ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றிப் பாதையில் இந்திய இளைஞர்கள் – யார் இவர்கள்?

இந்தியா அண்டர் 19 அணி

பட மூலாதாரம், Instagram/@kl_nagarkoti.club

    • எழுதியவர், பராக் பாதக்
    • பதவி, பிபிசி மராத்தி

இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது கைஃப், விராட் கோலி, உன்முக்தா சந்த் & பிருத்வி ஷா ஆகியோரை பின்பற்றி யாஷ் துல்லும், அவரது அணி வீர்ர்களும் வெற்றிகரமான பாதையை நோக்கி முன்னேறலாம்.

ஜூனியர் உலக கோப்பையில் இந்தியாவின் 'அண்டர் 19' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமையன்று, இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி இதுவரை நான்கு முறை (2000, 2008, 2012 மற்றும் 2018) பட்டத்தை வென்றுள்ளது.

இது அவர்கள் தொடர்ச்சியாக பங்கேற்கும் நான்காவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். இந்த போட்டியில், தனித்தனியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், சிறந்த தோழமையையும் இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த இறுதிப் போட்டியை எதிர்நோக்கிய பயணத்தில் இந்திய அணி உண்மையில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டியுள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தை கயானாவில் விளையாடியது.

பின்னர், அவர்கள் அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்காக டிரினிடாட் சென்றனர். அப்போது, கேப்டன் உட்பட 6 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு வழிமுறையாக, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்த உலகக் கோப்பையில்17 வீரர்களை கொண்ட ஓர் அணிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

கொரோனா காரணமாக சமன்பாட்டிலிருந்து 6 வீரர்கள் வெளியேறினர். அதாவது அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கான தேர்வில் 11 வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலை மிகவும் நுட்பமாக இருந்தது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வந்தனர். பயிற்சியாளர்கள் ஹிருஷிகேஷ் கனிட்கர் மற்றும் சாய்ராஜ் பஹுதுலேவுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் வி.வி.எஸ். லக்ஷ்மண், நிலைமையை கவனமாக கையாண்டனர்.

இந்த அணியின் மன உறுதி உயர்வாக இருப்பதை அவர்கள் உறுதி செய்த்னர். அயர்லாந்துக்கு எதிராக இந்தியா வீரர்கள் 11 பேர் களமிறக்க வேண்டியிருந்தது. அயர்லாந்திற்கு எதிரான அபார வெற்றியுடன் அவர்கள் சாதகமாக பதிலளித்தனர்.

அவர்களின் மனநிலையில் கோவிட் பாதிப்பு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது தகுதியானவர்களுக்கு கூடுதல் பொறுப்பையும் அளிக்கலாம். உகாண்டாவுக்கு எதிராகவும், அவர்களின் சிறந்த 11 வீரர்களை கொண்டிருக்கவில்லை.

ஆனால், அணியில் இருந்தவர்கள் மிக சிறப்பாக விளையாடினார்கள். ஒரு வார கால இடைவெளி சில விஷயங்களை சரியான பாதையில் அழைத்து சென்றது. கோவிட் பாதிப்பின்போது, இந்த அணியின் மன உறுதியை நிரூபித்துள்ளது.

இந்த அணியை தலைமை தாங்கும் மேற்கு தில்லி வீரரான யாஷ் தூல், ஜூனியர் உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியை நினைவுபடுத்துகிறார். கொரோனாவுக்குப் பிறகு, யாஷ் அரையிறுதியில் சதம் அடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஒரு கேப்டனாக இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அந்த அணியின் துணை கேப்டன் ஷேக் ரஷீத் சில விநாடி துளியில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 50 கி.மீ தொலைவில் உள்ள மங்கல்கிரிக்கு பயிற்சிக்கு செல்லும் குண்டூரைச் சேர்ந்த இளைஞர். அவருக்கு நிதி நெருக்கடி காரணமாக, கிரிக்கெட் பயிற்சி செய்ய கடினமாக இருந்தது.

ஆனால் அவரது தந்தையும் பயிற்சியாளரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். கடுமையான கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருந்து பின் உடல்நலம் தேறி வந்த, நடு வரிசை ஆட்டகாரர் (middle-order batsman) ரஷீத் அரையிறுதியில் முக்கியமான 94 ரன்களை எடுத்தார்.

அங்கிரிஷ் ரகுவன்ஷியின் கதை சுவாரஸ்யமான ஒன்று. தில்லியில் பிறந்த ஆங்க்ரிஷ் இப்போது மும்பையில் அபிஷேக் நாயரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுகிறார். ஆங்கிரிஷின் தந்தை இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடியுள்ளார். அவரது தாயார் நாட்டிற்காக கூடைப்பந்து விளையாடியுள்ளார்.

ரகுவன்ஷியைநாயரிடம் சேர்ந்தது, அவரது மாமாவான சாஹில் குக்ரேஜாதான் . ஆங்கிரிஷின் ஊர் இப்போது மும்பைதான். வீட்டை விட்டு விலகி இருப்பது எளிதானது அல்ல; ஆனால் இந்த முடிவின் தாக்கம் ஆங்க்ரிஷின் ஆட்டத்தில் தெரிகிறது.

Under 19 world cup

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச அணிக்கு எதிராக வெல்ல, ரவிக்குமார் முக்கிய பங்காற்றினார். இவரது தந்தை சிஆர்பிஎப்-ல் பணிபுரிகிறார். அவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். வாய்ப்புகள் தேடி, ரவி மேற்கு வங்காளத்திற்கு மாற வேண்டியிருந்தது. அப்பா விடாமுயற்சியுடன் இருந்தார்; ரவி தனது தந்தை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிலைநாட்டினார். ஆராத்யா யாதவின் தந்தை தில்லி காவல்துறையில் மேற்பார்வையாளராக உள்ளார்.

மும்பை - புனே வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய மலைப்பிரதேசம் லோனாவாலா. கடலை மிட்டாய், மலைத்தொடர்கள், குளிர்ந்த வானிலைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்திலிருந்து விக்கி ஓஸ்ட்வால் தனது பயணத்தை தொடங்கினார். விக்கி மும்பை சென்றார், அங்கு விளையாடினார். அவரது இடம் மும்பை கிரிக்கெட்டின் அதிகார வரம்பிற்குள் வராததால், அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பின்னர் அவரது இடமாக புனே மாறியது. பயண நேரத்தை குறைக்க அவரது குடும்பத்தை நகரத்திற்கு மாற்றுமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தினார். அவர்கள் மகனின் கனவுக்காக ஒப்புக்கொண்டனர். விக்கி விளையாடும் விதம், அவர்கள் அனைவரும் தங்கள் முடிவைப் பற்றி மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.

அற்புதமான வேகப்பந்து வீச்சிலும் ஸ்ட்ரோக்-மேக்கிங்கில் ஓர் அட்டகாசமான வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள கோவில்களுக்கு புகழ்பெற்ற துல்ஜாபூரைச் சேர்ந்த இளைஞர்.

தேஜஸ் மாதாபுர்கர் என்ற பயிற்சியாளர் ராஜ்வர்தனை கண்டறிந்தார். அவர் நல்ல உடல் நலன் பெற தேஜஸ் முயற்சி செய்தார். ராஜ்வர்தனுக்கு பயிற்சியாளர்களை கண்டுபிடிப்பதில் தேஜஸ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

பேட் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பது கூடுதல் சிறப்பு. ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தேடும் வீரராக ராஜ்வர்தன் இருக்கக்கூடும்.

யுவராஜ் சிங்கை பின்பற்றும் ராஜ் பாவா - அவரது குடும்பம் விளையாட்டு துறையை சேர்ந்தது. இவரது தாத்தா தர்லோச்சன் பாவா 1948ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் வீரராக இருந்தார். இடது கை பேட்ஸ்மேன்னாக இவர், வலது கை பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளது. 19 வயது பிரிவு போட்டிகளில் தங்களை நிரூபித்துள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா முக்கியப் உந்துசக்தியாக உள்ளது. இந்திய அணி எப்போதும் டைட்டில் போட்டியாளர்களாகவே கருதப்படுகிறது.

அண்டர் 19 அணி

இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், சீனியர் அணிக்காக விளையாடி வருவதால், ஜூனியர் உலகக் கோப்பை இப்போது ஓர் அளவுகோலாக மாறியுள்ளது. முகமது கைஃப், யுவராஜ் சிங், ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மான் கில், பிருத்வி ஷா- இந்த பட்டியல் நீள்கிறது.

பெங்களூரின் தேசிய கிரிக்கெட் அகாடமி அவர்களின் பயணத்தில் முக்கியப் பங்காற்றுவதால், பிசிசிஐ அணிக்கு ஒரு சிறந்த குழு வழங்கியுள்ளது.

அடுத்த வாரம் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், உலகக் கோப்பையின் விளையாடும் சிலருக்கு இது நல்வாய்ப்பாக மாறக்கூடும். இந்தியாவின் முதன்மையான உள்நாட்டுப் போட்டியான ரஞ்சி டிராபி, கொரோனா காரணமாக 2 வருட இடைவெளிக்குப் பிறகு தொடங்கவுள்ளது. ஜுனியர் போட்டியின் இளம் வீரர்கள், நிச்சயமாக ரஞ்சி டிராபியில் விளையாட எதிர்பார்ப்பார்கள், இந்த நான்கு-நாள் விளையாட்டு போட்டியில் தங்களை தாங்களே சோதித்துக்கொள்வார்கள்.

இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான பாதை

இந்தியா ஜூனியர் 19 அணி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் லீக் காலிறுதிப் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

உகாண்டாவுக்கு எதிரான லீக் போட்டியில், 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில், 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

'போட்டியின் ஆட்டக்காரர்'

2000-யுவராஜ் சிங்

2004-ஷிகர் தவான்

2006-சேதேஷ்வர் புஜாரா

2018-சுப்மன் கில்

2020-யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: