நரேந்திர மோதி: "எது கூட்டாட்சி தெரியுமா?" - பொங்கிய பிரதமர் - ராகுல் என்ன சொன்னார்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @SANSADTV

இந்தியாவில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லாமல் இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்று நீளமான பட்டியலை அடுக்கினார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரைக்கு பிறகு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.

அப்போது அவர் எதிர்கட்சியான காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தில் கேட்பதற்கு மட்டுமல்ல, கவனிப்பதற்கும் கூட மனம் வேண்டும் என்று நரேந்திர மோதி கூறினார்.

காங்கிரஸின் சிந்தனை 'அர்பன் நக்சல்' (நகர்ப்புற நக்சல்வாதம்) போல மாறிவிட்டது என்று சாடிய அவர், நகர்ப்புற நக்சல்கள் காங்கிரஸில் புத்திசாலித்தனமாக தங்கள் சிந்தனையை புகுத்தச் செய்துள்ளனர் என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவையும் பிரதமர் மோதி விமர்சித்தார்.

"பண்டிட் நேருவுக்கு இருந்த மிகப்பெரிய கவலையே அவரது சர்வதேச அந்தஸ்துதான். அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகே கோவா இந்தியாவுடன் சேர்ந்தது. கோவாவில் சத்தியாகிரக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது கூட ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறியவர் நேரு. அவரால்தான் சுதந்திரத்துக்குப் பிறகும் கோவா கூடுதலாக 15 ஆண்டுகள் அடிமையாக இருந்தது," என்று மோதி குற்றம்சாட்டினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

நேருவை இலக்கு வைத்த மோதி

1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் ஆற்றிய தனது உரையின்போது, அங்கு நடக்கும் விஷயத்துக்கு நாம் ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்ற மாயையில் எவரும் இருக்க வேண்டாம் என்று நேரு பேசினார். கோவாவை சுற்றி ராணுவம் இல்லை. அங்குள்ள மக்கள் தான் ஒரு சூழ்நிலையை உருவாக்கி ராணுவத்தை அனுப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். அங்கு செல்ல யாராவது விரும்பினால் அவர்கள் மகிழ்ச்சியாக செல்லலாம். ஆனால் நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்களை ஒரு சத்தியாக்கிரகி என்று அழைத்துக் கொண்டால், அதன் கொள்கைகளின்படி நடக்கவும் என நேரு பேசினார். அந்த காட்சிகளை கோவாவாசிகள் மறக்க மாட்டார்கள்" என்று மோதி குறிப்பிட்டார்.

நரேந்திர மோதி

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் காங்கிரஸ் அதன் முந்தைய ஆட்சிக்காலத்தில் செயல்பட்டதாக பிரதமர் மோதி குற்றம்சாட்டி சில நிகழ்வுகளை விவரித்தார்.

"லதா மங்கேஷ்கரின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் கோவாவைச் சேர்ந்தவர்கள். அவரது இளைய சகோதரர் பண்டிட் ஹிருதயநாத் மங்கேஷ்கர் அகில இந்திய வானொலியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், வீர சாவர்க்கரின் கவிதையில் இருந்து சில வரிகளை அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிந்தைய எட்டு நாட்களுக்குள் ஹிருதயநாத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்."

"இது ஹிருதயநாத் மங்கேஷ்கருக்கு மட்டும் நடக்கவில்லை. அந்த காலத்தில் பிரபல பாடலாசிரியர் மஜ்ரூஹ் சுல்தான்புரி நேருவை விமர்சித்ததற்காக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்."

"பிரபல இசையமைப்பாளர் கிஷோர் குமார், அவசரநிலை காலத்தில் இந்திரா காந்திக்கு தலைவணங்காததற்காக இலக்கு வைக்கப்பட்டார். ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு எதிராக கண்களைக் காட்டினால் கூட அப்போது ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்."

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"கூட்டாட்சி எது தெரியுமா?"

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகள் என்று பிரதமர் மோதி கூறினார்.

நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறை குறித்து சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திமுக எம்.பி டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தனர்.

அவர்களுக்கு பதில் தரும் வகையில் இந்த விவகாரத்தை பிரதமர் மாநிலங்களவையில் பேசியதாக கருதப்படுகிறது.

"நாட்டின் கூட்டாட்சி அமைப்பு குறித்து விளக்கிய பாபாசாகேப் அம்பேத்கர், கூட்டமைப்பு என்பது ஒரு ஐக்கியம், ஏனெனில் அது உடைக்க முடியாதது என்று கூறியிருந்தார். நிர்வாகத்திற்காக நாட்டை வெவ்வேறு மாநிலங்களாகப் பிரிக்கலாம் ஆனால் நாடு ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்," என்றார் மோதி.

சிறிய பிரச்னைக்காக ஒரு மாநில முதல்வராக இருந்தவரின் பதவி பறிக்கப்பட்ட அந்த நாட்களை மறந்துவிட்டோமா என்று அவையில் பேசிய மோதி அந்த நிகழ்வை விளக்கினார்.

பிரதமரின் மகனுக்கு விமான நிலையத்தில் தனக்கு செய்யப்பட்ட வசதிகள் பிடிக்கவில்லை என்பதற்காக ஆந்திர முதல்வர் பதவியில் இருந்து ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்று மோதி குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்ட தலைவர், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களில் ஒருவரான டி. அஞ்சய்யா. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்திக்கு விமான நிலைய ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அந்த காலத்தில் சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து பேசிய நரேந்திர மோதி, எங்களுடைய சிந்தனை காங்கிரஸை போல் குறுகியதாக இல்லை. அதில் தேசிய இலக்குக்கும், பிராந்திய லட்சியத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. பிராந்திய லட்சியத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். மாநிலங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்," என்று கூறினார்.

குஜராத் முதல்வராக தாம் பதவி வகித்த காலத்தையும் பிரதமர் மோதி நினைவுகூர்ந்தார்.

"நான் முதல்வராக இருந்தபோது எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் என்பது எனக்கே தெரியும்... ஆனால் அப்போதும் கூட, இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்றால் குஜராத் வளர்ச்சியடைய வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன்," என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 100 முறையாவது குடியரசு தலைவர் ஆட்சியை காங்கிரஸ் அதன் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தியதாகவும், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது கலைத்ததாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்."காங்கிரஸ் 50 க்கும் மேற்பட்ட மாநில அரசாங்கங்களை அதன் தலைமையிலான ஆட்சியின் போது டிஸ்மிஸ் செய்தது. மாநில அரசுகளை இழிவுபடுத்துவது, சீர்குலைப்பது மற்றும் டிஸ்மிஸ் செய்வதுதான் காங்கிரஸ் உயர்நிலைக் கொள்கை ஆக இருந்தது" என்றார் மோதி. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் "கூட்டாட்சி"க்காக மட்டுமல்லாமல், "போட்டி நிறைந்த கூட்டாட்சி"க்காகவும் உள்ளது என்றும் பிரதமர் மோதி தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியை கலைத்தது யார்? முலாயம் சிங் அரசில் குழப்பத்தை விளைவித்தது யார்? இது தான் கூட்டாட்சிக்கான சரியான வழியா? அடல் பிஹாரி வாஜ்பேயி மூன்று மாநிலங்களை உருவாக்கினார்.

தெலங்கானா மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்க முற்பட்டபோது எத்தகைய மோசமான சம்பவங்கள் நடந்தன? ஆனால், வாஜ்பேயி ஆட்சியில் எத்தனை அமைதியான முறையில் மூன்று மாநிலங்களை உருவாக்கும் நடைமுறைகள் நடந்தன? அப்போது மிளகு தெளிப்பான் (Pepper spray) சம்பவங்கள் நடக்கவில்லை. நாடாளுமன்ற அறை கதவுகள் பூட்டப்பட்டு விவாதமின்றி மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்படவில்லை. எல்லாம் அமைதியாக நடந்தன.

தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு எதிராக பாஜக ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால், அது உருவாக்கப்படும் விதத்தையே பாஜக எதிர்த்தது. மக்களின் உணர்ச்சி மற்றும் அரசியல் விருப்பங்களை பயன்படுத்தி தெலங்கானா மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயன்றது. அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ததை தவிர வேறு எவ்வித பலனையும் காங்கிரஸ் பெறவில்லை.

"எங்கள் மாநிலங்கள் வளர்ச்சிக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜிஎஸ்டி கவுன்சிலின் உருவாக்கம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மத்திய நிதி அமைச்சருடன் அமர்ந்து முடிவுகளை எடுப்பார்கள். இதைவிட பெரிய கூட்டாட்சி அமைப்பு என்ன இருக்க முடியும்?

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"நான் வரலாற்றை மாற்றியதாக குற்றம்சாட்டுகிறார்கள். மக்களின் நினைவாற்றலை சரிசெய்ய விரும்புகிறோம். நாங்கள் வரலாற்றை மாற்றவில்லை, வரலாற்றை விரிவுபடுத்துகிறோம். அவர்கள் (காங்கிரஸ்) குறுகிய வரலாற்றை விரும்புகிறார்கள். 100 வருடங்கள் என்று பேசுபவர்களை 200 வருடங்கள் பின்னோக்கி கொண்டு செல்கிறோம். புகழ்பெற்ற வரலாற்றை நாம் மறக்க முடியாது. 1857ல் நடந்த போரில் நமது பழங்குடியினரின் பங்களிப்பு பற்றி நம்மால் புத்தகங்களில் படிக்க முடியவில்லை.

எங்கள் ஆட்சியில் முத்தலாக் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். இந்த நடைமுறை அமலுக்கு வந்ததால் மகள்களுக்கு மட்டுமல்ல, தந்தைக்கும் சகோதரனுக்கும் கூட நீதி கிடைத்தது. அதுவும் முஸ்லிம் ஆண்களுக்கு சாதகமாக உள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீரில் தாய் மற்றும் சகோதரிகளின் உரிமைகள் அதிகரித்துள்ளன என்றார் பிரதமர் மோதி.

இந்த நாட்டில் காங்கிரஸ் இல்லாதிருந்தால், அவசரநிலை இருந்திருக்காது, வாரிசு ஆட்சி தொடர்ந்திருக்காது, சீக்கிய இனப்படுகொலை நடந்திருக்காது, காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் இருந்திருக்காது. ஏழைகளுக்கு இலவச மின்சாரமும் தண்ணீரும் கிடைத்திருக்கும். ஆனால் காங்கிரஸால் வாரிசு அரசியலுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை" என்று மோதி சாடினார்.

உங்கள் வேலையை செய்யுங்கள் மோதி - ராகுல் காந்தி

மோதியின் இந்த உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

அதற்கு அவர், எனது கேள்விகளுக்கு அவர் (பிரதமர் மோதி) பதிலளிக்கவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் கொள்ளு தாத்தா நாட்டிற்கு சேவை செய்தார். எங்களுடைய குடும்பத்தினரும் அவ்வாறே செய்தனர். அந்த விஷயத்தில் எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை. நாங்கள் உண்மையைச் சொல்கிறோம். அதனால் காங்கிரஸை பார்த்து பாஜக பயப்படுகிறது" என்று ராகுல் குறிப்பிட்டார்."காங்கிரஸையும் நேருவையும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், நீங்கள் வகிக்கும் பிரதமர் வேலையை சரியாக செய்யுங்கள்" என்று ராகுல் மேலும் கூறினார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: