#GoBackModi vs #TNWelcomesModi - மதுரை வரும் பிரதமர் மோதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பகிரப்படும் ஹாஷ்டேகுகள்

மோதி

பட மூலாதாரம், Hindustan Times

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் வரும் சூழலில் #GoBackModi என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. பலர் இந்த ஹாஷ்டேக்கில் ஒன்றிய மோதி அரசுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதே நேரம், #TNWelcomesModi என்ற ஹாஷ்டாகில் மோதிக்கு ஆதரவாகவும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மோதியின் வருகையும், ட்விட்டர் ட்ரெண்டிங்கும்

மோதி இன்று காலை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்.

GOBACKMODI

பட மூலாதாரம், Twitter

இந்த சூழலில் செயற்பாட்டாளர்களும் சில அரசியல் கட்சிகளும் மோதிக்கு எதிராக களம் இறங்கி உள்ளன. மோதிக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டாக்கில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

அதே சமயம், அவரை வரவேற்றும் #TNWelcomesModi என்ற ஹாஷ்டாக்கில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

ஹாஷ்டாக் அரசியல்

சர்வதேச அளவில் ஹாஷ்டாக்கை ட்ரெண்டாக்கி அரசியல் செய்யும் போக்கு நிலவி வருகிறது.

தங்கள் கருத்தை ஒரு ஹாஷ்டாக் மூலம் பரப்பி பிரசாரமோ அல்லது எதிர் பிரசாரமோ செய்து வருகின்றனர்.

தமிழகத்திலும் இந்த போக்கானது கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு முன்பாக இந்த ஹாஷ்டாக் பிரசார யுக்தியை பயன்படுத்த தொடங்கியது செயற்பாட்டாளர்கள்தான். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பின்னர்தான் அரசியல் கட்சிகள் இதில் கவனம் செலுத்த தொடங்கின என்கிறார் தமிழக அரசியல் போக்கை அவதானித்து வரும் மென்பொறியாளர் மற்றும் சூழலியலாளருமான பாலசுப்ரமணி.

பிரதமர் மோதி வருகையை ஒட்டி, ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேகுகள்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, பிரதமர் மோதி வருகையை ஒட்டி, ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேகுகள்.

சர்வதேச அளவில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த ஹாஷ்டாக் யுக்தி பயன்படுத்தப்படுகிறது என்கிறார் அவர்.

தமிழகத்தில் முந்தைய காலங்கள் பல ஹாஷ்டாக்குகள் சர்வதேச மற்றும் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளன. #IndiaBetraysTamilNadu, #gobackstalin, #Welcomestalin ஏன் சென்ற ஆண்டு மோதி தமிழகம் வந்த போது கூட #gobackmodi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது.

வல்லோன் வகுத்ததே வாய்க்கால் என்ற பிரச்சனை இதிலும் இருக்கிறது என்கிறார் பாலசுப்ரமணி.

அவர், "வலிமையான அரசியல் கட்சிகள் பெரும்பணம் செலவு செய்து தொழில்நுட்ப ரீதியாக சில தகிடுதத்தங்கள் செய்து தங்கள் கருத்தியலுக்கு சாதகமான ஹாஷ்டாக்கை ட்ரெண்டாக்குகின்றன" என்கிறார்.

கடந்தாண்டு பிபிசி மேற்கொண்ட ஆய்வில் செளதி அரேபியாவில் உள்ள சில நிறுவனங்கள் பணம் வாங்கி (Bot) கணக்குகள் மூலம் ட்விட்டரில் ட்ரெண்டாக்குவது தெரியவந்தது.

இந்தியாவிலும் இதற்காக சில நிறுவனங்கள் இயங்குகின்றன. அரசியல் கட்சிகளின் தொழில்நுட்ப பிரிவு அவர்களிடமிருந்து ஆலோசனை பெறுகின்றன என்கிறார் பாலசுப்ரமணி.

ட்விட்டர் ட்ரெண்டிங் எப்படி முடிவு செய்யப்படுகிறது?

மோதி

பட மூலாதாரம், Getty Images

"குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தலைப்பைப் பற்றிய ட்வீட்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் போது, அதில் பயன்படுத்தப்பட்ட தலைப்பு ட்ரெண்ட்ஸ் பட்டியலில் நுழைகிறது" என்று ட்விட்டர் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

சில வேளைகளில், ஒரு பிரபலமான ட்வீட்டின்/ஹேஷ்டேகின் பரவல் மக்கள் நினைக்கும் அளவுக்கு அதிகளவில் இல்லையென்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று ட்விட்டர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த உரையாடலின் வேகம் சராசரி நாளின் உரையாடலின் அடிப்படை நிலைக்கு நிகராக, விரைவாக அதிகரிக்கவில்லை என்றால் அது ட்ரெண்ட்ஸ் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் கூறுகிறது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஒரு ஹேஷ்டேக் இடம்பெற விதிகள் உள்ளதா?

கணினி சார்ந்த அளவீடுகளின்படி, ட்விட்டரின் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பெறுவதற்குரிய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பிரபலத்தன்மை குறையும்போது அவை நீக்கப்படுகின்றன.

ஆனால், தனது தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெதிராக இருக்கும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் சேர்க்கப்படாது அல்லது நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :