டோக்யோ ஒலிம்பிக்: கோல்ஃப் விளையாட்டில் பதக்கத்தை நெருங்கும் அதிதி அசோக் – யார் இவர்?

அதிதி

பட மூலாதாரம், YOSHI IWAMOTO

டோக்யோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன், கோல்ஃப் விளையாட்டு அல்லது அதிதி அசோக்கின் பெயர் , பதக்கம் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு அல்லது வீரர்களின் பட்டியலில் இல்லை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஆனால் இப்போது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது, இந்தியாவின் 23 வயதான கோல்ப் வீராங்கனை அதிதி, பதக்க நம்பிக்கையை எழுப்பியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அதிதி, கடந்த சில ஆண்டுகளாக கோல்ஃப் விளையாட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார், இருப்பினும் இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது கோல்ஃப் பற்றி ஊடகங்களில் அதிகமாக பேசப்படுவதில்லை..

அதிதி, 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றிருந்தாலும், அப்போது அவர் பள்ளிப்படிப்பைத்தான் முடித்திருந்தார். பதின்பருவத்தில் இருந்தார். ஒலிம்பிக்கில் மகளிர் கோல்ஃப் போட்டியில் வயதில் இளைய வீரராக இருந்தார்.

ரியோவில் அவரது விளையாட்டு குறிப்பிடும்படியாக இருக்கவில்லை. அவர் 41 வது இடத்தையே பிடித்தார். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் அதிதி, மகளிர் கோல்ஃப் விளையாட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

வேறு எந்த இந்திய மகளிர் கோல்ஃப் வீரரும் இதுவரையில் ஒலிம்பிக்கிற்கு இரண்டு முறை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ,மூன்று முதல் நான்காயிரத்தில் இருந்து 24 ஆயிரத்தை எட்டிவிட்டது. 2016 ல் மகளிர் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இரண்டு பட்டங்களை வென்ற ஒரே இந்தியர் அதிதி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

கோல்ஃபில் அதிதியின் அறிமுகம் ஒரு வகையில் தற்செயலானது. பெங்களூரில் எந்த உணவகத்தில் அவருடைய குடும்பம் அவ்வப்போது சாப்பிடச்செல்லுமா, அந்த உணவகத்திற்கு முன்னால் கோல்ஃப் மைதானம் இருந்தது. ஒரு நாள் அவர்கள் அந்த மைதானத்தைப்பார்க்க அங்கு சென்றார்கள். அதிதி தானும் விளையாடிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தார்.

அங்கிருந்து அவருடைய கோல்ஃப் பயணம் தொடங்கியது. அப்போது அதிதிக்கு சுமார் ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்.

ரியோ ஒலிம்பிக்கில் அதிதியின் தந்தை அவருக்கு 'கெய்டியாக' சென்றார். அதே நேரத்தில் டோக்யோவில் அவரது தாயார் கெய்டியாக சென்றுள்ளார். டோக்யோவிலிருந்து இந்த தாய்-மகள் ஜோடியின் படங்களை நீங்கள் பார்க்கலாம்.

கெய்டி ஒரு கோல்ப் உதவியாளர் ஆவார். அவர் கோல்ஃப் கிளப்புகளின் பையை சுமந்து செல்வார் மற்றும் பல சந்தர்ப்பங்களில் கோல்ப் வீரருக்கு உதவுவார்.

அதிதி

பட மூலாதாரம், KAZUHIRO NOGI/AFP via Getty Images)

மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கோல்ஃப் பிரபலமாக இல்லை. சிரஞ்சீவ் மில்கா சிங் மற்றும் ஜோதி ரந்தவா போன்ற ஆண் வீரர்களை மட்டுமே மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

ஆனால் டோக்யோ ஒலிம்பிக்கில் அதிதி அசோக்கின் நல்ல செயல்திறன் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக்கொண்டுவரும். மக்கள் கோல்ஃப் விளையாட்டை மட்டுமல்ல, அதிதியையும் அடையாளம் காணத்தொடங்குவார்கள்.

டோக்யோவில் பதக்கம் வென்ற அதிதியையும், கெய்டியான அவரது தாயையும் பார்ப்பது இந்தியாவிற்கு ஆச்சரியம் கலந்த பெருமகிழ்ச்சியைத்தரும்.

ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய மகளிர் வீரர்களின் பட்டியலில் மேலும் ஒரு பெயர் சேர்க்கப்பட்டால், அதுவும் கோல்ஃப் விளையாட்டில் அது நிகழ்ந்தால், சிறப்பான ஒன்றாகதான் இருக்கும். இந்தத்தருணத்தை இப்படியும் சொல்லலாம்.., அதாவது குத்துச்சண்டை முதல் கோல்ஃப் வரை பெண்களின் ஆதிக்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :