கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு? - முழுமையான தகவல்கள்

கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஒன்றிய அரசு நான்காவது முறையாக சமூக முடக்கத்தை நீடித்துள்ளது. இந்த சமூக முடக்கமானது மே 31 வரை தொடரும். அதே நேரம் இந்த சமூக முடக்கத்தில் சில தளர்வுகளையும் அளித்துள்ளது இந்திய அரசு.

சரி. எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன ? எதற்கெல்லாம் தளர்வு? என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

பட மூலாதாரம், Getty Images

எதற்கெல்லாம் தளர்வு?

  • திருமண விழாக்களில் 20 பேர் கலந்து கொள்ள இதுவரை அனுமதி இருந்தது. இனி 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்கிற வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சமூக இடைவெளியைக் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும்.
  • விளையாட்டு வளாகங்கள், மைதானங்களைத் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  • மாநிலங்கள் இடையேயான பஸ் போக்குவரத்து பற்றி சம்மந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு எடுத்து இயக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.
  • ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி முறை தொடர அனுமதி உண்டு.
கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

பட மூலாதாரம், Getty Images

  • ஆம்புலன்ஸ் விமான சேவை, உள்துறை அமைச்சக நோக்கங்களுக்கான, பாதுகாப்பு காரணங்களுக்கான விமான சேவை அனுமதிக்கப்படுகிறது.
  • மாநிலங்கள் இடையே பரஸ்பர சம்மதத்துடன் பயணிகள் வாகனம், பஸ் போக்குவரத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களை சம்மந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வரைமுறைகளுக்கு ஏற்ப இனி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
  • சிவப்பு, ஆரஞ்சு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் எல்லை நிர்ணயிப்பதை மாவட்ட நிர்வாகங்களே மேற்கொள்ளலாம்.
Banner image reading 'more about coronavirus'
Banner

தொடரும் கட்டுப்பாடு

  • உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு தடை நீடிக்கிறது.
  • மெட்ரோ ரெயில் சேவைக்கு தடை நீடிக்கிறது.
  • பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.
  • ஓட்டல்கள், உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட தடை தொடருகிறது. 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
  • திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், உல்லாச பூங்காக்கள், நாடக அரங்குகள், மது விடுதிகள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றுக்கு தடை தொடர்கிறது.
கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

பட மூலாதாரம், Getty Images

  • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மத நிகழ்ச்சிகளில் கூடுவதற்கு தடை தொடர்கிறது.
  • வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். மதக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் உள்ளேயும், வெளியையும் மருத்துவ காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் சென்றுவர அனுமதி கிடையாது.
  • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய, மருத்துவ காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லலாம்.

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை

  • பொது இடங்களில், பணியிடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
  • பொது இடங்களில், வேலைபார்க்கும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
கொரோனா தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

பட மூலாதாரம், Getty Images

  • எல்லா இடங்களிலும், போக்குவரத்து சாதனங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • பொது இடங்களில் மது பானங்கள் அருந்தக்கூடாது. புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
  • கடைகளில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கடைகளில் அனுமதி இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: