மாநிலங்களுக்கான தடுப்பு மருந்தின் விலையை 400ரூபாயிலிருந்து 300ரூபாயாக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. முன்பை விட பாதிப்புகளும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்துள்ள செய்திகளும் வெளியாகின. கடந்த நான்கு நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
மு.க. ஸ்டாலினுடன் அரசு தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் சந்திப்பு
பட மூலாதாரம், M K STALIN
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைவதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் திங்கட்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்தபடி அவர் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், தலைமை செயலாளரும் ராதாகிருஷ்ணனும் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பு முதலில் ஒன்றாகவும் பிறகு தனித்தனியாகவும் நடந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகள், பதவி ஏற்பு நிகழ்வுக்கான உத்தேச தேதி குறித்து ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழல் குறித்து விளக்கியதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், பதவியேற்பு விழாவை ஆரவாரமின்றி நடத்துவேன் - மு.க. ஸ்டாலின்
பட மூலாதாரம், MK STALIN
படக்குறிப்பு, சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றிச்சான்றிதழை பெற்றுக் கொண்ட பிிறகு அதை செய்தியாளர்களிடம் காண்பித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாமை விட 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் ஸ்டாலினுக்கு 1,217 தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 1,05,522 வாக்குகள் கிடைத்தன. அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமுக்கு 35,138 வாக்குகள் கிடைத்தன.இதைத்தொடர்ந்து தேர்தல் வெற்றிச்சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அமைச்சரவை பதவியேற்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு மிக எளிமையாக ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
நேயர்களுக்கு வணக்கம்,
இன்று காலை 8 மணி முதல் இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறித்த கள நிலவரத்தை இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி
கடந்த வெள்ளிக்கிழமை காணொளி காட்சி வாயிலாக ஊடகங்களுடன் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,
உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்று தெரிவித்தார்.
ஆனால், முதல்வரின் கூற்றுக்கு மாறாக, உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
இந்தியாவில் மே ஒன்றாம் தேதி முதல் 18-44 வயதுக்கு உட்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு Co-Win செயலி மூலமாக இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதிவு செய்ய இயலவில்லை எனவும், `சர்வர் எரர்` என்று வருவதாகவும், சிலருக்கு ஒடிபி வரவில்லை எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
இருப்பினும் Cowin செயலியில் சிறு `கிளிச்` இருந்தாகவும் அது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பதிவு செய்யலாம் எனவும் அரோக்ய சேது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
’என் இதயத்தை யாரோ பிடுங்கி எடுப்பது போல உணர்ந்தேன்’
பல மாநிலங்களில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழந்து வரும் சூழலில் தனது கர்ப்பிணி மனைவியை இழந்த அந்த தருணம் தனது இதயத்தை யாரோ பிடுங்கியதை போல உணர்ந்ததாக கூறுகிறார் சச்சின்.
கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
இந்தியாவுக்கு தடுப்பூசி தயாரிப்புப் பணிகளுக்காக தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா, மற்ற நாடுகளின் பயன்பாட்டுக்காக தன்வசம் உள்ள தடுப்பூசி டோஸ்களை வழங்கும் திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில், 10 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் தொகை மட்டுமே கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளது. இந்த நாடு, வைரஸ் உச்சத்தை எட்டி வரும் வைரஸ் பாதிப்புகள் மற்றும் கொரோனா மரணங்களை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ரஷ்யாவின் உதவி குறித்து இந்திய பிரதமர் மோதி, ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடினார்.
“எனது நண்பர் புதினுடன் நல்லதொரு உரையாடலை மேற்கொண்டேன். கொரோனா பெருந்தொற்று குறித்து நாங்கள் பேசினோம். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ரஷ்யா உதவியதற்கு அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்தேன்,” என்று மோதி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அறிக்கையை கோருகிறது மனித உரிமை ஆணையம், குர்ப்ரீத் சைனி, பிபிசி ஹிந்தி, மத்தியப் பிரதேசத்திலிருந்து
பட மூலாதாரம், Getty Images
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் குறித்த அறிக்கையை கோரியுள்ளது மனித உரிமைகள் ஆணையம்.
கொரொனா தொற்றால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது
பல நகரங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மாநிலத்தின் நிலைமையைச் சீராக்கத் தவறிவிட்டது.
செவ்வாயன்று 13,417 புதிய நோய்த் தொற்றுகள் பதிவானதாக மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 26 நாட்களில் சில நாட்கள் தவிர, நாள் தோறும் மிக அதிகமான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.
செவ்வாயன்று தொற்று விகிதம் 22.6% ஆக இருந்தது. அதாவது சோதனை செய்து கொண்ட நால்வரில் ஒருவருக்குத் தொற்று உறுதியானது.
இந்த மாதம் ஒவ்வொரு நாளின் பதிவும் மும்மடங்கு உயர்ந்திருந்தது. திங்களன்று இருந்த 23%-ஐ விட செவ்வாய் சற்று குறைந்திருந்தது. கடந்த சில நாட்களாக இந்த விகிதம் சற்றே குறைந்தும் வருகிறது.
செவ்வாயன்று 98 பேர் கொரொனா நோயால் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் 5,319 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
1,837 என்ற எண்ணிக்கையுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இந்தோர் உள்ளது. அடுத்ததாக, 1,836 என்ற எண்ணிக்கையுடன் போபால் உள்ளது. குவாலியரில் 1,198 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது.
ஆனால், இது வரை 11,577 பேர் தொற்று குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது சற்றே ஆறுதலளிக்கும் செய்தி. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 4,25,812 பேர் குணமாகியுள்ளனர்.
ஏப்ரல் 27 அன்று மத்தியப்பிரதேசத்தில் 94,276 பேர் நோய் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இதுவரை மாநிலத்தில் இந்த அளவு உயர்ந்த எண்ணிக்கை பதிவானதில்லை என்பது சற்று கவலையளிக்கிறது
நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இந்த மாநிலத்திலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் ஊசிகளுக்காகக் கடந்த சில நாட்களாகவே மக்கள் அலையும் நிலை தான் உள்ளது.
இந்தோர் நகரில் ரத்த வங்கிகளில் பிளாஸ்மா சேகரிப்பு கிட் பற்றாக்குறை இருப்பதாகவும், பிளாஸ்மா தானம் செய்ய விரும்பும் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் மற்றொரு செய்தி பரவியது.
மருத்துவ ஆக்சிஜனை கொண்ட ஆறு டேங்கர்களைக் கொண்டு செல்லும் ரயில் செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்டின் பொகாரோவில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்குப் புறப்பட்டுள்ளது. இந்த டேங்கர்கள் 64 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொண்டு வருகின்றன.
ஒரு வாரத்திற்கு முன்பு ஷாஹ்தோலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் விநியோகத்தில் போதுமான அழுத்தம் இல்லாததால், குறைந்தது ஆறு கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாகச் செய்தி வந்தது. மருத்துவக் கல்லூரியின் டீனை மேற்கோள் காட்டி, பிடிஐ இந்தச் செய்தியை வெளியிட்டது. பின்னர் மத்திய பிரதேச மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் இந்த அறிக்கையை மறுத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இப்போது மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் மோரேனாவில் மூன்று கொரோனா நோயாளிகள் மற்றும் காட்னியில் இரு நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, மே 3 ஆம் தேதிக்குள் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
திங்களன்று நடந்த இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து சுகாதார ஊழியர்களுக்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வந்துகொண்டிருக்கும் செய்தி,
தமிழ்நாட்டில் புதியதாக 16ஆயிரத்து 665 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 308 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை கடுமையாக எழுந்ததற்கு என்ன காரணம்?
கொரோனாவின் முதல் அலை சற்று ஓய்ந்த நிலையில், கடுமையான இரண்டாம் நிலை எழுந்ததற்கு என்ன காரணம்? – விளக்குகிறார் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநராக பணியாற்றிய மருத்துவர் குழந்தைசாமி.
கொரோனா பணிச்சுமையால் அவதிப்படும் தமிழக மருத்துவ மாணவர்கள்
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மாணவர்கள், தங்களுடைய கொரோனா கால பணிக்காக, எந்தவித சிறப்பு உதவித்தொகையோ இன்சூரன்ஸ் திட்டமோ வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா முதல் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த நேரத்தில் அரசு மருத்துவர்களை போலவே ஓய்வின்றி உழைத்த மாணவர்களுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மாநிலங்களுக்கான தடுப்பு மருந்தின் விலையை குறைத்த சீரம்
மாநிலங்களுக்கான தடுப்பு மருந்தின் ஒரு டோஸுக்கான விலையை 400ரூபாயிலிருந்து 300ரூபாயாக குறைப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனாவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
”மாநிலங்களுக்கான ஒரு டோஸ் தடுப்பு மருந்தின் விலை 400ரூபாயிலிருந்து 300ரூபாயாக குறைக்கிறேன். இது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். இது மாநிலங்களின் செலவை பெரிதும் குறைக்கும். மேலும் பலருக்கு தடுப்பு மருந்து கிடைத்து, பல உயிர்கள் காப்பாற்றப் படும்,” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட்-ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரித்து வருகிறது சீரம் நிறுவனம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தடுப்பூசிக்காக சேரும் கூட்டம் - கொரோனா பரவும் ஆபத்து, அஷ்ரஃப் பதண்ணா, கேரளாவிலிருந்து
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
தடுப்பூசிக்கான இயக்கமே கேரளாவில் வைரஸ் பரவுவதை விரைவுபடுத்துகிறது என்று இந்திய மருத்துவச் சங்கம் கருதுகிறது. COVID-19 பரவல் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
"மக்கள் பெருங்கூட்டமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இந்த மையங்கள் வைரஸ் பரவலை வேகப்படுத்துகிறது.” என்று கேரளாவில் உள்ள ஐ.எம்.ஏ இன் செயலாளர் டாக்டர் பி.கோபிகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இதுபோன்ற சில நிகழ்வுகளை நான் கண்டுள்ளேன். வைரஸின் புதிய பிறழ்வு வகைகள் மிக வேகமாகப் பரவுவதால் இந்தத் தடுப்பூசி போட வரும் மக்களிடையே இதன் பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும்”
திங்களன்று, மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு தடுப்பூசி மையத்தில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த நான்கு முதியவர்கள் மயங்கி விழுந்தனர்.
சுமார் 2,000 பேர் ஆன்லைனில் பதிவு செய்து, நகரின் உள்ளரங்க அரங்கத்தில், தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் வெளியே வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.
பலர் அதிகாலையிலேயே வந்து காத்திருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரம் கழித்துத் தான் தடுப்பூசி வழங்கல் தொடங்கப்பட்டது.
"இது திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போலவே ஆபத்தானது. அங்கு கூட, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இப்போது 50 மற்றும் 20 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது" என்று ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிகுமார் கூறினார்.
அரங்கங்கள் மற்றும் சமூக அரங்குகளில் செயல்பட்டு வரும் இந்த தடுப்பூசி மையங்களை மூடிவிட்டு கிளினிக்குகள் மூலம் விநியோகிக்குமாறு ஐ.எம்.ஏ இப்போது மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு அடுத்த படியாக, அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் இப்போது கேரளாவில் தான் பதிவாகிறது.
உயிரிழப்புகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து
இறப்பு விகிதம் கேரளாவில் 0.35 சதவீதம் என்ற கணிசமான குறைந்த அளவாகவே உள்ளது. மொத்த இறப்புகள் இப்போது 5,170 ஆகக் கணக்கிடப்படுகின்றன, இருப்பினும் இந்த எண்ணிக்கை ஒரு சில நிபுணர்களால் மறுக்கப்படுகிறது.
மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன், 510 மெட்ரிக் டன் உள்ளது, அதன் அதிகபட்ச தினசரித் தேவை 100 மெட்ரிக் டன்.
தினசரி உற்பத்தி திறன் 205 மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில் 149 மெட்ரிக் டன் தமிழ்நாட்டின் எல்லையிலுள்ள பாலக்காட்டில் உள்ள ஐ நாக்ஸ் என்ற ஆலையில் தயாரிக்கப்பட்டு, இரு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் இப்போது ஆக்ஸிஜன் கையிருப்பை 1,000 மெட்ரிக் ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். ஆக்ஸிஜன் கேரியர்களுக்கு ஆம்புலன்ஸின் நிலையைத் தெரிவித்து மாநிலம் முழுவதும் தடையின்றி ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் மதுரை அதிகரித்தது எப்படி?
நாடு முழுவதும் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறிவரும் நிலையில்,மதுரை அரசு தலைமை மருத்துமனையில் ஆக்சிஜன் சேமிப்பு வசதி அதிகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது எப்படி?
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று. 2,500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் செயல்படும் இந்த மருத்துமனை, இந்தியாவில் 24 மணி நேரமும் அனைத்து பிரிவுகளிலும் மூன்றாம் நிலை மருத்துவ வசதி கிடைக்கும் வெகுசில மருத்துவமனைகளில் ஒன்று.
2020ஆம் ஆண்டில் கொரோனா உச்சகட்டத்தில் இருந்த ஜூலை மாதத்தில் இந்த மருத்துவமனையில் 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. இதுகுறித்து மேலும் விரிவாக படிக்க
பட மூலாதாரம், பிபிசி
இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?
கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சிலர் நடிகர் விவேக் மரணத்திற்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆர்வத்துடன் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், பக்க விளைவுகள் பற்றிய பயம் அதிகரித்துள்ளதால், தயக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவர்கள்.
இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமா அல்லது இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. இரண்டாவது தடுப்பூசி செலுத்துவது குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டோம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
இறப்புகளை குறைத்து காட்டுகிறதா ஆந்திர, தெலங்கானா அரசுகள்?
தென் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் வைரஸ் எதிர்ப்புக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவீர் ஊசி மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், ஆக்சிஜன் தட்டுப்பாடு பரவலாக காணப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பான தகவ்களை பிபிசி குழுவும் ஆய்வு செய்தது.
தெலங்கானாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 6,000க்கும் அதிகமான தொற்று ஏற்படுவதாக தெலங்கானா அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏப்ரல் 26 க்குள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது. அதில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 26 இரவு 8 மணி நிலவரப்படி, 2,094 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 35 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ள நிலையில், 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு அங்கு பொதுமுடக்கம் நீடிக்கப்படும் எனவும் ராஜேஷ் டோபே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் மாநிலம் மகராஷ்டிரா. அங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
COWIN: எப்படி பதிவு செய்வது?
பட மூலாதாரம், Getty Images
யார் வேண்டுமானாலும் கோவின் 2.0 வலைதளத்தின் மூலம் அல்லது ஆரோக்ய சேது மூலம் தடுப்பூசிக்காகத் தங்கள் அல்லது பிறரின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
முதல் டோஸ் மருந்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தன்னிச்சையாகவே இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படும். ஆனால் முதல் டோஸ் மருந்து செலுத்திக் கொண்டதில் இருந்து 29-வது நாள் முதல் 42-வது நாளுக்குள், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு எப்போது வேண்டுமானாலும் ஒரு தேதியைப் பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.
எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டது ஏன்?, ஆஷிதா நாகேஷ், பிபிசிநியூஸ்,லண்டன்
கர்நாடகாவில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த சமயத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கூறப்பட்டது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார் பேராசிரியர் அனுப் மலானி.
அவரின் ஆய்வில், கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இறுதியில் 31.5மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று தெரியவந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவில் வெறும் 8 மில்லியன் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது.
கர்நாடகாவில் அதே பிரச்னை இப்போதும் தொடருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில். அங்கு குறைந்த அளவிலான பரிசோதனை வசதிகளே உள்ளன.
உலக சுகாதார அதிகாரிகள் மக்கள் தொகை அளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“இது வானிலை நிலையங்களைபோல செயல்பட வேண்டும். அங்கு எங்கு நெருக்கடி உள்ளது அங்கு மட்டும் பரிசோதனை செய்வதில்லை. அனைத்து இடங்களிலும் பரிசோதிக்கப்படும்.”
“இந்தியாவில் ஆழமாக சென்று பதிவு செய்யும் அமைப்பு இல்லை. அதை மூன்றாம் அலை வருவதற்குள் சரி செய்ய வேண்டும்.” என்கிறார் மலானி.