தீப்பெட்டி கணேசன் மரணம் - வறுமையால் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய தமிழ் சினிமா கலைஞன்

பட மூலாதாரம், TWITTER
தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலமானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தபோதும், தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார் கணேசன். சிறு, சிறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரைச் சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டுமே என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
தன் மீது பாசமாக உள்ள அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என வேறொரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், தீப்பெட்டி கணேசனின் இறப்புச் செய்தி, அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
பிற செய்திகள்:
- செம்மர கடத்தல் தாக்கம்: “அப்பா எங்கம்மா… என்ன பார்க்க வரமாட்டாரா?” - தந்தையை பறிகொடுத்த குழந்தைகள்
- "நிலத்தை இழந்தோம் அகதிகளாக": பொன்னேரி வாக்காளர்களின் கண்ணீர் கதை
- "மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல்" - அமித் ஷாவின் அதிரடி வாக்குறுதி
- "1996" தேர்தல்: 4ஆவது முறையாக முதல்வரான கருணாநிதி - சுவாரஸ்ய வரலாறு
- இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: