ஹிஜாப் சர்ச்சை: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிறப்பித்த கண்டிப்பு உத்தரவு - முழு விவரம்

ஹிஜாப் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரியும், அதற்கு தடை விதித்து அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராகவும் சில மாணவிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு வரும் திங்கட்கிழமைக்கு (பிப்ரவரி 14) ஒத்திவைத்திருக்கிறது.

இதேவேளை, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்வரை ஹிஜாப் அல்லது காவி துணி அல்லது மத உணர்வைத் தூண்டும் இதுபோன்ற எவ்வித ஆடைகளையும் மாணவ, மாணவியர் அணிந்து பள்ளிக்கு செல்லக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தனது தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித், சைபுனிசா மொகிதீன் காஜி என்ற பெண் நீதிபதியை நியமித்துள்ளார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சைபுனிசா மொகிதீன் காஜி, கடந்த ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்.

ஹிஜாப் தடை விவகாரத்தில் மனுதாரர்கள் மற்றும் பிற மாணவர்கள் எந்த ஒரு மத அடையாளத்தை காண்பிக்கும் ஆடையை அணிய இடைக்கால தடை விதிப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின்போது வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதம் மற்றும் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவித்த கருத்துகள் மற்றும் உத்தரவின் விவரத்தை இங்கே வழங்குகிறோம்.

"இந்த விவகாரம் மீது நாங்கள் விசாரித்து முடிவெடுக்கும்வரை, இதில் தொடர்புடைய மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் எந்த மத அடையாளத்தை குறிப்பிடும் ஆடைகளையும் அணியக்கூடாது. அவர்கள் மத அடையாளத்தை காண்பிக்கும் ஆடையை மட்டுமே அணிந்து வருவோம் என்று வலியுறுத்தக் கூடாது. இந்த விஷயத்தில் நாங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறோம். எனவே, மத அடையாளத்தை கல்வி வளாகத்துக்குள் கடைப்பிடிக்க முற்படும் அனைவரையும் நாங்கள் முடிவெடுக்கும்வரை இந்த வாய்மொழி உத்தரவின் மூலம் கட்டுப்படுத்துகிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் தொடர்பான கேள்விகள் மற்றும் சட்டப்பிரச்னைகள் குறித்து வாதிட விரும்புகிறோம்," என்று கூறினார்.

"இந்த விவகாரத்தில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மனுதாரர்களான மாணவிகள் கல்வி நிலையங்களில் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர், பள்ளிக்கு சென்றபோதும் அவர்கள் 'வகுப்புக்கு வரவில்லை' என குறிக்கப்பட்டு வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டனர்," என்று வழக்கறிஞர் முறையிட்டார்.

கர்நாடகா கல்விச் சட்டத்தில் சீருடைகள் தொடர்பாக எந்த குறிப்பிட்ட விதியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"விதிகளை மீறினால் அதற்கு எவ்வித அபராதம் விதிக்கப்படும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் மாணவ, மாணவிகளை வகுப்புகளில் இருந்து விலக்கி வைப்பது கூட ஒருவித தண்டனைதான்," என்று வழக்கறிஞர் ஹெக்டே வாதிட்டார்.

கர்நாடகா ஹிஜாப்

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், இந்த விவகாரத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி அரசு ஆணை வெளியிடும் முன்பே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே, முதலில் அரசாணை தொடர்பான விசாரணையை நடத்தி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரியால் பரிந்துரைக்கப்பட்ட ஆடை குறியீட்டையே மாணவ சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு வர வேண்டும். அவர்களுக்கான வகுப்புகள் தொடர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் பரிசீலிக்கும் அதே சமயம், மாணவர்களின் கல்வி தொடர அனுமதிக்க வேண்டும். இதுதான் அரசின் நிலைப்பாடு," என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் தேவதத் காமத், "இந்த விஷயத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இடைக்கால நிவாரணமாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி கட்ட வாதங்களை விசாரிக்கும்போது உங்களுடைய கோரிக்கையை தெரிவியுங்கள்," என்றனர்.

காணொளிக் குறிப்பு, திடீரென சூழ்ந்த மாணவர்கள் - தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் - மாணவி முஸ்கான் பேட்டி

அப்போது வழக்கறிஞர் காமத், "ஹிஜாப் அணியும் உரிமை, கருத்துச் சுதந்திரம், தனியுரிமை மற்றும் மனசாட்சியின் உரிமைக்கு உட்பட்டது. அரசியல்வாதிகள் அல்லது எம்.பி.க்கள் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியல் சாசன உரிமைகள் மீது முடிவை எடுக்க விட்டு விட முடியாது. இறுதியில், அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பது அரசியலமைப்பு மட்டுமே," என்றார்."மாணவிகள் கல்வி கற்பது ஒரு பள்ளியில். கர்நாடகாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த கல்வி சொந்தமானது. அதை கற்க வேண்டுமானால், நீங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் சொல்ல முடியுமா?" என்று வழக்கறிஞர் காமத் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், "அரசாணை வெளியிடப்பட்டபோது, முழு சிந்தனையையும் அரசு பயன்படுத்தவில்லை. மூன்று உயர் நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் அது வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்புகளில் ஹிஜாப் அணிவது அரசியலமைப்பின் 25ஆம் பிரிவின் ஒரு பகுதியாக இல்லை. அதை வைத்து அரசு எடுத்துள்ள நிலைப்பாடு அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.

ஹிஜாப் சர்ச்சை

வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினர். இதில் முடிவெடுக்கும்வரை மனுதாரர்கள் ஹிஜாப் அல்லது வேறு எந்த மத ஆடைகளையும் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த அமர்வில் இருந்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித்தான், ஹிஜாப் வழக்கை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விசாரித்தார். பிறகு இந்த விவகாரம் அரசியலமைப்பு கேள்விகள் மற்றும் தனி சட்டம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதால் அதை அதிக நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப அவரே பரிந்துரைத்தார்.

இதேவேளை, கர்நாடகாவில் நீடித்து வரும் மோசமான நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டது.

தற்போதைய உயர் நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) திறக்கப்படவுள்ளன.

ஹிஜாப் சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது?

ஹிஜாப் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

உடுப்பி கர்நாடகாவின் வகுப்புவாத உணர்வுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.

கல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுக்கவில்லை என்றும், வகுப்பறையில் மட்டுமே ஹிஜாபை கழற்றச் சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் கருத்து வேறுவிதமாக இருந்தது. வகுப்பிற்குள் கூட ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த நிலையில்தாான், ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிப்பது, தங்களுடைய அரசியலமைப்பு உரிமையை மறுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மாணவிகள் சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மற்ற கல்லூரிகளுக்கு விரிவடைந்தது எப்படி?

உடுப்பி கல்லூரியில் மாணவிகள் போராட்டம் நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் இப்போதும் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, வேறு சில கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் காவி துண்டை தோளில் போட்டுக் கொண்டு வந்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் மற்றும் காவி நிற துண்டுக்கு அனுமதியில்லை என்று மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

கடந்த வாரம், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூரில் உள்ள கல்லூரியின் நுழைவாயிலுக்கு வெளியே ஹிஜாப் அணிந்த மாணவிகள் நிற்கும் காணொளி வைரலாக பரவியது.

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் பல்வேறு இடங்களில் ஊர்வலமாக சென்றனர். இருப்பினும், செவ்வாய்கிழமை வரை அனைத்தும் சுமூகமாகவே நடந்தன.

இந்த விவகாரத்தில் மாணவிகளின் மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரு பிரிவு மாணவ சமூகங்களைச் சேர்ந்த சிலர் இடையே கல் வீச்சுகள் நடந்தன. அது வன்முறையாக மாறி பொது சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நடந்தன. பிறகு காவல்துறையினர் தலையிட்டு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீட்டு என பலப்பிரயோகம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவர்கள் குழு ஒன்று காவிக்கொடி ஏற்றிச் சென்ற காட்சி கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.

ஹிஜாப் சர்ச்சை

மாணவி முஸ்கானின் செயல் சர்வதேச அளவில் வைராலனது

அதே நாளில் மாண்டியா மாவட்டத்தில், ஹிஜாப் அணிந்திருந்த ஒரு சிறுமியை காவி உடை அணிந்த மாணவர்கள் குழு சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டது. அவர்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் முஸ்கான் என்ற மாணவி உரத்த குரலில் அல்லா ஹு அக்பர் என குரல் எழுப்பினார். இந்த காணொளி இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வைரலானது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் முஸ்கானை 'சிங்கம்' என்று அழைத்தனர். அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் அமைச்சர்கள் இந்த சம்பவத்தின் மூலம் இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசாங்கத்தை இலக்கு வைத்து முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வலியுறுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இந்த நிலையில், கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், கல்லூரி நிலையத்துக்குள் காவி நிற ஆடையோ ஹிஜாப்போ, எவ்வித மத அடையாளத்தை காண்பிக்கும் ஆடையையும் மாணவ, மாணவிகள் அணிய தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: தேசிய கவனத்தை ஈர்க்கும் மாணவர்களின் போராட்டம்
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: