மோதி வருகை: ஆதரவும், எதிர்ப்பும் - ஜம்மு முதல் தமிழகம் வரை டிரெண்டாகும் ஹாஷ்டாகுகள்

மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி திருப்பூர் வரும் சூழ்நிலையில் ட்விட்டரில் மீண்டும் #GOBackModi மற்றும் #TNWelcomesModi ஆகிய ஹாஷ் டாகுகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், மஹாராஷ்ட்ராவில் #TNWelcomesModi என்ற ஹாஷ்டாக் டிரெண்டிங் ஆவதுதான்.

இந்திய அளவில் முதல் இடத்தில் #GoBackModi என்ற ஹாஷ் டாகும், #GoBackSadistModi என்ற ஹாஷ்டாக் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஜம்மு முதல் தமிழகம் வரை

தமிழகம் மட்டுமல்லாமல், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கான்பூர், மும்பை மற்றும் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் ஆகிய இடங்களிலும் இந்த #GoBackModi ஹாஷ்டாக் டாப் 10 டிரெண்டிங்குள் வந்துள்ளது.

மோதி

பட மூலாதாரம், Twitter

சென்னை டிரெண்டிங்கில் காலை 7 மணி நிலவரப்படி #GoBackSadistModi ஹாஷ்டாக் இரண்டாவது இடத்தில் உள்ளது; மூன்றாவது இடத்தில் #TNWelcomesModi என்ற ஹாஷ்டாக் இருக்கிறது.

சனிக்கிழமை கெளஹாதி சென்ற மோதிக்கு அசாம் அனைத்து மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கருப்புக் கொடி காட்டின.

மோதி

பட மூலாதாரம், Twitter

இன்று தமிழகம், கர்நாடாகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மோதி வரவிருக்கும் சூழ்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் #GoBackModi ஹாஷ்டாக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

போலி கணக்குகள்

பாட் மூலம் (coding), போலிக் கணக்குகள் மூலமும் இவ்வாறு ஹாஷ்டாக் டிரெண்டிங் செய்யப்படுவதாக இரு தரப்பும் (மோதி ஆதரவு மற்றும் எதிர்ப்பு) குற்றஞ்சாட்டுகிறது.

மோதி

பட மூலாதாரம், Twitter

கடந்த முறை, எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக வந்த போது டிரெண்ட் செய்யப்பட்ட #TNWelComesModi , 80 சதவீதம் போலியானவை என்ற செய்திகள் வெளியானது.

ட்விட்டர் ட்ரெண்டிங் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

"குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தலைப்பைப் பற்றிய ட்வீட்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் போது, அதில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு ட்ரெண்ட்ஸ் பட்டியலில் நுழைகிறது" என்று ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சில வேளைகளில், ஒரு பிரபலமான ட்வீட்டின்/ஹேஷ்டேகின் பரவல் மக்கள் நினைக்கும் அளவுக்கு அதிகளவில் இல்லையென்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த உரையாடலின் வேகம் சராசரி நாளின் உரையாடலின் அடிப்படை நிலைக்கு நிகராக, விரைவாக அதிகரிக்கவில்லை என்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஒரு ஹேஷ்டேக் இடம்பெற விதிகள் உள்ளதா?

கணினி சார்ந்த அளவீடுகளின்படி, ட்விட்டரின் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவதற்குரிய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பிரபலத்தன்மை குறையும்போது அவை நீக்கப்படுகின்றன.

ஆனால், தனது தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெதிராக இருக்கும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் சேர்க்கப்படாது அல்லது நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :