோனி.

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, மேட்சுக்குப் பிறகு ஜடேஜாவுடன் தோனி.

வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக மேட்ச் முடிந்த பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அதனை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கியது, பின் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது என பலவற்றை குறித்து பேசினார்.

இந்த மேட்சுக்கு ஒருநாள் முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா, அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தோனியை கேட்டுக்கொண்டார். அதனை 'கேப்டன் கூல்' ஏற்றுக்கொண்டார்.

ஒரே இரவில் ஏற்பட்ட இந்த மாற்றம் கிரிக்கெட் உலகிலும் பொதுமக்கள் மத்தியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்த மாற்றம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், "இந்த சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது கடந்தாண்டிலேயே அவருக்கு தெரியும். அதற்காக தயார்படுத்துவதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. முதல் இரு மேட்ச்களில் அவருடைய பணியை நான் கண்காணிக்க மட்டுமே செய்தேன். அதன்பிறகு, அவரே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், அம்முடிவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தினேன்" என தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களை கவனிக்கவேண்டும் வேண்டும். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன் பொறுப்பின் அழுத்தம் அவரது விளையாட்டை பாதிக்க செய்தது.

கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செய்வது என்பது மெதுவாக நடக்கும் மாற்றம். கேப்டனாக இருக்கும்போது நாம் பலவற்றை கவனிக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று உங்களின் விளையாட்டு" என தெரிவித்தார்.

CSK vs SRH ஜடேஜா

பட மூலாதாரம், BCCI/IPL

கேப்டன் பொறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்டதால், ஜடேஜா மீண்டும் புத்துணர்ச்சியுடன் 'ஆல்-ரவுண்ட்'டராக விளையாட்டை தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த தோனி, குறிப்பாக 'பீல்டிங்'கில் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார். இந்த சீசனில் பீல்டிங்கில் மிக மோசமாக உள்ள சிஎஸ்கே, எளிமையான கேட்ச்களை கூட தவறவிட்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் இத்தகைய எளிமையான கேட்ச்களை சிஎஸ்கே நழுவவிட்டது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"இந்த மேட்ச்கள் கடினமானவை, எனினும் நாங்கள் வலுவுடன் திரும்பிவருவோம்" என தெரிவித்தார்.

இந்த சீசனில் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அம்முடிவை தான் ஆதரித்ததாகவும் தோனி கூறினார். மேலும், கேப்டனாக ஜடேஜாவின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என தான் நினைத்ததாகவும் கூறினார்.

தோனி CSK vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

நேற்றைய மேட்ச்சில் முதலாவதாக விளையாடிய சென்னை அணி 202 ரன்களை அடித்தது, இதில் பாதி அதாவது 99 ரன்களை ருதுராஜ் கேய்க்வாட் அடித்தார். டேவன் கான்வே 85 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் 189 ரன்களை அடித்தது. இதையடுத்து இந்த மேட்ச்சில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

"நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. கேப்டன் மாறிவிட்டதால் அனைத்துமே மாறிவிட்டது என பொருள் அல்ல" என வெற்றி குறித்து தோனி தெரிவித்துள்ளார்.

CSK vs SRH ஜடேஜா, தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவராக தோனி உள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.

ஐபிஎல் தொடர்களை சிஎஸ்கே வெல்ல தோனியின் தலைமைப் பண்பு காரணமாக இருந்ததாக அவர் பலராலும் பாராட்டப்படுகிறார்.

கேப்டனாக இருந்தபோது ஜடேஜாவின் ஆட்டமும் சிறந்ததாக இல்லை என்ற கருத்து உள்ளது. இதுவரை 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.

இந்த வெற்றி குறித்து பேசிய தோனி, "நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. கேப்டன் மாறிவிட்டதால் அனைத்துமே மாறிவிட்டது என பொருள் அல்ல" என கூறினார். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி, எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம்.''இதனால் வித்தியாசமான முறையில் பந்துவீசும் சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர். நான் எப்போதும் கூறுவது உண்டு. ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள் என்று சொல்வேன். என்னுடைய இந்த கருத்தை மற்றவர்கள் ஏற்பார்களா என்று தெரியாது'' என்று மேலும் கூறினார் தோனி.

காணொளிக் குறிப்பு, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: