உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் 'இந்திய நகரம்'
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - `உலகின் பணக்கார நகரங்கள்`

பட மூலாதாரம், Getty Images
உலகின் பணக்கார 15 நகரங்கள் பற்றிய இன்ஃபோகிராஃபிக் செய்தியை வெளியிட்டு இருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. நியூயார்க், லண்டன், டோக்கியோ உள்ளிட்ட 15 நகரங்கள்தான், உலகின் 11 சதவீத தனியார் சொத்துகளை வைத்து இருப்பதாக அச்செய்தி விளக்குகிறது. இந்த பட்டியலில் இந்திய நகரமான மும்பை 12 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பட மூலாதாரம், Times of India
மேலும் அந்நாளிதழ், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முடிவை திமுக எடுத்து இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி கூறுகிறது. திமுக ஒரு சுற்றரிக்கை அனுப்பி இருப்பதாகவும், அதில் ஒருவர் ஒரு பதவி வகிக்க வேண்டும் என்று, ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் வகிப்பவர்கள் தாமாக பதவி விலக வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருப்பதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமணி - `இலங்கைக் குழப்பம்`

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டுமே தோல்வியைத் தழுவி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவுடனான ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி பெரும் வெற்றியடைந்திருக்கிறது. அதனால், இலங்கையில் மீண்டும் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தலையங்கம் எழுதி உள்ளது தினமணி நாளிதழ்.
தினமலர் - `நிதியா முக்கியம்?`

பட மூலாதாரம், தினமலர்
தி இந்து (ஆங்கிலம்) - 'இலங்கையில் தெலுகு பேசும் இனக்குழு'
இலங்கையில் தெலுகு பேசும் இனக்குழு கணிசமான எண்ணிக்கையில் வசிப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல் ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஆந்திர பிரதேச கிரியேடிவிட்டி மற்றும் கல்ச்சுரல் கமிஷன் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கர், அஹிகுண்டக எனும் தெலுகு பழங்குடி மக்கள் இலங்கையில் வசிக்கிறார்கள். இது தொடர்பாக ஆய்வு செய்ய விரைவில் மானுடவியலாளர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார்.
தினத்தந்தி
தமிழகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு அடுத்த மாதம் 5- ஆம் தேதி முதல் 3 நாட்கள் சென்னையில் நடக்க இருப்பதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறது தினத்தந்தி நாளிதழ். இந்த மாநாட்டை முதல் அமைச்சர் தொடங்கி வைத்து பேசுவார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றுவார் என்று விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












