மகாராஷ்டிரா சிவசேனை அரசில் தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி: காங்கிரசுக்கு சபாநாயகர்

உத்தவ் - சரத் பவார்.

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சித் தலைமையில் அமையவுள்ள புதிய மாநில அரசாங்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்; காங்கிரஸை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் தெரிவித்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப்ரஃபுல் படேல்.

சிவசேனை தலைமையிலான வளர்ச்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் புதன்கிழமை இரவு இதனை அறிவித்தார் படேல்.

துணை சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள் என்பது குறித்து இன்று புதன்கிழமை இரவு முடிவு செய்யப்படும் என்றும் ப்ரஃபுல் பட்டேல் கூறினார்.

நாளை வியாழக்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக, சிவசேனையை சேர்ந்த ஆதித்ய தாக்கரே டெல்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீட்டுக்கு வந்திருந்தார். ஆசி பெற வந்ததாகத் தெரிவித்த அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: