கர்நாடகா: கோயிலுக்கு முஸ்லிம் வியாபாரி வாழைப்பழம் வழங்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு

பட மூலாதாரம், KUDUPUTEMPLE.COM
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் கடைகள் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைக்குப் பிறகு, கோயிலுக்கு வாழைப்பழம் வழங்குவதற்காக இஸ்லாமிய வியாபாரியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இப்போது கர்நாடகாவில் எழுந்துள்ளது.
மங்களூரு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடுப்பு என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப கோவிலுக்கு வாழைப்பழம் வழங்குவதற்கு குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்த முஸ்லிம் வியாபாரிக்கு ஒப்பந்தம் கொடுத்ததற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால், ஒப்பந்தம் ஜூன் 30-ம் தேதி முடிவடைகிறது என்றும், எனவே ரத்து செய்ய முடியாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
``இதுபோன்ற ஒப்பந்தங்களை இந்து விற்பனையாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும், வேறு எந்த சமூகத்தினருக்கும் கொடுக்கக்கூடாது என்று கோயில் கமிட்டியிடம் இந்து அமைப்புகள் கூறியுள்ளன'' என்று பஜ்ரங் தள் தலைவர் ஷரண் பம்ப்வெல் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
``இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டது. இன்னும் சில நாட்களில் முடிவடையும். அதுவரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்" என்று ஷரண் கூறினார்.
இருப்பினும், மாவட்ட நிர்வாகம் கர்நாடக பொது கர்நாடகாவின் கொள்முதல் சட்டத்தின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறது.
"பொதுக்கொள்முதல் சட்டத்தின்படி, எந்த விற்பனையாளரும் ஒப்பந்தம் பெறுவதை தடை செய்ய முடியாது. எண்டோமென்ட் சட்டத்தில் இந்துக் கோவிலுக்குள் உள்ள இடங்களை இந்துக்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடலாம் என்று விதிகள் மட்டுமே உள்ளன." என்று தக்சிண கன்னடா மாவட்ட துணை ஆணையாளர் கே.வி. ராஜேந்திரா கூறினார்.
`இவை இரண்டு தனித்தனி சட்டங்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விலை மிகக் குறைவானதாக இருந்தால் அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரே விஷயம் என்னவென்றால், ஒப்பந்தம் கொடுக்கும்போது, விற்பனையாளர்கள் உள்ளூர் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கலாம்'' என்றார் அவர்.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி ஆகியவை ஹிஜாவ் விவகாரம் தொடங்கியதில் இருந்தே செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன.
ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாதது அல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.

பட மூலாதாரம், KUDUPUTEMPLE.COM
இதைத் தொடர்ந்து, பல்வேறு கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகளை போடக் கூடாது என்று இந்து அமைப்புகள் பரப்புரை மேற்கொண்டன.
பப்பா என்ற முஸ்லிம் ஒருவரால் கட்டப்பட்ட துர்காபரமேஸ்வரி கோயிலிலும் இத்தகைய பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கோயில் மங்களூருவில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பப்பாவின் கனவில் தேவி தோன்றி கோயில் கட்டும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு இந்துக்குள் மாத்திரமின்றி இஸ்லாமியர்களும் வருவது வழக்கம்.
உள்ளூர் இந்து அமைப்புகள் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியிருந்தாலும், கோயில் நிர்வாகம் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












