கோரி கோஃப்: 5 முறை விம்பிள்டன் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸை வென்ற 15 வயது சிறுமி

கோரி கௌஃபை வாழ்த்தும் வீனஸ் வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

விம்பிள்டன் தொடரின் முதல்சுற்று போட்டியில், 5 முறை விம்பிள்டன் கோப்பையை வென்ற வினஸ் வில்லியம்ஸை அமெரிக்காவை சேர்ந்த 15 வயது வீராங்கனை கோரி கோஃப் வீழ்த்தி பெருங்கவனத்தை ஈர்த்துள்ளார்.

மகளிர் டென்னிஸ் பிரிவில் உலக தரவரிசை பட்டியலில் 313ம் இடத்திலுள்ள கோரி கோஃப், தன்னைவிட 24 வயது மூத்தவரான வினஸ் வில்லியம்ஸை 6:4, 6:4 என்ற நேர்செட்டில் வென்றார்.

இந்த இளம் வீராங்கனைகோரி காஃப் பிறப்பதற்கு முன்னரே, வீனஸ் வில்லியம்ஸ் இரண்டு முறை விம்பிள்டன் கோப்பை உள்பட நான்கு கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"போட்டியில் வெற்றிபெற்ற பிறகு நான் அழுதது இதுவே முதல்முறை" என்று தெரிவித்துள்ள கோரி கோஃப், வில்லியம்ஸ் சகோதரிகள் தனது முன்னோடிகள் என்று கூறியிருந்தார்.

கோரி கௌஃப்

பட மூலாதாரம், TPN/Getty Images

"இந்த வெற்றியால் நான் அடைந்த உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை" என்ற தெரிவித்த அவர், "ஒவ்வொரு புள்ளியையும் வென்றபோது என்னை நானே அமைதியாக இருந்து விளையாட வேண்டுமென கூறிக்கொண்டேன்" என்றார்.

அடுத்து விளையாடவுள்ள இரண்டாவது சுற்றில், தன்னைவிட 15 வயது மூத்தவரான ஸ்லோவாக்கியாவை சேர்ந்த மேக்டலேனா லிபாரிக்கவாவுக்கு எதிராக கோரி கோஃப் விளையாடவுள்ளார்.

கோரி கோஃப் பிறப்பதற்கு முன்னரே, 10 ஆண்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர் வீனஸ் வில்லியம்ஸ்.

கோரி கௌஃப்

பட மூலாதாரம், BEN STANSALL/Getty Images

டென்னிஸ் ராக்கெட்டை தான் கையிலெடுக்க முன்மாதிரியாக இருந்தவர்கள் வில்லியம்ஸ் சகோதரிகள்தான் என்று கோரி கௌஃப் முன்னதாக கூறியுள்ளார்.

"வீனஸ் வில்லியம் தனக்கு பாராட்டுதல் தெரிவித்த்தாக கூறிய கோரி கோஃப், அவர் தனக்கு செய்த அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி சொன்னேன்" என்றார்.

தொடக்கத்தில் வீனஸ் அடித்த பந்துகளால் சற்று தடுமாறிய கோரி கோஃப், விரைவில் சமாளித்து சிறந்த முறையில் விளையாடி அசத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :