அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் தங்க மங்கை - 8 முக்கிய தகவல்கள்

பாராலிம்பிக்

பட மூலாதாரம், REUTERS/ISSEI KATO

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா இந்தியாவுக்காக இன்று தங்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அவனி குறித்த எட்டு முக்கிய தகவல்கள் இதோ.

  • 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் உண்டான முதுகுத் தண்டுவட பாதிப்பால் அவனி மாற்றுத்திறனாளி ஆனார்.
  • 19 வயதாகும் அவனி லெகரா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார் அவனி.
  • அவரது தந்தை அவனி விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்தாகவும், தொடக்கத்தில் அவர் துப்பாக்கி சுடுதல், வில் வித்தை என இரண்டிலுமே ஆர்வம் காட்டினார் என்றும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இணையதளம் கூறுகிறது.
  • இந்தியாவுக்காக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் நூல் அவனிக்கு பெரும் ஊக்கம் தந்ததாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
  • 2017 முதல் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்துவரும் அவனி, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.
  • கொரோனா நெருக்கடி அவரது பயிற்சியை மட்டுமல்லாது தொடர்ச்சியாக பிசியோதெரப்பி சிகிச்சை பெறுவதிலும் பாதிப்பை உண்டாக்கியது. அதையும் மீறி அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • "என் வயிற்றுக்கு கீழே எனக்கு எந்த உணர்வும் இல்லை. பிசியோதெரபிஸ்ட் ஒருவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு சிகிச்சை அளித்து, என் கால்களை நீட்டி விடுவார்," என்று ஜூன் 2020இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவனி லெகரா கூறியுள்ளார்.
  • இதுவரை ஏழு பெண்கள் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை. இந்த ஏழு பேரில் ஐவர் வெண்கலமும், இருவர் வெள்ளியும் வென்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :