பிரியங்கா காந்தி: உத்தர பிரதேசத்தில் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்

பட மூலாதாரம், AICC
பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் கிழக்கு உத்தர பிரதசேத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னவில் அவர் `மிஷன் உபி` என்ற பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தில் அவர் மூன்று நாட்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள முக்கிய தலைவர்களையும், மக்களையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் பாஜக ஆழமாக காலூன்றியுள்ள உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கால் பதிப்பதற்கான பிரசாரமாக இது கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் பிரியங்கா மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இது. அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
உத்தரபிரதசேத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கியிருப்பது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது டிவிட்டர் பக்கத்தையும் இன்று தொடங்கினார் பிரியங்கா காந்தி. அவர் தனது டிவிட்டர் கணக்கை தொடங்கிய சில நேரங்களில் அவரை 62 ஆயிரம் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












