குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?

கனிமொழி-குஷ்பு
படக்குறிப்பு, கனிமொழி-குஷ்பு

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

'பாஜகவில் கட்சி வளர்க்கும் நான்கு நடிகைகள்' என்று பெயர்களைக் குறிப்பிட்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாக ஒரு காணொளி சமுக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, "ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை 'கலைஞரை பின்பற்றுபவர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

குஷ்புவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது. இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை. ' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை குஷ்பு,"உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் ன்றி. ஆனால், நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காக குரல் கொடுத்தவர்," என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், சைதை சாதிக்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பிபிசி தமிழ் கேட்டபோது. " திமுகவை நாங்கள் யாரை வைத்து வளர்த்தோம். அவர்கள் நடிகைகளை வைத்து வளர்க்கின்றனர் என்றுதான் பேசினேன். மாற்றுக்கட்சி பெண்களை இழிவாக பேசுவது எங்கள் நோக்கம் கிடையாது. இதனால் குஷ்பு உள்ளிட்டவர்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

சைதை சாதிக்

பட மூலாதாரம், Facebbok

படக்குறிப்பு, சைதை சாதிக்

பரவும் காணொளியில்இருப்பது என்ன?

சைதை சாதிக் பேசியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காணொளியில், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் பாஜகவில். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.

தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சர்ச்சைக்குரிய வார்த்தை மூலம் விமரிசித்த அவர் இளைய அருணா கூட்டிய திமுக கூட்டங்கள் குறித்தும் குஷ்பு குறித்தும் என்று சர்ச்சைக்குரிய தொனியில் பேசியதாக காணொளி காட்சி உள்ளது.

இதற்கு முன்பும் அதிமுக-அமித்ஷா குறித்து இவர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும், பாஜகவில் இருக்கும் நடிகைகள் குறித்தும் இதே கருத்துகளை அவர் ஏற்கெனவே வெளியிட்ட போதும் அவை சர்ச்சை ஆயின.

அக்டோபர் 4ஆம் தேதி, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

மேலும், கட்சி உறுப்பினர்கள் கண்ணியத்துடனும், பொறுப்புடனும் குறிப்பாக உள்ளாட்சித் தலைவர்கள் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அவர்கள் தரப்பிலிருந்து தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஏதேனும் சம்பவங்கள் தமக்குத் தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சைதை சாதிக், குஷ்புவை தரக்குறைவான வகையில் பேசியதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருக்கிறது.

காணொளிக் குறிப்பு, கனிமொழி திமுக துணைப் பொதுச் செயலாளரானார் - அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: