வாதம் விவாதம்: ''மக்களை காயப்படுத்தி கொண்டு வரக்கூடிய திட்டம் வளர்ச்சி திட்டமா?''

பட மூலாதாரம், Getty Images
வளர்ச்சித் திட்டம் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். திட்டங்களைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டம் குறித்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் இந்தக் கருத்து ஏற்கத்தக்கதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.
''வளர்ச்சித்திட்டம் ஏழைகளுக்கானதாக, கீழ்த்தட்டு மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கானதாக இருக்கக்கூடாது. ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து, விவசாயத்தை அழித்து வரும் வளர்ச்சி தேவையில்லாதது. கண்ணை விற்று சித்திரம் வாங்க கூடாது'' என்று கருத்து தெரிவித்துள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்''.
''விவசாயத்தை காக்க, புவி வெப்பமயமாதலைத் தடுக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டங்கள் கொண்டுவரவேண்டும்'' என்ற கோரிக்கைகளை முன் வைக்கிறார் பெருமாள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
''வளர்ச்சி திட்டங்களை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை பயணத்தூரம் குறையும் என்பதற்காக எட்டு வழிசாலை திட்டம் கொண்டு வருவதாக சொல்பவர்கள் ஏன் சேது சமுத்திர திட்டதை நிறைவேற்ற மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வளர்ச்சி திட்டங்கள் பொதுவாக மனிதவளத்தை அதிகரிக்கதக்கதாக இருக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் திட்டங்கள் எதிர்காலத்தில் தமிழகத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது'' என பதிவிட்டுள்ளார் நெல்லை டி முத்துச்செல்வன்.

''மக்களை காயப்படுத்தி கொண்டு வரக்கூடிய திட்டம் வளர்ச்சி திட்டாமா? பசுமையை அழித்து ரோடு போட்டா அது, பசுமை ரோடு திட்டமா?."' என கேட்டுள்ளார் ப்ரடிஸ் ராணி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
''வளர்ச்சித் திட்டம் என்பது ஒன்றை அழித்து இன்னொன்றைக் கொண்டு வருவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம் என்பது மக்களுக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒரு சிலரின் நன்மைக்காக மட்டுமே இருக்கக் கூடாது'' என்பது சுப்புலட்சுமி எனும் நேயரின் கருத்து.
''வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பொது மக்களின் வாழ்க்கை முறை நசுக்கப்படுகிறது'' என்கிறார் பிரபாகரன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்