காமன்வெல்த்: தங்கத்தை தவறவிட்டார் மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரி

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் எட்டாவது நாளில், இந்தியா தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளது.
பெண்களுக்கான ஃபிரிஸ்டைல் 53கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பபிதா குமாரி கனடாவின் டயானா வாக்கரிடம் 5-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இறுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே பபிதாவின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் டயானா தொடக்கத்திலிருந்து பபிதாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கவில்லை.
இந்தியாவின் மேலும் இரண்டு மல்யுத்த வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளனர்.
இந்தியாவின் சுஷில் குமார் 74 கிலோ எடைப்பிரிவிலும், 57 கிலோ எடைப்பிரிவில் ராஹுல் அவாரே வும் இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக இந்தியாவின் தேஜஸ்வினி துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
காமன்வெல்த் தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்












