கொரோனா வைரஸ்: இறப்புகளை குறைத்து காட்டுகிறதா ஆந்திர, தெலங்கானா அரசுகள்? - பிபிசியின் அதிர வைக்கும் கள நிலவரம்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தென் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் வைரஸ் எதிர்ப்புக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவீர் ஊசி மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், ஆக்சிஜன் தட்டுப்பாடு பரவலாக காணப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பான தகவ்களை பிபிசி குழுவும் ஆய்வு செய்தது.

தெலங்கானாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 6,000க்கும் அதிகமான தொற்று ஏற்படுவதாக தெலங்கானா அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏப்ரல் 26 க்குள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது. அதில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

ஏப்ரல் 26 இரவு 8 மணி நிலவரப்படி, 2,094 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 35 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ள நிலையில், 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, தெலங்கானாவில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. அதே நேரத்தில், ஆக்ஸிஜன் பெறுவது அங்கு அத்தனை எளிதானது என்றும் சொல்ல முடியாது.

இருப்பினும், ரெம்டிசிவீர் மற்றும் பிற தேவையான ஊசி மருந்துகளைப் பெறுவது கடினமாகவே உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இவை போதுமான கையிருப்பில் உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள், இந்த ஊசிகளை வாங்குவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதுவும் பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே கிடைக்கிறது.

"சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை மிக விரைவில் தீர்த்து வைக்க முயற்சிக்கிறோம்" என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதே போல படுக்கைகள் காலியாக உள்ளன என்று அரசு கூறினாலும், தனியார் மருத்துவமனைகளில்ஆக்ஸிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகளைப்பெறுவதில் மக்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

மறுபுறம், தெலங்கானா அரசு இறப்புகளின் எண்ணிக்கையை குறைத்துச்சொல்வதாக, உள்ளூர் தெலுங்கு செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவிட் இப்போது அரசியலாகி விட்டது.தடுப்பூசிகள் மற்றும் ரெம்டிவிசீர் ஊசி மருந்துகள் தேவைப்படும் அளவைக்காட்டிலும் குறைவாகவே தெலங்கானாவுக்குஒதுக்கப்பட்டதாக மாநில சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவுக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு நீண்ட தூர இடங்களிலிருந்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தபோதிலும், தெலங்கானா தேர்தல் ஆணையம் கம்மம், வாரங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி தேர்தலை நடத்த உள்ளது. இதன் விளைவாக, தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இப்போது தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மட்டுமே அமலில் உள்ளது. ஊரடங்குஉத்தரவு நேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 11மற்றும் 12 ஆம் வகுப்புத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இவற்றைத் தாண்டி வேறு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. தெலங்கானா தவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக ஹைதராபாதுக்கு வருகிறார்கள்.இந்த கொரோனா சீற்றத்தை சமாளிக்க , ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் 11 பேர் கொண்ட குழு இரவு பகலாக பணியாற்றி வருகிறது..

ஆந்திர பிரதேசத்தில் என்ன நிலை?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஆந்திராவிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது.தொற்று எண்ணிக்கை ஒரு மாத காலத்திற்குள் 150 மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் 25 நிலவரப்படி, பரிசோதனை செய்யப்பட்ட 35,000 பேரில் 758 பேருக்கே தொற்று இருந்தது. பாசிட்டிவ் விகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆனால், ஏப்ரல் 27 க்குள்,அதிகாரபூர்வ தகவலின்படி, பாசிட்டிவ் விகிதம் 20 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சோதனைசெய்யப்பட்ட 74,435 பேரில் 11,434 க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, ஒரு நாளில் வெறும் 4 கொரோனா இறப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அதாவது ஏப்ரல் 27 அன்று 64 பேர் இறந்துள்ளனர்.இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,469 லிருந்து 99,446 ஆக உயர்ந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களின் தாக்கம் கண்கூடாகத் தெரிகிறது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்தலில் வாக்களிக்க்கும் பொருட்டு மக்கள் தங்கள் சொந்தஇடங்களுக்கு வருகிறார்கள். திருப்பதிநாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் தாக்கம், சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தெரிகிறது.

இந்தத்தேர்தலில் பிரசாரத்தை மேற்கொண்ட தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த மாவட்டங்களில் தற்போதுள்ள தொற்று எண்ணிக்கை மாநில சராசரியை விட அதிகமாகும்.

ஏப்ரல் 25 ம் தேதி ஆந்திர அரசு வெளியிட்ட கொரோனா தரவுகளின் படி, வட ஆந்திராவில்தற்போது 11,434 கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். 1755 பேர் உயிரிழந்தனர். இறப்பு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, அரசாங்க எண்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது.

பிபிசியின் கள ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. ஸ்ரீகாகுளம், சித்தூர், குண்டூர் மாவட்டங்களில் தினமும் அதிக எண்ணிக்கையில் தொற்று பதிவாகிறது.

ஆந்திர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கையில் 25%, வட ஆந்திராவில் மட்டுமே உள்ளது. இதன் விளைவாக வடக்கு ஆந்திர மாவட்டங்களுடனான தனது எல்லையை ஒடிஷா மூடிவிட்டது.

வைரஸ் பரவாமல் இருக்க மக்களும் வணிகப் பிரிவினரும் பல இடங்களில் தாங்களாகவே முன்வந்து பொதுமுடக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்த இடங்களிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் இரண்டாவது அலையின் ஆரம்பத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டதாகவும், அவர்கள் வைரஸின் கேரியர்களாக இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவமனை ஊழியர்கள்,ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டிசிவீர் ஊசி மருந்து போன்றவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சில சம்பவங்களும் தெரிய வந்துள்ளன.

விசாகப்பட்டிணம் எஃகு ஆலை, மற்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 டன் மருத்துவ ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது. ஆக்ஸிஜன் டேங்கர்களைக் கொண்ட ஒரு ரயில் இங்கிருந்து, பெரிதும் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டது.

இரண்டாவது அலையை சமாளிக்க, மாநிலஅளவிலான கட்டுப்பாட்டு மையத்தை அரசு மீண்டும் இயக்கியுள்ளது. படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில அரசு அறிவித்தது. பணியாளர்களின் ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிக்கையையும் அது வெளியிட்டது.

காணொளிக் குறிப்பு, ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அள்ளித்தரும் கேரளா - என்ன நடந்தது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: