உலக ராணுவ பலத்தில் 4ஆம் இடத்தில் இந்தியா - யார் முதலிடம் தெரியுமா?

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

உலகின் வலுவான ராணுவ படை பலத்தில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளதாக மிலிட்டரி டைரக்ட் என்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையதளம் மதிப்பிட்டிருக்கிறது.

அந்த இணையதளத்தில் பல்வேறு உலக நாடுகளின் ராணுவ படை பலம், அவற்றின் எண்ணிக்கை மற்றும் ஆற்றல் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

அதில் உலகின் முன்னணி வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா, பாதுகாப்பு படை பலத்தில் இரண்டாமிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தனது முப்படைகளுக்காக அமெரிக்கா ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டை ஒதுக்குகிறது. இதற்காக அந்நாட்டுக்கு 74 புள்ளிகள் என வகைப்படுத்தியிருக்கிறது மிலிட்டரி டைரக்ட் இணையதளம்.

சீன கடற்படை

பட மூலாதாரம், Getty Images

இதேபோல, ரஷ்யாவுக்கு 69 புள்ளிகள், பிரான்ஸுக்கு 58 புள்ளிகள், பிரிட்டனுக்கு 43 புள்ளிகள் என அந்த இணையதளம் வகைப்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படும் நாடுகளின் பட்ஜெட், ராணுவ வீரர்களின் செயலாற்றல், நாட்டின் மொத்த பரப்பளவு, கடல், நிலம், வான், அணு ஆயுத வளங்கள், படை வீரர்களின் சராசரி ஊதியம், பாதுகாப்பு தளவாட சாதனங்கள் ஆகியவை அடிப்படையில் இந்த புள்ளிகள் கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த இணையதளம் கூறுகிறது.

ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

உலகிலேயே அதிக ராணுவ படை பலம் வாய்ந்த நாடாக சீனாவை அந்த இணையதளம் பட்டியலிட்டிருக்கிறது. அந்நாட்டுக்கு 100க்கு 82 புள்ளிகளை அந்த இணையதளம் வழங்கியிருக்கிறது.

பட்ஜெட்டில் முதலிடம் யாருக்கு?

சீன கடற்படை

பட மூலாதாரம், Yuri Smityuk

உலகிலேயே ராணுவ பட்ஜெட்டை அதிக அளவில் ஒதுக்கும் நாடாக பட்டியலிடப்பட்டுள்ள அமெரிக்கா, ஆண்டுக்கு 732 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. அதைத்தொடர்ந்து சீனா 261 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. இந்த வரிசையில் இந்தியா 71 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. உலக அளவில் கடல் வழி பாதுகாப்பில் சீனா முதலிடத்தையும், வான் வழி பாதுகாப்பில் அமெரிக்கா முதலிடத்தையும், தரை வழி பாதுகாப்பில் ரஷ்யா முதலிடத்தையும் பிடித்துள்ளன.

வான் பாதுகாப்பில் சக்தி வாய்ந்த நாடாக திகழும் அமெரிக்காவசம் 14,141 விமானங்களும், ரஷ்யாவிடம் 4,682 விமானங்களும், சீனாவிடம் 3,587 விமானங்களும் உள்ளன. தரை வழி தளவாடங்களில் முதலிடம் வகிக்கும் ரஷ்யாவிடம் 54,866 தளவாடங்களும், அமெரிக்காவிடம் 50,326 தளவாடங்களும் சீனாவிடம் 41,641 தளவாடங்களும் உள்ளன.

கடல் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் சீனாவிடம் 406 போர்க்கப்பல்களும், ரஷ்யாவிடம் 278, அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தலா 202 போர்க்கப்பல்கள் உள்ளதாக மிலிட்டரி டைரக்ட் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: