உர்ஜித் படேல்: நரேந்திர மோதி அரசை தனது புத்தகத்தில் விமர்சித்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்

பட மூலாதாரம், Getty Images
வங்கிகள் திவால் சட்டத்தை நீர்த்துப் போக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அரசு இயற்றிய சட்டத்தின் காரணமாகவே மத்திய ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகக் கூறி உள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்.
முதல் ராஜிநாமா
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் 2018ஆம் ஆண்டு திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்ததாக அப்போது அவர் தெரிவித்து இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில வருடங்களாக ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணித் தான் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் மோதி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் ராஜிநாமா செய்தார்.
உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராவார்.
எதிர்ப்பின் குரல்
இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன், "டாக்டர் உர்ஜித் படேல் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததற்குக் காரணமான சூழ்நிலை என்ன என நாம் கேட்கவேண்டும். ஆர்பிஐயுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராஜிநாமாவுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரு அரசு ஊழியர் அல்லது ஒழுங்கு முறைப்படுத்தும் பணியைச் செய்பவர் ராஜிநாமா செய்வதென்பது உண்மையில் எதிர்ப்பு தெரிவித்தலின் ஒரு குறிப்பு'' என்று தெரிவித்திருந்தார் ரகுராம் ராஜன்.
ஓவர் ட்ராஃப்ட்
உர்ஜித் பட்டேல் தனது 'ஓவர் ட்ராஃப்- சேவிங் தி இந்தியன் சேவர்' புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அந்த புத்தகத்தில் உர்ஜித் பட்டேல் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தங்களது அரசியல் தேவைகளுக்காக வங்கிகளை அரசுகள் பயன்படுத்திக் கொள்வதாக உர்ஜித் பட்டேல் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












