கால்பந்து உலகக்கோப்பை: 5 முறை சாம்பியனான பிரேசில் வெளியேறியது

பட மூலாதாரம், Getty Images
2018 உலகக்கோப்பை கால்பந்தில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியை பெல்ஜியம் அணி வெளியேற்றியது. இதன் மூலம், 1986க்கு பிறகு முதல் முறையாக பெல்ஜியம் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் பரபரப்பாக நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது.
பெர்னாண்டின்ஹோ அடித்த கோலினால், ஆட்டத்தின் தொடக்கத்திலே பெல்ஜியம் அணி முன்னிலை வகித்தது.
இந்நிலையில் மற்றொரு பெல்ஜியம் வீரரான டி பிரூனேவின் அடித்த கோல், பெல்ஜியம் அணி 0-2 என முன்னேற உதவியது. ஆட்டத்தின் முதல் இறுதி வரை கோல் அடிக்க முடியாமல் திணறியது பிரேசில் அணி.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தில் கடைசி 15 நிமிடத்தில் பிரேசில் வீரர் ஆகஸ்டோ அடித்த ஒரு கோல் மட்டுமே பிரேசில் அணிக்கு கிடைத்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் வீரர் நெய்மரால், இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
பிரேசிலின் கோல் அடிக்கும் முயற்சிகளைச் சாமர்த்தியமாக தடுத்த பெல்ஜியம் கோல் கீப்பர் திபட் கோர்டோஸ், ஆட்டத்தின் நாயகனாகப் பார்க்கப்படுகிறார்.
பிரேசில் அணி வெளியேறியதன் மூலம்,அரை இறுதியில் போட்டியிடும் 4 அணிகளும் ஐரோப்பிய நாட்டு அணிகள் என்ற நிலை 2006க்கு பிறகு உருவாகியுள்ளது.
அரை இறுதியில் பிரான்ஸ் அணியை பெல்ஜியம் எதிர்கொள்ள உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
.












