இந்தியாவில் 3-ம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்வு- எதற்கெல்லாம் அனுமதி?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாதம் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. ஏற்கனவே அன்லாக் 1, 2 என்ற பெயர்களில் இரண்டு கட்டமாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாம் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளது.
புதிய வழிமுறைகள் என்னென்ன?
1) இரவு நேர ஊரடங்கு ரத்து
2)ஆகஸ்ட் 5 முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி.
3) சமூக இடைவெளியைப் பின்பற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.
4)கொரோனா தொற்று அதிகமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை கட்டுப்பாடுகள் இருக்கும்.
5) ஒரு மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் செல்லும் தனிநபர்களும், சரக்கு போக்குவரத்துக்கும் இ-பாஸ் தேவையில்லை.
6)பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மூடல்.
7) மெட்ரோ ரயில், திரையரங்கு, நீச்சல் குளம், மதுபான விடுதி, அரங்கம் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
8)சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, மதம் சார்ந்த மக்கள் கூடலுக்கு அனுமதி இல்லை.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் இரண்டு மலைகளைக் காப்பாற்றிய மக்கள் சக்தி: EIA 2020 வந்தால் என்ன மாறும்?
- ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க தாமதம் ஏன்? ஆளுநர் தகவல்
- ரஃபால் போர் விமானங்கள் இந்தியா வந்திறங்கின: உற்சாக வரவேற்பு
- புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: கொரோனாவை சாதகமாக கருதுகிறதா அரசு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












