ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் ஹிஜாப் அணியும் பெண்களுக்கு ஆதரவாக தமது ட்விட்டர் பக்கத்தில் இடுகையை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ - தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மலாலாவின் கருத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திடீர் வன்முறை
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் நடவடிக்கை தங்களுடைய அரசியலமைப்பு உரிமையை மீறும் வகையிலும் இருப்பதாகக் கூறி சுஹா மெளலானா, அய்ஷா அலீஃபா ஆகிய உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த இரு அரசு பல்கலைக்கழக முன் கல்லூரி மாணவிகள், குந்தாபூரைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் இரு மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், கடலோர பகுதிகளில் இருந்து மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு வன்முறை பரவியதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ``அமைதியை பேண வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வழக்கில் தர்க்கம் மற்றும் சட்டத்தின்படி முடிவெடுப்போம். அந்த முடிவில் உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தாது. நமக்கு பகவத் கீதை என்பது அரசியலமைப்பு சட்டமே என்று நீதிபதி குறிப்பிட்டார்.
"சீருடை தொடர்பான அரசாணையை எதிர்த்து மனுதாரர்களின் வாதங்களை கேட்கும் வேளையில், நீதிமன்றத்துக்கு வெளியே வன்முறை நடப்பது கவலை தருகிறது," என நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடையாததால் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மோதலாக மாறிய ஹிஜாப் வன்முறை
முன்னதாக, பிப்ரவரி 8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில், சில கல்லூரிகளில் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக தீவிரமானது.
இதைத்தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் கல் வீச்சு மற்றும் முழக்கங்களை எழுப்பினர்.
ஷிவமோகா மற்றும் பன்னஹட்டியில் கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக இருந்தன. ஒரு காணொளியில் மாணவி ஒருவரின் பெற்றோரும் கற்களை வீசுவதை பார்க்க முடிந்தது. இதேவேளை பன்னஹட்டியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் பிபிசி இந்தியிடம் தெரிவித்தனர்.உடுப்பி மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியில் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்தபடி பள்ளிக்குள் நுழைந்தனர். அங்கு ஏற்கெனவே சில மாணவிகள் கல்லூரிக்கு வந்திருந்தனர்.
இதேவேளை ஒரு தரப்பு மாணவர்கள், காவி தலைப்பாகை அணிந்தவாறும் சால்வை போட்டுக் கொண்டும் உள்ளே நுழைய முற்பட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை.
உடுப்பியிலும், பன்னஹட்டியிலும் மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலப்பிரயோகம் செய்து காவல்துறையினர் கலைத்தனர்.
ஷிவமோகாவில் பள்ளி வளாகத்தில் உள்ளகொடி கம்பத்தில் காவி நிற கொடியை ஒரு பிரிவு மாணவர் போராட்டக்குழு ஏற்றியது. பிறகு காவல்துறையினர் தலையிட்டு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், அங்கு மாணவர்கள் தேசிய கொடியை அகற்றி விட்டு காவி நிற கொடியை ஏற்றியதாக சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக சிலர் சமூக ஊடகங்களிலும் இடுகைகளை பகிர்ந்ததால் இந்த விவகாரம் வைரலானது.
முன்னதாக, ஹிஜாப் அணிந்து வந்த மாணவி நம்மிடையே கூறுகையில், "ஆண்டு முழுவதும் ஹிஜாப் அணிந்துதான் பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டோம். கல்லூரியில் பெண்கள் பகுதியில் கூட ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று திடீரென கூறப்பட்டது.அதே நேரத்தில், காவி தாவனி அணிந்த ஒரு பெண் கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கு ஒரே சீரான ஆடை வேண்டும். நாங்கள் இதற்கு முன் இதுபோல காவி தாவனி அணிந்து வந்ததில்லை," என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பள்ளி வளாக அளவில் நடைபெற்ற இந்த போராட்டம் இப்போது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் நகரங்களில் வன்முறையாக விரிவடைந்தது.
இந்த விவகாரத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் காவி நிற ஆடையில் வருவோம் என மற்றொரு தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது.
தாவணகெரேவில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஷிவமோகாவில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலோர நகரான உடுப்பி மற்றும் குந்தாபுராவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கிய கல் வீச்சு சம்பவங்களே, வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பன்னஹட்டிக்கு பரவ காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ஷிவமோகாவில் இரண்டு கல்லூரிகளில் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அங்கு கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது.
தாவணகெரேவில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி வாகனங்களுக்கு தீவைக்க முயன்றதைத்தொடர்ந்து வன்முறை தீவிரமானது.

பட மூலாதாரம், UMESH MARPALLY/BBC
நிலைமை கட்டுக்குள் உள்ளது: காவல்துறை
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரத்தால் வன்முறை ஏற்பட்ட பல மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கர்நாடக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் பிரதாப் ரெட்டி பிபிசி இந்தியிடம் கூறுகையில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் முதலில் மாணவர்கள் கோஷம் எழுப்பினர், அதன் முதல்வர் டாக்டர் தேவதாஸ் பட் உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடுவதாக அறிவித்தார். அதன் பிறகு வெளியே வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சிறிய அளவிலான சம்பவங்கள் நடந்தாலும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்று தெரிவித்தார்.இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தாலும், அதற்கு முன்பாகவே கர்நாடக அரசு பல்கலைக்கழக முன் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிவதை கட்டாயமாக்கும் புதிய உத்தரவை சனிக்கிழமை மாநில கல்வித்துறை பிறப்பித்தது.அதன்படி மாணவ, மாணவிகளின் சீருடை எப்படி இருக்கும் என்பதை அரசு கல்வி நிறுவனங்களின் கல்லுாரி வளர்ச்சிக் குழுக்கள் முடிவு செய்யலாம். கல்லூரிகளில் சீருடை தேவையா இல்லையா என்பதை தனியார் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்.

பட மூலாதாரம், BASAVARAJ S BOMMAI
எப்படி தொடங்கியது சர்ச்சை?
சமீபத்தில், உடுப்பியில் உள்ள ஒரு முன் பல்கலைக்கழக அரசு கல்லூரியில் சுமார் அரை டஜன் மாணவிகள் முகத்தை மறைக்கும் வகையிலான ஹிஜாபை அகற்ற மறுத்ததால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இரண்டாம் ஆண்டு படித்த அந்த மாணவிகள் ஹிஜாபைக் கழற்றிய பிறகே வகுப்பில் அமர வேண்டும் என்று கல்வி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தனர்.
அந்த மாணவிகளின் பேச்சை கேட்காததால், அவர்கள் பள்ளிக்குள்ளேயே வகுப்பறைகளுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பது, பள்ளி வளாகத்தில் அமர்ந்திருப்பது என அவர்கள் அந்த காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். சிலர் தனியார் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்தனர்.
இந்த நிலையில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி சால்வையை தோளில் போட்டுக் கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளில் சிலர் காவி நிற தாவனியுடன் வந்தனர். இரு தரப்பினரும் தனியார் கல்லூரி வளாகத்தில் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக வலதுசாரி மாணவர்கள் குழுக்கள் களத்தில் குதித்தன.
இதேபோல, ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் நல அரசியல் இயக்கங்கள் களமிறங்கின. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மத ரீதியிலான பிரச்னையாக தீவிரம் அடைந்திருக்கிறது.
இத்தகைய சூழலில்தான் ஹிஜாப் அணிய அனுமதி கோரி சில மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஹிஜாப் அணிவது தங்களுடைய அரசியலமைப்பு உரிமை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
- காலநிலை மாற்றம்: 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை
- ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் திடீரென்று வைரலாகின்றன?
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன?
- நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை: திருவண்ணாமலை விவசாயிகள் கணிசமான இழப்பீடு பெற்றது எப்படி?
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














