நியூசிலாந்துக்கு சவாலான பேட்ஸ்மேன் ரோகித்தா? கோலியா? தோனியா?

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பேட்ஸ்மென்களில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கணிசமான போட்டிகளில் பேட்டிங் செய்தவர்கள் ரோகித் ஷர்மா, தோனி மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று பேர் மட்டுமே.
இவர்களில் யார் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளனர்?
ரோகித் ஷர்மா
இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 21 இன்னிங்ஸ்களில் நியூசிலாந்துக்கு எதிராக பேட்டிங் செய்த ரோகித் ஷர்மா 702 ரன்கள் எடுத்திருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக அவரது சராசரி - 35.10
ஸ்ட்ரைக் ரேட் - 77.65
இதுவரை ஒரு சதமும் நான்கு அரை சதமும் விளாசியுள்ளார்.

பட மூலாதாரம், NurPhoto
2017-ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் அவர் 138 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நியூசிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இரண்டு போட்டிகளில் அரை சதமடித்தார்.
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் நல்ல சராசரி வைத்திருக்கும் ரோகித் ஷர்மா தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக முறையே (33.30, 35.10) சராசரி வைத்திருக்கிறார்.
ஸ்ட்ரைக் ரேட்டும் மற்ற எதிரணிகளை விட நியூசிலாந்து அணியிடம் குறைவாக வைத்திருக்கிறார் ரோகித்.
நியூசிலாந்துக்கு எதிராக 14 முறை சேஸிங்கில் விளையாடியுள்ள ரோகித் ஒரு முறை மட்டும் அரை சதம் விளாசியுள்ளார்.
விராட் கோலி
வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக கோலி அதிக சராசரி வைத்திருப்பது நியூசிலாந்து அணிக்கு எதிராகத்தான்.
சராசரி
- Vs ஆஸ்திரேலியா - 53.96
- Vs வங்கதேசம் - 75.55
- Vs இங்கிலாந்து - 45.30
- Vs நியூசிலாந்து - 68.52
- Vs பாகிஸ்தான் - 48.72
- Vs தென்னாப்பிரிக்கா - 64.35
- Vs இலங்கை - 60.00
- Vs வெஸ்ட் இண்டீஸ் - 70.81
நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை ஆறு சதங்கள் அடித்திருக்கிறார் கோலி, ஏழு போட்டிகளில் அரை சதமும் விளாசியுள்ளார்.
22 இன்னிங்ஸ்களில் 1302 ரன்கள் குவித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி எடுத்த அதிபட்சம் - 154*
ஒரு முறை மட்டுமே நியூசிலாந்துக்கு எதிராக டக் அவுட் ஆகியிருக்கிறார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் கோலி வல்லவர். இந்த அணிக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் - 96.44.
2015 உலகக்கோப்பைக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடியுள்ளார் கோலி. இதில் மூன்று முறை சதம் விளாசியுள்ளார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்துக்கு எதிராக 15 முறை சேஸிங்கில் விளையாடியுள்ள கோலி ஆறு முறை அரை சதமும் இரு போட்டிகளில் சதமும் விளாசியுள்ளார்.
தோனி
நியூசிலாந்து அணிக்கு தோனி (ஒருநாள் போட்டிகளில்)
- போட்டி - 28
- இன்னிங்ஸ் - 25
- ரன்கள் - 890
- அதிகபட்சம் - 84*
- சராசரி - 49.44
- ஸ்ட்ரைக் ரேட் - 83.33
- சதம் / அரைசதம் - 0/6

பட மூலாதாரம், ADRIAN DENNIS
ஆசியாவுக்கு வெளியேயுள்ள அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்தபடியாக நியூசிலாந்துக்கு எதிராகத் தான் அதிக சராசரி வைத்துள்ளார் தோனி.
அதே சமயம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகத்தான் குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் சதமடித்ததில்லை.
2015 - 2019 உலகக்கோப்பைக்கு இடையே நியூசிலாந்துடன் 11 ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதில் ஒரு போட்டியில் மட்டும் அரை சதமடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிரான சேஸிங்கில் மூன்று முறை தோனி அரை சதம் விளாசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி மிக வலுவான பேட்ஸ்மேனாக இருக்கிறார், தோனி சேஸிங்கில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறார். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் மிகப்பெரிய சாதனைகளை படைத்ததில்லை.
இந்த சூழலில்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாக சேஸிங் செய்ய வேண்டிய சூழலில் உள்ளது இந்திய அணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












