உலகக் கோப்பை 2019: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் - லாராவை விஞ்சுவாரா கெயில் ? பிராத்வெயிட்டை சமாளிக்குமா இந்தியா?

பிராத்

பட மூலாதாரம், Michael Steele

உலகக்கோப்பை 2019 தொடரில் 34 வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மான்செஸ்டரில் மோதவுள்ளன.

5 போட்டிகளில் 1 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உள்ள இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்திக்கிறது.

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இத்தொடரில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு ரவுண்ட் ராபின் சுற்றில் இன்னும் நான்கு போட்டிகள் இருக்கின்றன. இதில் இரண்டில் வென்றால் அரை இறுதிக்கு உறுதியாக தகுதிபெற்றுவிட முடியும்.

அதே சமயம் மேற்கு இந்திய தீவுகள் இன்னும் ஆட உள்ள மூன்று போட்டிகளில் மூன்றிலும் வென்றாலும் பிற அணிகளின் ஆட்டத்தை பொறுத்தே அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் மூன்று புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அரை இறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க இன்று இந்தியாவை தோற்கடித்தே ஆக வேண்டும் எனும் நெருக்கடியில் களமிறங்குகிறது ஜேசன் ஹோல்டர் அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்தார். கெயில், பிராத்வெயிட் என அதிரடி சிக்ஸர் மன்னன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதல் : இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

5 சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

1. கிறிஸ் கெயில் இன்று 60 ரன்களை கடந்தால் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமையை பெறுவார். தற்போது லாரா 10,405 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக திகழ்கிறார்.

2. இந்திய அணித்தலைவர் விராட் கோழி இன்னும் 37 ரன்கள் எடுத்தால் வேகமாக சர்வதேச போட்டியில் வேகமாக 20000 ரன் எடுத்த வீரர் ஆவார்.

3. விராட் கோலி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஆறு போட்டிகளில் நான்கில்சதமடித்துள்ளார்.

4.கடந்த 27 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை உலகக்கோப்பைத் தொடரில் வென்றதில்லை. அதாவது கடைசியாக 1992 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வென்றது.

5. 1996,2011,2015 உலகக்கோப்பைத் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :