ஹர்பஜன் சிங் முழு ஓய்வு அறிவிப்பு - முதல் விக்கெட் முதல் 400 விக்கெட் பட்டியல் வரை

ஹர்பஜன்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் இந்தியாவிற்காக விளையாடினார். 2021ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியதுதான் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடிய கடைசி போட்டி.

இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

என்ன சொன்னார் ஹர்பஜன்?

"எந்த ஒரு நல்ல விஷயமும் முடிவுக்கு வரும். இன்று எனது வாழ்க்கையில் எனக்கு அனைத்தையும் கொடுத்த விளையாட்டிலிருந்து நான் விடை பெற்று கொள்கிறேன்." என்று தனது ஓய்வு குறித்து அறிவித்த ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

"உளமார்ந்த நன்றி. மிகவும் கடமைப்பட்டுள்ளேன்."

யூட்யூபில் பதிவிட்டிருந்த வீடியோவில், "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுத்து மேற்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் வரும்,"

"நான் இந்த அறிவிப்பை வெளியிட கடந்த சில வருடங்களாக நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தேன்."

"பல வழிகளில் நான் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஏற்கனவே ஓய்வுப் பெற்றதுபோல இருந்தாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இயலவில்லை"

ஹர்பஜன்

பட மூலாதாரம், Getty Images

"சில காலமாக நான் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நான் இருக்க வேண்டியிருந்தது. எனவே 2021ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியை அவர்களுடன் கழித்தேன். ஆனால் அப்போதே நான் ஓய்வுப் பெற வேண்டும் என மனதை தயார்ப்படுத்தி கொண்டேன்," என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் கொல்கத்தா அணிக்காக ஹர்பஜன் சிங் மூன்று போட்டிகளில் விளையாடினார் ஆனால் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் விளையாடிய போட்டிகள் அவை.

400 விக்கெட்டுகளை கடந்த ஹர்பஜன்

முதன்முதலாக இந்திய அணிக்காக 1998ஆம் ஆண்டு களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் எடுத்த முதல் விக்கெட் ஆஸ்திரேலிய வீரர் க்ரேக் ப்ளேவெட்டுடையது.

டெஸ்ட் போட்டிகளில் அவர் 417விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளார். அதேபோன்று அனில் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ரவிசந்திரன் அஷ்வினுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் என்ற சிறப்பும் இவருக்கும் உண்டு.

2011ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார். அந்த போட்டித் தொடரில் அவர் 9 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோன்று 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார். இதுவரை விளையாடிய 163 போட்டிகளில் 150 விக்கெட்டுகள எடுத்துள்ளார்.

மூன்று முறை கோப்பையை வென்ற மும்பை அணியிலும் 2018ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சென்னையிலும் இடம்பெற்றிருந்தார் ஹர்பஜன் சிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: