#gobackstalin VS #Welcomestalin: ட்விட்டரில் கடும் மோதல்

#gobackstalin VS #Welcomestalin: ட்விட்டரில் கடும் மோதல்

பட மூலாதாரம், M.K.STALIN/FACEBOOK

லண்டன் சென்றிருக்கும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை)நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திடீரென இன்று காலையில் #gobackstalin என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. இப்போது #Welcomestalin என்ற ஹாஷ்டாகை தி.மு.கவினர் ட்ரெண்ட் செய்யத் துவங்கியுள்ளனர்.

தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 9ஆம் தேதியன்று லண்டன் சென்றார். அவர் இன்று இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் #gobackstalin என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோதி, பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷா ஆகியோர் வருகை தந்தபோது அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக #gobackmodi, #gobackamitshah ஆகிய ஹாஷ்டாகுகள் ட்ரெண்டாகின. அதிலும் #gobackmodi வெகு நேரத்திற்கு உலக அளவில் ட்ரெண்டாகி, சர்வதேச செய்திகளில் இடம்பிடித்தது.

இந்த ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனதற்கு தி.மு.கவினரே காரணம் என பா.ஜ.கவின் தேசியச் செயலர் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், ஸ்டாலின் இன்று நாடு திரும்புவதையொட்டி #gobackstalin என்ற ஹாஷ்டாகை பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இந்திய அளவிலும் இந்த ஹாஷ்டாக் சிறிது நேரம் ட்ரெண்ட் ஆனது.

சில மணி நேரத்திற்குப் பிறகு சுதாரித்துக்கொண்ட தி.மு.கவினர் ஸ்டாலினை வரவேற்கும்விதமாக #welcomestalin என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்யத் துவங்கினர். இப்போது #gobackstalinஐ பின்னுக்குத் தள்ளி, #welcomestalin என்ற ஹாஷ்டேக் சென்னை அளவிலும் இந்திய அளவிலும் முன்னேறிவருகிறது. #gobackstalin ட்ரெண்டிங் பட்டியலைவிட்டே வெளியேறிவிட்டது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

#gobackstalinஐ முன்னணியிலேயே வைத்திருக்க, சிலர் தங்களது ஒரே ட்வீட்டில் பலமுறை #gobackstalin என்று அடித்து ட்வீட் செய்துள்ளனர்.

ஆனால், திடீரென ஸ்டாலினை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், எப்படி ட்ரெண்ட் ஆனது? "ஒரு விஷயம் தானாக ட்ரெண்ட் ஆவதற்கும் இதுபோல வேண்டுமென்றே ட்ரெண்ட் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மோடி இங்கே வந்தபோது, நாங்கள் #gobackmodiயும் அமித் ஷா வந்தபோது #gobackamitshahவும் ட்ரெண்ட் செய்தோம். #gobackmodi ஹாஷ்டாகுடன் ஏழு லட்சம் ட்வீட்கள் பதிவுசெய்யப்பட்டன. #gobackamitshah ஹாஷ்டாகுடன் இரண்டு லட்சம் ட்வீட்கள் பதிவுசெய்யப்பட்டன. ஆனால், #gobackstalin ஹாஷ்டாகுடன் வெறும் 20 ஆயிரம் ட்வீட்களே பதிவாகியிருக்கின்றன. அதற்கு எதிரான #Welcomestalin ஹாஷ்டாகுடன் இப்போது 60 ஆயிரத்திற்கும் மேல் ட்வீட்கள் பதிவாகியுள்ளன" என பிபிசியிடம் கூறினார் தி.மு.க. ஐடி பிரிவின் செயலாளர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்.

மோதியும், அமித் ஷாவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு கடும் கோபம் இருந்தபோது தமிழகத்திற்கு வந்தார்கள். அதனால், அந்த ஹாஷ்டாகை பயன்படுத்தி தி.முகவினர் மட்டுமல்லாது பலரும் ட்வீட்களைப் பதிவுசெய்தனர். ஆனால், தற்போது மு.க. ஸ்டாலினுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் ஹாஷ்டாகிற்கு என்ன நோக்கம் இருக்கிறது? அதனால்தான் விரைவிலேயே அது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்கிறார் தியாகராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :