போலிச் செய்திகள்: பிபிசியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகள்

பட மூலாதாரம், SEBASTIEN BOZON/AFP/GETTY IMAGES
இந்தியாவில் போலிச் செய்திகள் பற்றியும், சாதாரண குடிமக்கள் பற்றியும், எங்களுடைய தகவல்கள் பகுப்பாய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்தவற்றைக் கூறப் போகிறோம். ஆறு பிரதான பகுதிகளாக இந்தத் தகவல்களை நாங்கள் அளிக்கப் போகிறோம்.
அவையாவன:
1.உற்பத்தியாகும் இடம்: போலிச் செய்திகள் பரவுவதற்குத் தேவையான சூழ்நிலைகள் என்று எங்கள் பகுப்பாய்வில் நாங்கள் எல்லைக் கோடிட்டு காட்டியிருக்கிறோம். செய்தி சூழல்நிலையில் இருந்து பகிர்தல் தளங்கள் மூலமாக குடிமக்களின் பகிர்தல் உபாயங்களுக்கான உளவியல் காரணங்கள் வரை ஆறு `சூழ்நிலைகளை' நாங்கள் எல்லைக் கோடிட்டு காட்டியிருக்கிறோம்.
2.பகிர்தலின் பின்னணியில் உள்ள செயல் நோக்கங்கள்: மக்கள் ஏன் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இதில் நாங்கள் முயற்சித்திருக்கிறோம். இடைமுகமாக, இந்தியாவில் இன்றைக்கு உருவாகி வரும் சமூக-அரசியல் அடையாளங்கள் பற்றி எங்களுடைய கவனிப்புகளை எல்லைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். ஏனெனில், குடிமக்களின் பகிர்தல் பழக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
3.போலிச் செய்தி என்றால் என்ன: குடிமக்களின் பார்வையில் இருந்து இந்தக் கேள்விக்கு இதில் பதில் கூறியிருக்கிறோம்.
4.உறுதியான போலிச் செய்தித் தகவல்கள் பற்றிய விவரிப்புகள்: செயல்பாட்டு வகையில் குறுகிய - கண்ணோட்ட சிந்தனை , விளைவுகளை ஏற்படுத்துவது குறித்த விவரிப்புகளை இதில் நாம் புரிந்து கொள்கிறோம். (இடது மற்றும் வலதுசாரி கருத்துள்ள போலிச் செய்தித் தகவல்களை நாங்கள் காண்கிறோம்)
5.உண்மை ஆய்வு செய்தல் மற்றும் சரிபார்த்தல்: சரிபார்த்தல் பழக்கம் ஏன் குறைவாகவும், குறிப்பிட்டதாகவும் உள்ளது என்பது பற்றி இதில் விளக்கி இருக்கிறோம்.
6.6. சமூக ஊடகங்களில் (Twitter மற்றும் Facebook) போலிச் செய்தி சூழல் அமைப்பு : போலிச் செய்திக்கான சூழல் அமைப்பு இருக்கிறதா என்றும் போலிச் செய்திகளைப் பகிர்வதாகக் கண்டறியப்பட்ட தகவல் ஆதாரங்கள், அரசியல் மற்றும் ஊடக நபர்களுடன் இடைவினை ஆற்றுவது பற்றியும் புரிந்து கொள்வதற்கு இதில் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.
7.முடிவுகளும், மேற்கொண்டு ஆய்வுக்கான ஆலோசனைகளும்.
உற்பத்தியாகும் இடம்
செய்திகளை சரிபார்க்காமல் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள்
I. உற்பத்தியாகும் இடம்: செய்திகளை சரிபார்க்காமல் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள்
I.1. பல்வேறு வகையான செய்திகளுக்கு இடையிலான கோடுகள் மங்கலாகிவிட்டன
போலிச் செய்திகள் பற்றி கருத்தாடல் செய்யும்போது, இந்த வார்த்தையின் இரண்டு பகுதிகளுமே சம அளவு முக்கியமானவையாக உள்ளன.
எனவே முதலில், பொய்யானவை அல்லது மெய்யானவையா என்ற விஷயத்துக்குச் செல்வதற்கு முன்னதாக, `செய்தி' என்ற வார்த்தையை மக்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், CHRIS JACKSON/GETTY IMAGES
`செய்தி' என்ற வார்த்தைக்கு எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன: ஒரு புறத்தில், உங்களுடைய செய்தித்தாள், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் நீங்கள் பெறக் கூடிய செய்தி; மறுபுறத்தில் உங்களைப் பற்றிய, உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றும் உங்களுக்கு முக்கியமானவரைப் பற்றிய தகவலும் கூட செய்தி தான். நிறுவனம் சார்ந்த செய்தி அளிப்பவர்கள் - மற்றும் ஊடக ஆய்வாளர்கள் - என்ற வரம்பில் கூட, எப்போதுமே `செய்தி' மற்றும் `சிறப்புக் கட்டுரை' என்பதுடன், `பரபரப்பான செய்தி' மற்றும் `சாதாரண செய்தி'46 என்று வித்தியாசங்கள் உள்ளன. இதில் பல எல்லைக் கோடுகள் செய்தித்தாள்களில் இருந்து உருவாகி, தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்ட போது அங்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் செய்திகளுக்கு முக்கியமான களமாக முகநூல் உருவான பிறகு - `செய்திப் பதிவு' என்பதன் மைய நிலை - பரபரப்பு செய்தி மற்றும் சாதாரண செய்தி, `செய்தி' மற்றும் `சிறப்புக் கட்டுரை' ஆகியவை ஒன்றாகக் கலந்துவிட்டன; மேலும் உங்களுடைய ஒன்றுவிட்ட உறவினரின் பிறந்த நாள் பற்றிய `செய்தி' ஒரு சர்வாதிகாரியின் சமீபத்திய சர்வாதிகார நடவடிக்கைகள் சௌகரியமாக ஒன்றோடு ஒன்று கலந்துவிடும் களத்தையும் அது உருவாக்கியுள்ளது.
மூன்றாவது எல்லைக்கோடு நமது தேவைகளுக்கானதாக மிகவும் முக்கியமானதாக இருக்கிறது - `உண்மை' (அதாவது, உள்ளபடி தகவலைத் தருவது) மற்றும் `கருத்து' என்பதைப் பற்றியது. இதில் `பகுப்பாய்வு' என்ற வகைப்பாடு இதற்கிடையில் எங்கோ உறைந்து கிடக்கிறது.
உண்மைத்தன்மை மற்றும்/அல்லது பாரபட்சமற்ற என்ற தர நெறிகளை ஒட்டிய, வழக்கமான, கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய இதழியலின் முக்கிய அம்சமாக இது இருந்து வருகிறது.47 உண்மை/தகவல் அளித்தல் மற்றும் கருத்துக்கு இடையில் உள்ள இந்த தெளிவான மாறுபாடு, டிஜிட்டல் செய்தி தகவல் ஆதாரங்களால், குறிப்பாக முகநூல் போன்ற சமூக தளங்களால் முழுமையாகத் தகர்க்கப் பட்டுள்ளது.
சாதாரண குடிமக்கள் என்ற நிலையில் இது சில மிக முக்கியமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது. செய்தி மற்றும் கருத்துக்கு இடையே பாரம்பரியமான வேறுபாட்டை தலைகீழாக மாற்றிக் கொள்ளும் போக்கு, இந்தியாவில் நம்மிடம் கருத்து தெரிவித்தவர்கள் மத்தியில் இருப்பதை நாங்கள் கண்டோம்.
கருத்து தெரிவித்தவர்களுக்கு, முதலில் செய்தி என்பது முதன்மையாக இரண்டு வகைகளாக உள்ளன. முதலாவது, தலைப்பு மூலம் தெரிவிக்கப்படும் `உண்மை' தொடர்பான `தகவல்' என்ற வகையில் குடிமக்கள் பார்க்கிறார்கள். பெரும்பாலும் அப்படி இருக்கிறது.
அடுத்து உண்மையான விஷயத்தை `செய்தி' என பார்க்கிறார்கள். உண்மைகளின் மீது - கருத்துகளைத் சேர்த்து - அல்லது குறைந்தபட்சம் நிலைப்பாடை சேர்த்து - வெளியானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது, மற்றும் பெரும்பாலும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. அதனால் உண்மைகளின் மீது கருத்துகளை சேர்த்து வழங்குவது செய்தியாக இருக்கிறது.
முக்கியமாக, `எனக்கு என்ன சொல்கிறது' என்பதாகவும், `எனக்கு என்ன உணர்வைத் தருகிறது' என்பதாகவும் இப்போது செய்தி கருதப்படுகிறது என்பது முக்கியமானதாக உள்ளது.

பட மூலாதாரம், ROB STOTHARD/GETTY IMAGES
`மக்களுக்கு ஆர்வத்தை உருவாக்கும் கட்டுரைகள்' அல்லது பொதுவாக சாதாரண செய்திகள் என்பவை செய்திகளின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன.
அரசியல் மற்றும் கொள்கை குறித்த தகவல்களை அளிப்பது ஆர்வம் தராத மற்றும் பகுப்பாய்வு வகையிலானவையாக, ஆனால் சில உணர்வுகளை வெளிப்படுத்துபவையாகக் கருதப்படுகின்றன.
வேறுவகையில் சொல்வதானால், செய்தி என்பது தகவல் அளிப்பதாக மட்டுமின்றி, பொழுதுபோக்கும் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது முற்றிலும் புதிய செயல்பாடு அல்ல. பல்வேறு வகையான செய்திகளுக்கு இடையிலான எல்லைக் கோடுகள் மறைந்துவிட்ட நிலை - பெரும்பாலான எல்லைக்கோடுகள் செய்திகளைப் பெறுபவர்களின் தேவைகளைவிட செய்தி நிறுவனங்களின் தரநெறிகளை குறித்ததாக இருந்தாலும் - டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியைக் காட்டுபவையாக உள்ளன. இப்போது சமீப காலமாக, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு இடையிலான வித்தியாசம் மங்கி வருவது பற்றி ஊடக அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய `தகவல் பொழுதுபோக்கு' மற்றும் `சினிமாத்தனமான செய்திகள்' என்று மாறி வருவது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அது இந்த அறிக்கையின் கண்ணோட்ட வரம்புக்கு வெளியே நம்மை அழைத்துச் சென்றுவிடும். எனவே அதுபற்றி நாம் அதிகம் விவாதிக்கவில்லை:
இந்திய பிராந்திய மொழி செய்தி ஊடகங்களின் நெறிமுறைகள் மற்றும் தர நெறிகள் குறித்த `பிரதானமான' விஷயங்களாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக இது உள்ளதாக எங்களுக்குத் தோன்றுகிறது. இது இந்தியாவில் ஆங்கில மொழி ஊடகத்தில் இருந்து காலங்காலமாக மிகவும் வேறுபட்டு இருந்திருக்கிறது.
செய்திகள் என்பதற்கான வரையறை விரிவானதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருந்தாலும், குடிமக்களுக்கு முக்கியமான எதுவுமே `செய்தி' என பார்க்கப்படுவது புதியதாக இருக்கிறது.
தீவிரமான இதழியல் நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்கள், நம்பகமான நன்மதிப்பு பெற்ற நிறுவனங்கள், துல்லியமானவற்றைத் தரும் மரபைக் கொண்டவையா என்ற விஷயங்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல் - யாரைப் பற்றிய தகவலாக இருந்தாலும் - அவற்றைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்கும் காரணமாக இருக்கிறது.
எங்கள் தேவைகளுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, மக்கள் வித்தியாசப்படுத்தி பார்ப்பதில்லை - அல்லது அதிக துல்லியமான சிரமமானவை அல்லது அதிக தகவல் ஆதாரம் கொண்டவை - செய்திகளின் நிறைய தகவல் ஆதாரங்களுக்கு இடையே வித்தியாசங்களை (மேலே வெளிக்கோடிட்டு காட்டிய பரந்த சூழ்நிலையில்)அறிய முடிவதில்லை.
சமூக ஊடகங்களில் நுழைவதற்கு மிகவும் குறைவான தடைகளே உள்ள சூழ்நிலையில், தகவல்களுக்கான எண்ணற்ற வழிமுறைகளால் - அவற்றுக்கு இடையிலான நல்ல வேறுபாடுகள், பயன்பாட்டாளர்கள் மத்தியில் மறைந்துவிட்டன.

உண்மையில், பிற்பகுதியில் நாங்கள் விரிவாகக் கூறியுள்ளபடி, தகவல்களை அறிவதற்கோ அல்லது பகிர்வதற்கோ, அந்தத் தகவலுக்கான ஆதங்களை அறிவது முக்கியமானதாக இருக்கவில்லை.
ஆனால், சராசரி இந்தியப் பயனாளர் வாட்ஸப் மற்றும் முகநூல் மூலம் தினமும் இப்போது பெறக் கூடிய பதிவுகளின் டிஜிட்டல் தகவல்களின் எண்ணிக்கைகளுக்கு, ஒரு காரணமாக இருக்கிறது.
I.2. ஊடகங்களின் செயல்நோக்கம் மற்றும் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்கள்
கருத்து தெரிவித்தவர்களில் பலரிடம், செய்தி ஊடகங்களின் உள்நோக்கங்கள் குறித்து நம்பிக்கை குறைந்திருப்பதையும், எல்லாம் நன்றாக இருந்த மற்றும் உயர்ந்த தரத்தில் இருந்த இதழியலைக் காண்பதில் ஏக்கம் கொண்ட நிலையையும் நாங்கள் கண்டோம்.
தொலைக்காட்சிகளும் - ஓரளவுக்கு அச்சு ஊடகங்களும் - வேறு எதையும்விட லாபத்தால் மட்டுமே உந்தப்பட்டிருக்கின்றன - என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது; இன்றைய குடிமக்களுக்கு, ஊடகங்களின் நோக்கம், அவ்வளவு மறைவானதாக இல்லை என்றும் தெரிகிறது. முன்பைவிட ஊடகங்கள் அதிக பாரபட்சமானதாகவும், ஒருசார்பு கொண்டதாகவும் இருப்பதாக நிச்சயமான கருத்து நிலவுகிறது.
இதழியலின் மீதான மதிப்பு அதிகமாக இல்லை. செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிலையங்களின் வசதி கிடைத்த பிறகு, குறிப்பாக பரபரப்பையும், திடீர் கவனிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளை மிகைப்படுத்திக் காட்டும் தொனியைக் கொண்ட உள்ளூர் மொழிகளில் இவை கிடைத்த பிறகு, இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
பத்திரிகைகளையும் தங்களுடைய ஊடக தொடர்பில் சேர்த்துக் கொண்டிருப்பவர்களிடம், இதழியலைப் பற்றி எதிர்ப்பு உணர்வு அதிகமாக இல்லை. (தூர்தர்ஷனை பொருத்தவரை, ஒரே மாதிரியானதாக, ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இல்லாததாக பலரும் கருதுகின்றனர்.
கடைசி நிலை ஈர்ப்புதான் காணப்படுகிறது - பரபரப்பை ஏற்படுத்தும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் சூழ்நிலையில், ஒரே மாதிரியான, ஆர்வம் தராத வகையிலான என்பது தனித்து நிற்கிறது!) ஆனால், ஒட்டுமொத்தமாக, ஒரு வகையில் ஊடகங்களுக்கு அவற்றுக்கான செயல்திட்டம் உள்ளது.
தொழில் அல்லது அரசியல் அக்கறைகள் காரணமாக ஏற்பட்ட பிணைப்பால் இவை ஏற்பட்டுள்ளன. இந்திய ஊடகங்களின் செய்திகள், குறிப்பாக தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் எச்சரிக்கையுடன் கூடிய போக்கு உள்ளது.
M : உங்கள் தந்தை காலத்தில் இருந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் காலத்தில் உங்களுக்குக் கிடைத்த செய்திகள் சொல்லப்பட்ட விதம், தலைப்புகள் ஆகியவற்றை இன்றைய செய்திகளுடன் ஒப்பிட்டால், ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
``R: அந்தக் காலத்தில், செய்திகளில் உண்மைத்தன்மை இருந்தது. இப்போதைய நிலையை ஒப்பிட்டால் அது குறைந்துவிட்டது. அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் என்பது செய்திகளைச் சொல்வதாக இருந்தது, அது உண்மையான செய்தியாக இருந்தது.'' (ஆண், 25, விஜயவாடா)

பட மூலாதாரம், Getty Images
``தூர்தர்ஷனை நீங்கள் பார்த்தால், செய்தி வாசிப்பவர் எளிமையாக இருந்தால், செய்தியை மட்டும் வசித்தார். ஆனால் தனியார் செய்திச் சேனல் சிறிய செய்தியை பிரேக்கிங் செய்தியாக ஆக்குகிறார்கள். TRP எனும் ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, சிறிய செய்திகளை பூதாகரமாக்கி பிரேக்கிங் சேனலைப் போல காட்டுகிறார்கள்.''(பெண், 25, உதய்ப்பூர்)
``தொலைக்காட்சி செய்திகளை நாம் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு சேனலும் ஒரு கட்சிக்கு சார்பாக உள்ளன. எனவே யாருமே நடுநிலை கிடையாது. பத்திரிகைகளிலும், ஒவ்வொரு பத்திரிகையும் ஏதாவது கட்சிக்கு சார்பாக உள்ளன. சமூக இணையதளங்களில் மட்டுமே பொதுவான செய்திகள் உள்ளன. ஏனென்றால் அது சாமானிய மக்களால் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே, இது மட்டுமே சார்பில்லாத செய்தியாக நான் கருதுகிறேன்.'' (ஆண், 26, சென்னை)
கடைசி கமெண்ட்டில் கடைசி வரியை கவனியுங்கள். இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் இது முக்கியமானதாக இருக்கும்.
``தூர்தர்ஷன், சிஎன்என், பிபிசி சேனல்களில் போலிச் செய்திகள் கிடையாது. சார்பான கருத்துகள் உள்ள விஷயங்கள் பணம் செலுத்தியவையாக இருக்கும். ஆனால் பொய்யான மற்றும் உண்மையற்ற விஷயங்களை அவை தராது.
I.3. டிஜிட்டல் பிரளயம் - அதிக வேகமான தகவல் சூழ்நிலையை நோக்கிய நகர்வு
இந்தியர்கள் இப்போது தங்களுடைய வாட்ஸப் மற்றும் முகநூல் பதிவுகளில் அதிக அளவிலான டிஜிட்டல் தகவல்களைக் கையாள வேண்டியுள்ளது. சமீப காலங்களில் இன்டர்நெட் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதும் இதற்கு ஒரு காரணம்.
ஸ்மார்ட் செல்போன்கள் மற்றும் நிறைய வசதிகள் கொண்ட செல்போன்களின் விலைகள் குறைந்துவிட்டதும் இதற்குக் காரணங்களாக உள்ளன.
டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்துவதில் இன்டர்நெட் செலவுகள், கென்யா மற்றும் நைஜீரியாவைப் போல, ஒரு முக்கிய தடையாக இல்லை என்ற நிலையில், தகவலின் இயல்பு எப்படியிருந்தாலும் அதை டிஜிட்டல் ஊடகத்தில் பகிர்வதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
இதன் விளைவாக, நமக்கு கருத்து தெரிவித்தவர்கள் வாட்ஸப் மற்றும் முகநூலில் ஏராளமான தகவல்களில் மூழ்கிக் கிடந்ததைக் கண்டறிந்தோம். நாள் முழுக்க தங்களுடைய செல்போன்களில் தொடர்ச்சியாக தகவல்கள் வருவதும், அவற்றை பகிர்வதும் நடந்து கொண்டே இருக்கிறது - செய்தி நிறுவனங்களின் தகவல்களில் இருந்து மனதுக்கு அதிர்ச்சியைத் தரும் வகையிலான சமூக தகவல்கள் வரை இவ்வாறு செய்யப் படுகின்றன. (உதாரணமாக, ``உத்வேகம் தரும் மேற்கோள்கள்'' மற்றும் ``காலை வணக்கம்'' தகவல்களைப் பகிர்வது. இரண்டாவது விஷயம், சர்வதேச அளவில் கருத்தாடலுக்கான விஷயமாக இருந்தாலும், இந்தியாவில் மட்டும் காணப்படும் செயல்பாடாக உள்ளது.)

செய்திகள் அளிப்பவர்கள் - இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர் - செல்போன்களில் அடிக்கடி, தொடர்ச்சியாக, பதிவுகளை அனுப்புவதை எளிதானதாக்கவில்லை.
``நான் சமூக ஊடகங்களில் பிணைக்கப்பட்டிருக்கிறேன். ABP நியூஸ் ஆப் வைத்திருக்கிறேன். 2- 4 நிமிடங்களுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பற்றி உடனுக்குடன் தகவலைத் தருகிறது. நிறைய செய்திகளின் பதிவுகளும் அதில் இருக்கும்.'' (ஆண், 34, அமிர்தசரஸ்)
செல்போன் இணைப்பில் இல்லாதிருப்பதைவிட பதிவுகள் வருவது பற்றி நம்மிடம் கருத்து தெரிவித்தவர்கள் விரும்புவதாக இயல்பான பழக்கம் உள்ளது. கருத்து தெரிவித்தவர்களில் பலரிடம் இந்தப் பழக்கம் பரவலாக உள்ளது.
ஒரு செய்தி நிகழ்வு பற்றி எப்படி உங்களுக்குத் தெரிய வருகிறது என்று கேட்டபோது, `பதிவுகள் மூலம்' தெரிய வருவதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர். தகவல்களைப் பெறுவதில் மையமான வழிமுறையாக டிஜிட்டல் முறை மாறியிருக்கிறது.
அதிக நேரம் செலவிடும், குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் போக்கு உள்ள நிலையில் இருந்து குறைந்த நேரம் செலவிட்டு அதிக விளைவுகள் குறித்தவற்றை அறிவது என மாறியிருக்கிறது.
வேறு வகையில் சொல்வதாக இருந்தால், செய்திகளை அறிந்து கொள்வதில் மக்கள் முன்பைவிட அதிகமான தருணங்களைப் பெறுகிறார்கள்.
ஆனால் இந்த ஒவ்வொரு தருணமும், உண்மையில் குறுகிய காலம் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் செய்திகளின் ஆழத்தைவிட, அதன் அளவைத்தான் பெரிதாகப் பார்க்கிறார்கள். டிஜிட்டல் பிரளயத்தின் பாதிப்பு இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு உதவும் - செயல் வடிவ நடைமுறைகளை ஏற்றுக் கொள்வதன் அவசியம் இதனால் ஏற்படுகிறது என்று நாங்கள் கண்டறிந்தோம்.
I.4. பிரளயத்தைக் கையாள்வதற்கு செயல்வடிவ நடைமுறைகள்
முழுமையாக தெளிவாகச் சொன்னால், இந்தத் தருணத்தில் இந்தியர்கள் தங்களுடைய செல்போன்களில் வெள்ளம்போல குவியும் தகவல்களைக் கையாள்வதில் எந்தத் தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். ஏதாவது இருந்தால், சமூக ஊடகங்களின் சாதகங்களை மட்டும் அவர்கள் பார்க்கிறார்கள்.
``சமூக ஊடகத்தில் தொடர்பு கொள்வது எளிதாகிவிட்டது என்பதால், வாட்ஸப், முகநூல் போன்றவற்றில் அவர்கள் எளிதில் தொடர்பில் இருக்கிறார்கள். அங்கே ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் பிறந்த தேதிகளை அறிந்து கொள்கிறார்கள், மக்களைப் பற்றிய விஷயங்களை, பதிவுகளைப் பெறுகிறார்கள். முன்பு இப்படி கிடையாது. மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, முகம் பார்த்து பேச வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நிலைமைகள் மாறிவிட்டன. மக்கள் வாட்ஸப் மூலம் பேசிக் கொள்கிறார்கள். அந்த மாற்றம் நடந்திருக்கிறது. தொடர்பு என்பது இப்போது எளிதாகிவிட்டது'' (கருத்து தெரிவித்தவர், ஆண், 63, டெல்லி).
இந்தியாவில் `சமீபத்திய விஷயங்களை அறிந்து கொள்வதில்' உள்ள தேவை (கருத்து தெரிவித்தவர்கள் அப்டேட் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்கள்), கவனத்தை ஈர்க்கும் வகையில் டிஜிட்டல் சிக்னல்களில் தொடர்ச்சியாக வரும் தகவல்களைக் கையாள்வதில் உள்ள கவலையை மிஞ்சி நிற்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், பல ஆய்வுத் திட்டங்களில், இது உள்பட, நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியக் குடிமக்களிடம் விருப்பம் இருப்பதை நாங்கள் திரும்பத் திரும்ப அறிந்திருக்கிறோம்.
குறிப்பாக இளைஞர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர் - இதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.

பட மூலாதாரம், BLOOMBERG
ஒரு குழுவில், தகவல் அறியாதவர்கள் என்ற நிலை வந்துவிடக் கூடாது என்பது முதல், நாட்டில் போட்டி நுழைவுத் தேர்வுகளால் ஏற்படும் அழுத்தங்கள் வரை, இதற்கான காரணங்களாக உள்ளன. பல தேர்வுகளில் விண்ணப்பதாரர்களின் `பொது அறிவு' சோதிக்கப்படுகிறது.
``சமீபத்திய செய்திகளை அறிந்து கொள்வதன் மூலம் எங்களுடைய அறிவு அதிகமாகிறது. எனவே நாளைக்கு நாங்கள் ஏதாவது நேர்காணலுக்குச் சென்றாலோ அல்லது ஏதாவது இணையதளத்தில் இணைக்கப்பட்டாலோ, அல்லது யாராவது வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டாலோ, அப்போது தகவல்களை நாங்கள் அளிப்போம்.'' (ஆண், 34, அமிர்தசரஸ்)
செயல்பாட்டில், வாட்ஸப், முகநூலில் நேரத்தை செலவிடுவது தினசரி வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. எப்படி செய்கிறோம் என்ற உணர்வுப்பூர்வமான சிந்தனையே இல்லாமல், மக்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக, அதைச் செய்வது எளிது என்று அர்த்தமாகிவிடாது. வாட்ஸப் மற்றும் முகநூலை - ஒன்றாக சேர்த்து டிஜிட்டல் பகிர்வு தளங்கள் என்று இப்போதிருந்து நாங்கள் குறிப்பிடுகிறோம்.
அளவுக்கு அதிகமான தகவல்களை திணிப்பதாக இந்தத் தளங்கள் உள்ளன. உதாரணமாக, டெல்லியில் கருத்து தெரிவித்தவரின் மேற்கோளை கவனியுங்கள்: ``மக்களைப் பற்றி செய்திகள், பதிவுகளை நீங்கள் பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறியுள்ளார். ``வந்து கொண்டே'' என்ற சொல்லாடல், இந்த பின்னல் தொடர்புகளில் தகவல்கள் வருவது பற்றிப் பேசும்போது, இதேபோன்ற வார்த்தைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், சில நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தும் போது, பதற்றம் அல்லது கவலை என்ற தொனி வரும்போது இதைக் கையாள்வதில் உள்ள சிரமங்கள் பற்றி எதுவும் வரவில்லை.
``........ உங்களுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன, சரியா? மக்கள் அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், அது மிகவும் எரிச்சலானது..... தொடர்ச்சியாக நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மக்களில் அரசியல் சார்புள்ள குழுவினர் இருக்கிறார்கள். வழக்கமானவர்கள் வந்திருக்கிறார்கள், அது பராவாயில்லை. அரசியல் விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அது மிகவும் எரிச்சலானது.'' (ஆண், 38, மும்பை)
ஆனால் மக்கள் தங்களுடைய ஏக்கங்களை வெளிப்படுத்த முடியாதபோது, தங்களுடைய டிஜிட்டல் பதிவுகளைக் கையாள்வதற்கு அவர்கள் சில உத்திகளையும், திட்டங்களையும் நிச்சயமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
Qiu et al கூறியிருக்கிறபடி, கணினியால் உந்தப்பட்ட / டிஜிட்டல் சூழ்நிலைகளில் நிகழும் விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது பற்றிய அறிக்கைகளை ஆய்வு செய்யும்போது, ``புரிதலுக்கு ஏற்ற வகையில், அளவுக்கு அதிகமாக தகவல்கள் திணிக்கப்படுவதைக் கையாள்வதில் நமது பழக்கங்களின் நடைமுறைகள், ஆன்லைன் தகவல்களின் தரத்தைக் குறைப்பதாகவும், பலவகைகள் கொண்டதாகவும் கருதி, தவறான தகவல்கள் பரவுவதை அதிகரிக்கச் செய்து, நம்மை சூழ்ச்சிகளுக்குள் சிக்க வைக்கின்றன'' என்பதாக இருக்கிறது.
பயன்படுத்தப்பட்ட திட்டமுறையில் பின்வருவனவும் அடங்கும்:

I.4.1 தேர்ந்தெடுத்த முறையில் எடுத்துக் கொள்வது: இது இரண்டு வழிகளில் செயல்படுகிறது. முதலாவதாக, தங்களுடைய பதிவுகளில் வரும் தகவல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கணிசமான அளவுக்கான தகவல்கள் அவர்களுடைய பதிவுகளில், குறிப்பாக வாட்ஸப் பதிவுகளில் வருகின்றன, அவை திறக்கப்படுவதே இல்லை அல்லது எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
இரண்டாவதாக, மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தகவல்கள் பாதியளவு பார்க்கப் படுகின்றன. பாதியளவு பார்ப்பது என்பது விஷயத்தைக் கவனிக்காமல் வெறுமனே தலைப்பைப் பார்ப்பது என்ற அடிப்படையில் இருக்கலாம்.
தகவலை அனுப்பியவரே கூட, அந்தக் கருத்தில் உடன்பாடு இல்லாத நிலையிலும் கூட, சிலநேரங்களில் வேறு நபர்களுக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலைகளும் ஏற்படும்.
ஏனெனில், தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும் படம், அனுப்பியவரின் உணர்வைக் காட்டுவதாகவோ அல்லது அந்தப் படத்திற்கு ஒப்புதல் இருப்பதைக் காட்டும் ஆர்வம் காரணமாகவோ இப்படி செய்திருக்கலாம்.
I.4.2 படங்களுக்கான முதல் விருப்பம்:
படங்கள் (மீம்ஸ்கள் அல்லது வேறு வகையானவை) அல்லது படத்துக்கு முக்கியத்துவமான தகவல்கள், மக்களால் பெறப்படுவதில் முதல்விருப்பம் கொண்டவையாக அல்லது அவர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்துபவையாக உள்ளன. பிறரால் அனுப்பப்படும், வரிகளை அதிகம் கொண்ட பெரிய தகவல்கள் மற்றும் விடியோக்கள் பெரும்பாலும் முதல்விருப்பத்தைப் பெறுவதில்லை: இதற்கு செலவிட நேரம் இல்லாதது/ இதைப் பார்ப்பதற்கான முயற்சிகள் மற்றும் பெரும்பாலான செல்போன்களில் (வீடியோக்கள்) சேமிப்புக்கான இடம் குறைவாக இருப்பது, ஆகியவை இந்த வகையிலான தகவல்கள் பார்க்கப்படுவதற்கு பெரிய தடைகளாக உள்ளன.
மக்களின் கவனத்தை ஈர்ப்பது, அறியச் செய்வது என்ற தேவை உள்ள நிலையில், தகவலில் உள்ள விஷயத்தில் அவர் ஈடுபாடு காட்டுகிறாரா இல்லையா என்பதை முடிவு செய்வதில் விசுவல்களைப் பயன்படுத்துவது `அறிவார்ந்த' செயலாக இருக்கிறது.
இன்டர்நெட் நம்பிக்கையின்படி, வார்த்தைகளைவிட, பார்வைக்கான படங்கள், விடியோக்கள் 60,000 மடங்கு அதிக வேகத்தில் செயல்படுகின்றன என்ற நிலையில், படங்கள் - குறிப்பாக ஆக்கபூர்வ அல்லது எதிர்மறை பாதிப்புள்ளவை (கொடூரமானவை, உணர்வுப்பூர்வமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை)- வார்த்தைகளைவிட வேகமாக செயல்படுகின்றன.
உண்மையில், இது இந்த ஆய்வுத் திட்டத்தின் மையக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. போலிச் செய்திகளின் விதிகளுக்கான உதாரணமாக, மேசிடோனியன் டீன்ஏஜ் -கள் உருவாக்கிய , டோனாட் ட்ரம்ப்கு போப் ஆதரவு என்ற செய்தி சமூக ஊடகம் முழுக்க சுற்றி வந்தாலும், இந்தியாவில் வாட்ஸப் பதிவுகளில் பரவலாகக் காணப்படவில்லை. தெளிவாகச் சொன்னால், ஓர் இணையதளத்தில் உள்ள வார்த்தைகளின் தொகுப்பாக உள்ள கட்டுரைகள், இணையதள முகவரி வடிவில் சுற்றில் இருக்கும் கட்டுரைகள், பகிரப்படும் தகவல்களில் (மற்றும் தவறான தகவல்களில்) அதிகமாகக் காணப்படவில்லை.
பலராலும் கவனிக்கப்படும் அல்லது பலரின் ஈடுபாட்டை ஏற்படுத்தும் தகவல்களின் வடிவம் விசுவல் தகவலாக, சில நேரம் குறைந்தபட்ச அளவுக்கு வார்த்தைகளுடன் கூடியதாக இருக்கிறது.
விசுவல் முறையில் - அல்லது முடிந்தவரை மிகவும் சிறிய வரிகள் கொண்டதாக - உள்ள தகவல்கள் மக்களின் முதல் விருப்பமாக இருப்பதால் அவர்கள் இந்த வடிவங்களில் பகிர்வதற்கு முன்னுரிமை தருகிறார்கள். `ஸ்கிரீன் ஷாட்' எடுத்து பகிர்வது வெகு சாதாரணமாகக் காணப்படுகிறது. சொல்லப்போனால், `ஸ்கிரீன் ஷாட்' எடுத்து அனுப்பும் பழக்கம் ஓரளவுக்கு தன்னிச்சையாக, உள்ளார்ந்த செயல்பாடாக மாறியுள்ளது!
``நீண்டகால தேடுதலுக்குப் பிறகு செய்தி வந்திருக்கிறது என்பது, உத்வேகம் தரும் செய்தி. கேரளா வெள்ள நிவாரணத்துக்கு டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியோர் பாடி அறக்கொடையை செய்தனர். நான் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி வைத்தேன். நீதிபதி பாடலாம் என்பதை அப்போது மக்கள் அறிந்து கொண்டார்கள்.'' (ஆண், 56, ராஜ்கோட்)
`ஸ்கிரீன் ஷாட்' எடுப்பது (மற்றும் போட்டோ கேலரியில் அதை சேமித்து வைப்பது) அந்த விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பதைவிட, பிறிதொரு நேரத்தில் அனுப்புவதற்குப் பயன்படுத்தும் வழிமுறையாக இருக்கிறது. பதிவுகளாக வைப்பதாகவும் ஸ்கிரீன் ஷாட்-கள் அமைகின்றன:
``எந்த சாதனங்கள் வாங்குவதற்கு நான் விரும்பினாலும் ஸ்கிரீன் ஷாட்களாக எனது செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொள்வேன். நான் விரும்பிய அனைத்து விஷயங்களின் சேகரிப்பாக அதை நான் வைத்திருக்கிறேன். அவை குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு விரும்புகிறேன். (ஆண், 20, உதய்ப்பூர்)
இறுதியாக, நபர்களின் பின்னல் தொடர்புகள் பெரிதாக இருப்பதாலும், தனிப்பட்ட முறையில் பொருத்தமான தகவல்களா என்பதை, அனுப்புபவரால் கண்டறிய முடிவதில்லை என்பதாலும், இது பொருத்தமானதா என்பது அனுப்புபவருக்குத் தெரியாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களை (உதாரணமாக, முழு காணொளி) அனுப்புவதில் மகிழ்ச்சி என்றும் பின்னல் தொடர்பில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கும் குறியீடாக ஸ்கிரீன் ஷாட்கள் மாறியுள்ளன. தகவல் பொருத்தமற்றதாகவும், செல்போனில் சேமிப்பு இடத்தைப் பிடித்துக் கொள்வதாகவும் இருந்தால், பெறக்கூடியவரின் எரிச்சலில் இருந்தும், அவருடைய செல்போனில் சேமிப்பு இடத்தை பிடித்துக் கொள்ளாத வகையிலும் இது உதவும்.
``நான் ஸ்கிரீன் ஷாட் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்புவதால், அது தங்களுக்குப் பயனுள்ளதாக யாராவது கருதினால், அதுபற்றி கூடுதல் விவரங்களை அனுப்புமாறு எனக்கு தகவல் அனுப்புவார்கள்.
குழுவில் நான் அனுப்பினால் இது பயனுள்ளதாக சிலர் நினைக்கலாம். ஆனால் சரியாக பதிவிறக்கம் செய்ய முடியாமல் போகலாம். அப்போது அவர் எரிச்சல் அடையலாம்.
M : எனவே, அது சிறிய பக்கத்தை அனுப்ப வேண்டும் என்று கருதுகிறீர்களா?
R : ஆம். ஒருவர் கூடுதல் தகவலைக் கேட்டால், பிறகு அந்த நபருக்கு அந்தத் தகவலின் கூடுதல் விவரங்களை தனிப்பட்ட முறையில் நான் அனுப்புவேன்.
M : எனவே, முழு கட்டுரையையும் நீங்கள் பகிர்ந்தால் மக்கள் எரிச்சல் அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா?
R : ஆம், நானேகூட எரிச்சல் அடைவேன். நான் RPSC தேர்வு அளிக்கவில்லை. யாரோ ஒருவர் இது முக்கியமானது, தயவுசெய்து பதிவிறக்கம் செய்யுங்கள் என எனக்கு அனுப்புகிறார். நான் அதைப் பதிவிறக்கம் செய்கிறேன். ஆனால் அது எனக்கு பயனற்றது. அதனால் என்னுடைய டேட்டாவை இழக்கிறேன். செல்போனில் சேமிப்பு இடம் நிறைந்துவிடுகிறது. அப்போது நான் சிறிது எரிச்சலாகிறேன்'' (பெண், 25, உதய்ப்பூர்)
படங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் குறைந்தபட்ச வார்த்தைகள் என்ற இந்த முன்விருப்பங்கள், நமது தேவைகளுக்கு முக்கியமான மூன்று முக்கியமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கின்றன:
a) வார்த்தைகள் மூலமாக தெரிவிக்கப்படும் ஆழமான தகவல்கள் அல்லது பகுப்பாய்வுகள் இந்தச் சூழ்நிலையில் எடுபடுவது சிரமமாக உள்ளது.
b) பெரும்பாலும் தலைப்பு தான் முழு தகவலாக இருக்கிறது
c) தகவலை எடுத்துக் கொள்பவர்கள் - மற்றும் ஆய்வாளர்கள் / பகுப்பாளர்கள் - என இரு தரப்பினருக்கும், தகவல்களின் மூலத்தை/ உருவாக்கியவர்களைக் கண்டறிவது சிரமமாக இருக்கிறது.
உதாரணமாக, படங்கள் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ``போலிச் செய்திகள்'' மற்றும் பிற தகவல் சீர்குலைவுகள் குறித்த கள வழிகாட்டியில் ஆலோசனையாக தெரிவிக்கப்பட்ட, மிகவும் பயனுள்ள டிஜிட்டல் உத்திகளுக்கு பயன் கிடைப்பது மிகவும் சிரமம் (கள வழிகாட்டியில் பெரும்பாலான ``செயல் குறிப்புகள்'' இணையதள முகவரிகளுடன் இருப்பதால், படங்களைப் பொருத்தவரை, அபூர்வமாக உள்ளதால்) ஆகிவிடுகிறது.
I.4.3. அனுப்புகிறவரின் முக்கியத்துவம்:
மிதமிஞ்சிய அளவில் தகவல்கள் வருவதாலும், அதன் தொடர்ச்சியாக ஒருவருடைய பதிவில் ஒவ்வொரு தகவலையும் பகுத்தறிவு சார்ந்த தீவிர பகுப்பாய்வு செய்வதில் சாத்தியமற்ற நிலை அல்லது விருப்பம் இல்லாமை இருப்பதாலும், எந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டுவது என்று முடிவு செய்வதிலும், எது நம்பகத்தன்மையானது என்று மதிப்பிடுவதிலும் கூட, உய்த்துணர்தல் முறையை பயன்படுத்துகின்றனர்.
உள்ளபடியே, முதன்மை இடத்தில் எந்த நபர் அனுப்பியிருக்கிறார் என்பது, அதை எடுத்துக் கொள்வதை முடிவு செய்வதில் காரணமாக இல்லை.
அந்த தனிப்பட்ட நபர் செல்வாக்கு மிக்கவர் அல்லது பெறுபவரின் ஆன்லைன் அல்லது நிஜ வாழ்வு தொடர்பில் சமூகத்தில் உயர்ந்தவராக இருந்தாலோ, அல்லது அதிக முக்கியமாக கொள்கை ரீதியாக/ அரசியல் தலைவராக இருந்தாலோ, தகவல்கள் பெறப்படும் என்பதற்கும், பகிரவும் செய்வார்கள் என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு பக்கம் இப்படி இருப்பதால், சில தனிநபர்களை ``பயனற்ற தகவலர்கள்'' என முத்திரை குத்தி, அவர்களுடைய தகவல்கள் தவிர்க்கப் படுகின்றன.
``உங்களிடம் நான் கூறியபடி, நான் [xxx] அவர்களை மதிக்கிறேன், அவர் மிகுந்த அறிவாளி, என்னைவிட அதிகம் அறிந்தவர். எனவே, அவர் எனக்கு எதை அனுப்பினாலும், அதை நான் பின்தொடர்வேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களை அவர் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.'' (ஆண், 24, வாரணாசி)
``என்னுடைய மாமா எதை அனுப்பினாலும் நான் நம்புவேன். உலகைப் பற்றி அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நாங்கள் இருக்கும் நகரில் வேறு உறவினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எதை அனுப்பினாலும் நான் நம்புவதில்லை. அவர்கள் அனுப்பும் தகவல்கள் பலவற்றை நான் திறந்துகூட பார்ப்பதில்லை'' (ஆண், 27, மும்பை)
``(போலிச் செய்திகளில் ஒரு பகுதி) எனது நண்பர் இதை எனக்கு அனுப்பினார். பொய்யான ஒன்றை அவர் ஏன் எனக்கு அனுப்ப வேண்டும்?'' (பெண், 24, விஜயவாடா)
``XXXX உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பேசும் ஒரு தலைவர். அவர் பேசும்போது மக்களுக்கு தூக்கம் வரலாம், ஆனால் புள்ளிவிவரங்களுடன் அவர் பேசுவார். அதனால் தான் அவர் எதைப் பகிர்ந்தாலும் அல்லது பேசினாலும் அதை நான் கவனிப்பேன்'' (பெண், 23, ராய்ப்பூர்)
இங்கே தனிநபர்களின் வயதுகள் குறிப்பிடப் படுவதைக் கவனிக்கவும்: அவர்கள் அனைவரும் இளவயதினர். அனுப்புபவரின் அந்தஸ்து அனைத்து வயதினர் மத்தியிலும், அனைத்து மக்களிடமும் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. முறைப்படியான கல்வி நிலையைப் பொருத்து மாறுபடவில்லை என்று எங்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
I.4.4. தகவலின் மூல ஆதாரம் அறியாத நிலை:
தகவலில் உள்ள விஷயத்தைப் பற்றி தீர்மானிப்பதற்கு, அதை அனுப்பியவரின் அடையாளத்தை நம்பி இருக்கும் நிலையை `தகவலின் மூல ஆதாரம் அறியாத நிலை' என்று நாம் குறிப்பிடுகிறோம்.
அதாவது, தாங்கள் பெறக் கூடிய தகவல், எங்கிருந்து உருவானது என்பது பற்றி மக்கள் உண்மையில் அதிகமாகக் கவலைப்படுவதில்லை.
குறிப்பாக வாட்ஸப்பில் அந்த நிலை உள்ளது. அதிக நம்பகமான மற்றும் குறைந்த நம்பகமான மூல ஆதாரங்கள் உள்ளன என்பது பற்றி மக்களுக்குத் தெரியாமல் இல்லை.
சரியற்ற தகவலைப் பெறுவதைப் பற்றி கவலைப்படாதவர்களும் கிடையாது. டிஜிட்டல் தளங்களில், வந்து குவிந்து கொண்டிருக்கும் தகவல்களுடன் போராடும்போது, அவர்களால் கவலைப்பட முடிவதில்லை.
அனுப்புபவரின் நம்பகத்தன்மை, அந்தத் தகவலுக்கு சட்டபூர்வ தன்மையைத் தருகிறது. மூல ஆதாரம், அந்தத் தகவலிலேயே அது இருந்தாலும் கூட, பெரும்பாலும் முகநூலில் புறக்கணிக்கப் படுகிறது அல்லது கவனிக்கப்படாமல் போகிறது, அல்லது வாட்ஸப்பில் முழுக்கவே இருப்பதில்லை.
முன்பே விரிவாகக் கூறப்பட்டவாறு ஊடகத்தின் செயலூக்கம் மற்றும் உள்நோக்கம் குறித்து பரவலான சந்தேகம் உள்ள நிலையில், இது நடக்கிறது.
எனவே, உண்மைக்கு நடுவராக ஒருவரை உருவாக்கி இருப்பதாகவும் இல்லை. மேலும், பிற்பகுதியில் நாம் காணப் போவதைப் போல, பல வகையான தகவல்களுக்கு, எங்கிருந்து தகவல் உருவானது என்ற கேள்வி, அவை எந்த வகையிலும் உண்மையாக அல்லது பொய்யாக இருந்தாலும், அது சற்று ஆழமானது.
I.4.5. களத்தின் இயல்பு:
களம் அல்லது ஏதாவது அனுப்பப்படும் வாட்ஸப் குழுவின் கூட்டமைவு, அந்தத் தகவல் ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதா என்பதையும், பகிர்வு செய்யப்படக் கூடியதாக இருக்கிறதா என்பதையும் முடிவு செய்யும் முக்கிய விஷயமாக இருக்கிறது.
தனிப்பட்ட தகவலா (அதாவது, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அனுப்புவது) அல்லது ஒரு குழுவில் தகவல் அனுப்பப் படுகிறதா என்பதும் முக்கியமாகிறது. ஒரு குழுவாக இருந்தால், அது எந்த மாதிரியான குழு என்பது முக்கியமாகிறது; அது குடும்ப குழுவாக இருந்தால் அல்லது பணியிடத்தைச் சார்ந்த குழுவாக இருந்தால், அல்லது, சொல்லப் போனால், அரசியல் சார்ந்த குழுவாக இருந்தால் - ஒழுங்கமைக்கப்பட்டதா அல்லது ஒழுங்கு செய்யப்படாத சாதாரண முறையிலானதா என்பது முக்கியமாகிறது.
தங்களுடைய வாட்ஸப் குழுக்களின் கூட்டமைவு பற்றி மக்கள் தீவிரமாக யோசிக்கிறார்கள். எனவே, அதில் என்ன பகிரப்பட வேண்டும் என சிந்திக்கிறார்கள். ஒரு குழுவில் பகிர்வதற்குப் பொருத்தமானதாக இருக்கும் ஒரு தகவல், வேறொரு குழுவில் பகிர்வதற்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம்.
I.4.6: அறிவார்ந்ததைவிட உணர்ச்சிவசமானவை:
டிஜிட்டல் தகவல் என்ற பிரளயமான சூழ்நிலையிலும் (தெளிவற்ற ஆனால் நிச்சயமாக அனுபவம் சார்ந்த ) தகவலை வேகமாக ஆய்வு செய்யும் அழுத்தம் காரணமாகவும், உணர்ச்சியை தூண்டும் விஷயங்கள் அதிக ஈடுபாட்டை உண்டாக்குகின்றன.
மக்கள் அறிவார்ந்தவற்றைவிட, உணர்ச்சிபூர்வமானவற்றின் மூலம் பெரும்பாலும் குடிமக்கள், விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். சாதாரண முறையில் சொல்வதாக இருந்தால், டிஜிட்டல் பகிர்தல் தளங்கள் `சிந்தனையை' விட `உணர்வுகளின்' அடிப்படையில் தான் அதிகமாக செயல்படுகின்றன.
எப்போதாவது ஒரு முறை, ஆர்வமுள்ள அல்லது பொருத்தமானதை அனுப்புவதா அல்லது வேண்டாமா என்ற அடிப்படையில் சில முக்கியமான ஈடுபாட்டு நிகழ்வுகள் நடக்கின்றன.
மிக முக்கியமாக, இந்தியா விஷயத்தில், ஈடுபாடு காட்டப்பட்டு பகிரப்படும் விஷயங்கள் அவர்களுடைய சித்தாந்தத்தை ஒத்த விஷயமாக, குறிப்பாக அவர்களுடைய சமூக-பொருளாதார அடையாளத்துடன் ஒத்த விஷயமாக இருக்கிறது. இந்த விஷயம் பற்றி நாம் பிறகு பார்ப்போம்.
I.5. எடுத்துக் கொள்ளப்படுதல் மற்றும் பகிர்தலுக்கு இடையில் விடுபட்ட தொடர்பு:
சாதாரண குடிமக்களுக்கு, தகவலை எடுத்துக் கொள்வது சிரமம், மற்றும் முக்கியமாக ஈடுபாட்டுடன் அதை எடுத்துக் கொள்வது மிகவும் சிரமம். பகிர்தலை எளிதாக்கும் வகையில் டிஜிட்டர் பகிர்தல் தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
தகவலைப் பெற்று தெரிந்து கொண்ட பிறகுதான் பகிர்ந்திட முடியும் என்பதற்கான தேவை எதுவும் இந்தத் தளங்களில் உருவாக்கப்படவில்லை.
அதாவது பகிர்தல் செயல்பாட்டைத் தடுப்பதற்கு மிகவும் குறைவான விளக்கங்கள் மட்டுமே சொல்ல முடியும். பகிரப்படும் குழுவிற்குப் பொருத்தானதா என்பதும், மரியாதை குறித்ததும் பற்றி மட்டுமே அது அமையும்.
இப்போது பகிரப்படும் விஷயத்தின் துல்லியத்தன்மை அல்லது நம்பகத்தன்மையை குடிமக்கள் மிகக் குறைந்த அளவுக்குதான் சரி பார்க்கிறார்கள்.
அனைவருக்கும் முக்கியமானவை என்று கருதப்படும் சில வகைப்பாடுகள் இருக்கின்றன : அரசியல் அல்லாதவை அல்லது ஊறுவிளைவிக்காத சாதாரண செய்திகள் (உதாரணமாக, ஆரோக்கியம்), புதிய விஷயங்கள் (உதாரணமாக, ஏ.டி.எம்.கள் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்) அல்லது கொள்கை சார்ந்த செய்திகள் (உதாரணத்துக்கு, சமீபத்திய பட்ஜெட்டில் வரிகள் உயர்ந்துள்ளன).

பட மூலாதாரம், YASUYOSHI CHIBA/AFP/GETTY IMAGES
இவையெல்லாம் அனைவருக்கும் பொருத்தமானவை என்று பார்க்கப்படுவதால், பொருத்தமானவையா என்று பரிசீலிக்கும் அவசியம் எழுவது கிடையாது. அவை மிகவும் பரவலாக, மிகவும் வேகமாகப் பகிரப்படுகின்றன.
``ஆரோக்கியம் பற்றி செய்திகள் மற்றும் தகவல்கள் - அனைவருக்கும் நான் பகிர்ந்திடுவேன், அதில் யாராவது ஒருவருக்குப் பயன் கிடைக்கும்''
I.6 வாட்ஸாப் மற்றும் முகநூலில் பகிர்தலின் உத்திகள்
நமது கவனத்தில் உள்ள வாட்ஸப் மற்றும் முகநூல் தளங்களில், குடிமக்கள் மிகவும் வேறுபட்ட, மிகவும் நுட்பமான உத்திகளை குடிமக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அவர்களது வழியில் செய்கிறார்கள். இரண்டுமே போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்கு வசதி செய்யும் வகையில் உள்ளன.
வாட்ஸப் -ஐ குடிமக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்?
வாட்ஸப் இன்றைக்கு குடிமக்களிடம் இருந்து பிரிக்க முடியாத67 தளமாகிவிட்டது. அது பகிர்தலுக்கான உரிமையைத் தரும் தளமாகவும் உள்ளது. உங்களை மக்களுடன் இணைப்பதற்கான தளமாகவும் உள்ளது - நல்லது - தொடர்பு வைத்துக் கொள்ள உதவும் தளமாகவும் உள்ளது.
தொடர்பு தனிப்பட்ட முறையிலானதாக இருக்கலாம் (அதாவது, குடும்/நண்பர்கள்), அல்லது அதற்கும் சிறிது கீழாக (பெரிய நகரியம், முகம் அறியாதவர்களும் அதில் இருக்கலாம்), அல்லது அரசியல் பற்றிய குழுவாக இருக்கலாம் (ஆர்.எஸ்.எஸ். சாகா போன்ற ஒரு குழு).
ஆனால், வாட்ஸப்பில் உள்ள ஒவ்வொரு குழுவும் அவர்களை ஒன்றாக சேர்ப்பதற்கு பொதுவான ஒரு விஷயத்தைக் கொண்டதாக இருக்கின்றன - அது தான் அவர்களுக்கு ஒரு குழு என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதாவது, வாட்ஸப் குழுக்களுக்கு, குழு விதிமுறைகள் உள்ளன.
இந்த குழு விதிமுறைகளை மீறுவது சமூக அளவில் பிரச்சினைக்கு உரியதாகப் பார்க்கப் படுகிறது. பொதுவாகக் கூறினால், இந்தக் குழுக்கள் - ஒரு முறை உருவாக்கப்பட்டால் - வேகமாக வளர்வது இல்லை.
ஏனெனில் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் உண்டு. அதன் எண்ணிக்கை அளவுக்கு இயல்பாக ஒரு வரம்பு இருக்கிறது.

பட மூலாதாரம், PA
நமது அவசியங்களுக்கு மிக முக்கியமாக, வாட்ஸப் குழுக்களில் பகிர்தல் மிகவும் கவனிக்கப் படுகிறது. செய்திகள் மற்றும் தகவல்களைப் பகிர்வதன் மூலம் ஒருவருடைய நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை மதிப்பீடு செய்வதாக வாட்ஸப் பயன்பாடு இருக்கிறது.
ஒரு குழுவில் உருவாகும் தகவல்கள், வேறொரு குழுவில் எளிதாக பரவுவதில்லை. எந்தக் குழுக்களுக்கு எந்த தகவல்கள் சரியானவை என்பதில் மக்கள் தீவிரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
மிகவும் தீவிர அரசியலில் இருப்பவர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் குழுக்களில் வெறிபிடித்தவரைப் போல காங்கிரஸ் அல்லது பாஜக எதிர்ப்பு தகவல்களைப் பதிவிடுவார்கள். அதே தகவலை குடும்பத்தின் குழுவில் பதிவிட மாட்டார்கள்.
``இதை என்னுடைய வழக்கறிஞர் குழுவிற்கு நான் அனுப்பவில்லை. அங்கே நான் சிறுபான்மையினர் போன்றவன். அங்கிருப்பவர்கள் வேறு மாதிரியானவர்கள் எனது ஒன்றுவிட்ட உறவினர்கள் குழுவில் விஷயங்களைப் பகிர்ந்திடுவேன். அங்கே ஒருமித்த சிந்தனை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கருத்தாடல் செய்ய முடியும்'' (ஆண், 62, சென்னை)
இருந்தபோதிலும், அந்த நபர் பல அரசியல் குழுக்களில் உறுப்பினராக இருந்தால், அனைத்து அரசியல் குழுக்களிலும் அவர் பகிர்ந்திடுவார்.
நேரமும், முயற்சியும் தான் இதற்கு செலவாகும். நீங்கள் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு குழுவிலும், ஒவ்வொருவருடனும் பகிர்வதற்கு `ஒரு கிளிக்' என்ற எளிதான வழி எதுவும் கிடையாது.
ஓரளவு எளிதாக எந்த ஒரு தகவலையும், எவ்வளவு பேருக்கு அனுப்பலாம் என்பதற்கு இதன் மூலம் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
போலிச் செய்தி ஒன்று வாட்ஸப் மூலம் நாடு முழுக்க பரவுவதற்கான வாய்ப்பு உண்மையில் சிறிது குறைவு தான் என்பதை இது காட்டுகிறது.
இந்தியாவில் வாட்ஸப் குழுக்களை வரையறுக்கும் அம்சம், அது அடையும் அளவைப் பொருத்தோ அல்லது தகவல்கள் அஞ்சலாகும் வேகத்தைப் பொருத்தோ அல்ல, ஆனால், தன்னைப் போன்ற கருத்துடையவர்களை அல்லது ஒருமித்த கருத்து உள்ளவர்களைக் கொண்டநெருக்கமான பின்னல் தொடர்புகளை உருவாக்குதல் என்பது தான் உண்மையான காரணமாக இருக்கிறது.
ஆனால் இந்த நெருக்கத்தின் காரணமாக, அணி திரட்டுவதற்கு வாட்ஸப்பை பயன்படுத்துவது சாத்தியம் என்று நாங்கள் கூறுகிறோம்.
இந்தியாவில் சில வன்முறை சம்பவங்களுக்கு, வாட்ஸப் எந்த வகையில் ஓரளவுக்கு மையமான காரணமாக இருந்தது என்பதற்கு விளக்கம் தர தொடங்குவதாக இது இருக்கிறது.

பட மூலாதாரம், DAN KITWOOD/GETTY IMAGES
இந்தப் பிரச்சினைகளில் தகவல் செல்லும் வேகமோ அல்லது எவ்வளவு பேரை அடைகிறது என்பதோ முக்கியமல்ல, ஆனால் குழுவில் ஒரே மாதிரி கருத்து கொண்டவர்களை வன்முறைக்காக அணி திரட்டுவது என்பது தான் விஷயம்.
சந்தேகத்துக்குரிய, தரம் குறைந்த தகவல்களைப் பரப்புவதற்கு உரிய தளமாகவும் இது உள்ளது. பெரும்பாலான குடிமக்கள் இதை அறிந்திருக்கிறார்கள்.
தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் தகவல்களை சிலர் எதிர்கொண்டிருக்கிறார்கள் அல்லது மிகவும் அருமையானதாகக் கருதப்படும் தகவல்கள் பரவுவதையும் கண்டிருக்கிறார்கள்.
அப்படி இருந்தாலும், இந்தியாவில் செய்திகள் மற்றும் செய்திகள் தொடர்பான கருத்தாடல்களுக்கும் - அதே சமயத்தில் அதிக அளவிலான போலிச் செய்திகள் பரவுவதற்கும், அதிக அளவில் பயன்படுத்தப்படும், அதிக அளவில் ஈடுபாட்டைக் கொண்டுள்ள தளமாக வாட்ஸப் இருக்கிறது.
இந்தக் கருத்தாடல்கள் அபூர்வமாகத்தான் முழு அளவில் பூதாகரமாகின்றன என்றாலும், புதிய கலந்துரையாடலை தொடங்குவதற்கோ அல்லது தற்போது நடைபெறும் கருத்தாடலில் பங்கேற்பதற்கோ, நிச்சயமாக தெரிந்தே பகிர்தல் நடைபெறுகிறது.
அதே சமயத்தில், கருத்தாடல்களின் எல்லைகள், அல்லது மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கிறது.
முகநூலில் இருப்பதைப்போல நெறிமுறை இல்லாதிருக்கலாம். ஆனால் பல குழுக்களில், அனைவருக்கும் பகிர்தல் குறித்து சொல்லப்படாத விதிகளின் கீழ் செயல்படுகின்றன.
குறிப்பிட்ட வகையான குழுக்களில், எதைப் பகிரலாம், எதைப் பகிரக் கூடாது என்று சில ஒப்புதல்கள் இருக்கின்றன. குழு விதிகளை மீறுவோரை நீக்குவதன் மூலம் குழுவை நிர்வகிப்பவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
குழுவுக்குப் பொருத்தமற்றவை என தாங்கள் கருதும் விஷயங்களை தனிப்பட்ட உறுப்பினர்களும் கண்காணிக்கிறார்கள்.
குழுவை உருவாக்கிய போது தெரிவிக்கப்பட்ட நோக்கம் அல்லது அதில் உள்ளவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் உள்ளன.
``நான் கன்யகுப்ஜ் சமாஜத்தை சேர்ந்தவன். ஒரே மாதிரி சிந்தனை, ஒரே மாதிரி நம்பிக்கைகள் உள்ளவர்கள் இதில் இருக்கிறார்கள். அதுபற்றி பல விஷயங்களை கவலைப்படாமல் பகிர்ந்து கொள்கிறோம். ராஜ்பூர் டாக்டர்கள் குழுவில் அதை நான் செய்வது கிடையாது'' (ஆண், 34, ராய்ப்பூர்)

பட மூலாதாரம், RAUL ARBOLEDA/AFP/GETTY IMAGES
``M : கிரிக்கெட் பற்றி மட்டும் தான் இதில் நீங்கள் கருத்தாடல் செய்வீர்களா?
R : ஆம். இப்போதைய பயணத்தில் தொடர்ச்சியாக வரும் மேட்ச்கள், நேரங்கள் பற்றி இது தகவல் தரும். டிராபியின் படம் போட்டிருக்கிறது. மோடியின் ஆதரவாளர்கள் சிலர் இந்தக் குழுவில் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவருக்கு எதிரான சிலர் இருக்கிறார்கள். இதுபற்றி அவர்கள் தொடர்ந்து சண்டைபோட்டுக் கொள்வார்கள். ஓரிரு முறை மட்டும் இங்கே நான் கருத்து பதிவிடுவேன். அது தொடர்ந்தால், இது கிரிக்கெட் குழு, கெஜ்ரிவால் அல்லது மோடி பற்றிய கருத்தாடலுக்கானது அல்ல என்று கூறி, அவர்களை குழுவின் நிர்வாகி (அட்மின்) அமைதிப்படுத்துவார். சில நேரங்களில் அவர்களுடைய வாக்குவாதங்கள் சூடாகும்போது அதிகாலை 1 மணி வரையில் செல்போனில் தகவல் வரும் சப்தம் வந்து கொண்டே இருக்கும். குழுவை நான் ஓசையற்றதாக (mute) செய்ய வேண்டியிருக்கும். அரசியல் பற்றி தனியாக கருத்தாடல் செய்வதற்கு ஒரு குழுவை நான் ஏற்படுத்தவில்லை'' (ஆண், 41, டெல்லி)
ஃபேஸ்புக்கை குடிமக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்?
இருந்தபோதிலும், ஃபேஸ்புக், தகவல்களைப் பரபும் தளமாகவே மிகவும் தெளிவாக சிந்தித்து உருவாக்கப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பகிர்தல் என்பதைவிட தகவல் பதிவை (newsfeed) முதன்மை தகவல் ஆதாரமாகக் கொண்டது.
பல்வேறு செய்திகள் மற்றும் செய்திகள் போன்ற நிறுவனங்களின் பக்கங்களை like செய்வதன் மூலம், ஃபேஸ்புக் பதிவை குடிமக்கள் தீவிரமாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஒரே மாதிரியான அல்லது தம்மைப் போன்றவர்களைக் கொண்ட குழுவினருக்கான தளமாக ஃபேஸ்புக் பார்க்கப்படவில்லை.
குறிப்பாக தனிப்பட்ட தொடர்பு பற்றி மிகவும் குறைவாக மட்டுமே அறிந்துள்ள நிலையில், `சேர்க்கப்பட்ட' பல தொடர்பாளர்கள் அதில் இருக்கிறார்கள்.
உங்கள் `நண்பர்களுடன்' மிக எளிதாக பகிர்ந்து கொள்வதை ஃபேஸ்புக்கின் இந்த இயல்பு எளிதாக்குகிறது - அதை தகவல் பரப்பும் தளமாக ஆக்குகிறது.
அதில் உள்ள ஒவ்வொரு கருத்தும் அவருடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஃபேஸ்புக்கில் செயல்பாடு அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
வாட்ஸாப்பில் அந்தச் செயல்பாடு இல்லை. தாங்கள் கூறும் அனைத்திற்கும் அல்லது வாட்ஸாப்பில் பதிவிடும் விஷயத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எதிர்வினைகள் கிடைக்காது என்று மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றாலும், ஃபேஸ்புக்கில் பதிவிடும் விஷயங்களுக்கு கருத்துகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அதற்காக ஏங்குகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஒரே மாதிரி சிந்தனையுள்ளவர்களின் குழுக்களாக இல்லை என்பதால், அந்த வகையில் உங்கள் நம்பிக்கைகளில் தீவிர மயக்கத்தை ஏற்படுத்தி, மற்றவர்களை உங்கள் நம்பிக்கைகளுக்கு மாற்றும் செயல்பாடுகளுக்கு அல்லது குறைந்தபட்சம் வலுவான எதிர்கருத்தை தூண்டுவதற்கு சில தடைகள் இருக்கின்றன.
இருந்தபோதிலும், வாட்ஸப்பில் இருந்து மாறுபட்டதாக, ஃபேஸ்புக் தளத்திற்கு `சுத்தமானது' என்ற பாராட்டு இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் தங்களுக்கு முதல்விருப்பமான இதழியல் ஆதாரங்களுடன் இணைந்து இருக்கிறார்கள் என்பதால், அதிக உண்மையான, நம்பகமான, குறைந்த அளவில் உள்ளூர் மற்றும் அதிக அளவில் தேசிய மற்றும் பிரேக்கிங் செய்திகளைத் தரும் தளமாகப் பார்க்கப் படுகிறது.
அப்படியானால் வாட்ஸாப் போல அல்லாமல், ஃபேஸ்புக்கில் Like மற்றும் கமெண்ட்கள் மூலம் செய்திகளைப் பற்றி ஓரளவுக்கு கலந்துரையாட வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய கருத்துகளுக்கு எதிரான சில கருத்துகளையும் கூட பார்க்கலாம்.
அதே சமயத்தில், ஃபேஸ்புக்கில் சுய தணிக்கை மற்றும் சுய பரிசோதனைக்கு வரம்பு இருக்கிறது. தங்களுடைய பதிவுகள் அல்லது கமெண்ட்களுக்கு சில வகையான எதிர்மறை கருத்துகள் வந்த அனுபவம் பெற்ற சிலர் இதைக் கூறினர்.
மேலும், முகநூலை ஒரு வகையான கூடுமிடமாகவோ அல்லது முழுமையான பொதுவெளியாக உருகாக்கப்பட்டதாகவோ மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற மாயையில் நாம் இருக்க வேண்டாம்.
கடைசியாக, ஃபேஸ்புக் நெறிமுறைகளில் எந்த விஷயம் வந்தாலும் (ஃபேஸ்புக் நிறுவனமே நடத்திய ஆய்வில், மக்கள் குறைந்தபட்சம் எதிர்கருத்துகளையும் சந்திக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது), எதிர்கருத்துகளில் ஈடுபாடு காட்டாமல் அவற்றை மேலெழுந்தவாறாக பார்க்கிறார்கள் அல்லது விட்டுச் சென்றுகிறார்கள், தவிர்க்க முடியாத நேர்வுகளில், தொடர்பில் இருந்து (unfollow) அல்லது நட்பில் இருந்து (unfriend) விலகுகிறார்கள்.
செயல்முறையில், வாட்ஸாப், ஃபேஸ்புக் என இரண்டுமே, உறுதிப்படுத்தலில் அதிக சார்பு நிலையுடன், ஓரளவுக்கு கருத்துகளை எதிரொலிக்கும் தளங்களாக உள்ளன.
இந்த இரண்டு தளங்களிலும், தீவிரமான, ஈடுபாட்டுடன் கூடிய கவனிப்பு இல்லாமல் விஷயங்களைப் பகிர்வது தான் முக்கிய அம்சமாக உள்ளது. அதாவது, ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதைப் பகிர்வதற்கும் இடையில் தீவிர தொடர்பு இருக்க வேண்டும் என்பது கிடையாது.
தொகுப்புரை: போலிச் செய்திகளின் விளைவுகள்
போலிச் செய்திகள் பரவுவதற்கான நிலை உருவாவதற்கு இந்தச் சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன என்பதாகத் தெரிகிறது என்று நாங்கள் கவனித்து அறிந்துள்ளோம்:
செய்திகளுக்கான மூல ஆதாரங்கள் மற்றும் வகைகளுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்துவிட்டது. குறிப்பாக அவையெல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும்போது இந்த இடைவெளி குறைவாக உள்ளது. `செய்திகளின்' ஒவ்வொரு வகையும் அதே இடத்தில் கிடைப்பதால், `போலிச் செய்திகளையும்' அங்கேயே அளிக்க முடிகிறது.
செய்திகள் மற்றும் தகவல்களுக்கு திறந்தவெளி களமாக உள்ள மாற்று ஆதாரங்களைத் நாட வைக்கிறது.
ஏறத்தாழ எல்லையில்லாத மூல ஆதாரங்கள் கொண்டுள்ள நிலையில், ஏறத்தாழ தொடர்ச்சியான பதிவுகள் கொண்டுள்ள நிலையில், செய்திகளை அறிவதில் அதிக வேகமான செயல்பாடு, குறைவான நேரம் செலவிடுதல் பழக்கத்தை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் பிரளயம் பங்களிப்பு செய்கிறது. எனவே ஒரு தகவலின் ஒரு பகுதியை தனிப்பட்ட நபர் ஆய்வு செய்வது குறைந்துவிட்டது.
வரக் கூடிய டிஜிட்டல் தகவல்களைக் கையாள்வதற்குக் குடிமக்கள் முயற்சி செய்யும் நிலையில், குவியும் டிஜிட்டல் தகவல்களின் உண்மைத்தன்மையை அவர்களால் ஆய்வு செய்ய முடியவில்லை என்பதால், சரிபார்த்தல் செய்யாமல் போலிச் செய்திகளைப் பகிர்வதை அனுமதிக்கும் பல பழக்கங்கள் மற்றும் உத்திகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்: தேர்ந்தெடுத்து பார்ப்பது, படங்களுக்கு முன்விருப்பத்தைக் காட்டுவது போன்றவை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












