கடந்த 6 மாதமாக ட்விட்டரில் ஒரு ட்வீட் கூட செய்யவில்லையா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆறு மாதமாகப் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை டெலிட் செய்ய இருக்கிறது ட்விட்டர் நிறுவனம். டிசம்பர் 11க்குள் லாகி இன் செய்யப்படும் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே தப்புமென்றும் அந்நிறுவனம் சொல்லி உள்ளது.
இது போன்ற நடவடிக்கையை ட்விட்டர் எடுப்பது இதுவே முதல்முறை.
ட்விட்டரின் கொள்கைகள் மாறி உள்ளன. வெகுநாட்களாக ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள், இந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாகக் கூறுகிறது ட்விட்டர் நிறுவனம்.
செயலற்ற கணக்குகளை ரத்து செய்வதன் மூலம் ட்விட்டர் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியுமென அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது, செயல்படாத கணக்குகளை பின் தொடர்பவர்களுக்கு இது உதவுமென விவரிக்கிறார் அவர்.
முதல்கட்டமாக அமெரிக்காவுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட கணக்குகள் முடக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஆறுமாதத்தில் ஒரு தடவையாவது ட்விட்டர் கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறது அந்நிறுவனம்.
இந்த யோசனையைக் கூறியதே பயனர்கள் என்கிறது அந்நிறுவனம்.
பயன்பாட்டில் இல்லாத யூஸர்நேம்களை தங்களுக்குத் தர வேண்டுமென தங்களுக்கு வழங்க வேண்டுமென சில பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்தே ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறுகிறது.

இது குறித்த அறிவிப்பையும் மின்னஞ்சல் மூலமாகப் பயனர்களுக்குத் தெரிவித்துவிட்டது ட்விட்டர் நிறுவனம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












