பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அணி 37.1 ஓவரில் 215 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கும் பாகிஸ்தான், தனது பரம வைரியாகக் கருத்தும் இந்தியாவுடன் மோதுமா அல்லது வங்கதேசத்துடனா என்பது நாளை தெரிந்துவிடும்.
இறுதிப்போட்டி ஓவல் மைதானத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இங்கிலாந்தின் கார்டிஃபில் நடந்த இன்றைய ஆட்டத்தில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹஸன் அலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்று தங்களது பந்துவீச்சில் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக முதலிடத்தில் உள்ளார் ஹஸன் அலி.
பாகிஸ்தான் அணியில் அஸார் அலி 76 ரன்களும் ஜமான் 57 ரன்களும் எடுத்தனர். பாபர் 38 ரன்களுடனும், ஹபீஸ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிபிசி கிரிக்கெட் செய்தியாளர் ஜொனாதன் அக்னு, இது முழுக்க முழுக்க ஒருபக்க ஆட்டமாகவே இருந்ததாகவும், பாகிஸ்தானே ஆளுமை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை மட்டுமே இங்கிலாந்தி இழந்திருந்தது. அதன்பிறகு, ஆட்டத்தை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பின்னர் பேட்டிங்கில் சிறப்பாக திறனை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி முந்தைய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற போதிலும், அதன் பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணி கடைசி 30 ஓவர்களில் ஏழு பவுண்டரிகளை மட்டுமே எடுத்தது. ஆட்டம் முழுக்க ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை.
சாம்பியன்ஸ் டிராஃபி -கூடுதல் செய்திகள்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












