லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

மேற்கு லண்டனில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த புகைப்படத் தொகுப்பு.

The fire brigade said 40 fire engines and 200 firefighters had been called to the blaze in Grenfell Tower

பட மூலாதாரம், AFP/Guilio Thubum

படக்குறிப்பு, மேற்கு லண்டனில் லாடிமர் சாலையில் உள்ள கிரென்ஃபெல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மிகப்பெரிய தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்து நள்ளிரவு 00.54 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
The fire appeared to take hold of the building in one corner before engulfing the tower block

பட மூலாதாரம், Natalie Oxford/PA

படக்குறிப்பு, வட கென்சிங்டனில் உள்ள இந்த கட்டடம் 24 மாடிகளை கொண்டது. 1974 ஆம் ஆண்டு கட்டட்பட்ட இந்தக் கட்டடத்தில் 120 வீடுகள் உள்ளன. சுமார் 500 பேர் அதில் வாழ்ந்து வருகின்றனர். நான்காவது மாடியில் முதலில் தீப்பிடித்ததாக தகவல் வெளியானது.
Flames and smoke billow out of Grenfell Tower

பட மூலாதாரம், Reuters/Toby Melville

படக்குறிப்பு, இரண்டாவது தளத்திலிருந்து கட்டடத்தின் உச்சி வரை கட்டடத்தை முழுமையாக ஆட்கொண்ட தீ வேகமாகப் பரவியது. கட்டடத்திற்குள் இருந்து பலரின் அலறல் குரல்களை கேட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன.
As dawn breaks over west London, the fire continued to rage.

பட மூலாதாரம், Reuters/Toby Melville

படக்குறிப்பு, "தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ''அந்த கட்டடம் முழுவதுமாக எரிந்துள்ளது. நான் இது போன்ற ஓர் அதிர்ச்சியான சம்பவத்தை இதுவரை நேரில் கண்டதில்லை.'' என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி.
Grenfell Tower in the early hours of 14 June

பட மூலாதாரம், AFP/Natalie Oxford

படக்குறிப்பு, ''ஒரு ஹாலிவுட் பேரழிவு படத்தில் வரும் காட்சிகளை போன்று இருந்தது'' என்று டவர் பிளாக் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
Firefighters continue their efforts to put out the fire, as daylight shows the complete destruction of Grenfell Tower

பட மூலாதாரம், Reuters/Toby Melville

படக்குறிப்பு, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வரும் நிலையில், தீ விபத்து நிகழ்வதற்கும், வேகமாக பரவுவதற்கும் எது காரணமாக இருந்தது என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. கட்டடத்திலிருந்த தீ விபத்தை எச்சரிக்கும் அலாரம் ஒலிக்கவில்லை என்று குடியிருப்புவாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
The A40 - a major route in and out of London - was closed both ways as rush hour began with smoke continuing to pour out of the building

பட மூலாதாரம், Reuters/Toby Melville

படக்குறிப்பு, லண்டன் மேயர் சாதிக் கான் இந்த தீ விபத்தை மிகப்பெரிய விபத்து என்று அறிவித்துள்ளார். அந்த பகுதியிலிருந்த சாலைகள் மற்றும் குழாய் நிலையங்கள் மட்டுமின்றி சுமார் 30 அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Firefighters use a jet to tackle the huge fire at Grenfell Tower in Latimer Road, West London

பட மூலாதாரம், getty/Leon Neal

படக்குறிப்பு, தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கரும்புகை படிந்த கட்டடம் மீது தண்ணீரை பீய்ச்சி வருகின்றனர்.
லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், REUTERS/TOBY MELVILLE

படக்குறிப்பு, லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார்.
லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், REUTERS/TOBY MELVILLE

படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் வெளியிடவில்லை.
லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, மோசமாக எரிந்து கரிக்கட்டையை போல் தோன்றும் அந்த கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழக்கூடும் என அஞ்சப்படுவதால் அருகில் இருக்கும் கட்டிடங்களில் வசிப்பவர்களும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.